Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 17, 2011

அஸ்ஸாமில் வெள்ளம் : ஒரு லட்சம் மக்கள் தத்தளிப்பு

தேஜ்பூர், ஜுலை 17 (டிஎன்எஸ்) கடந்த 2 நாட்களாக அஸ்ஸாம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள உள்ள நதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சோனிட்பூர், லக்கிம்பூர், தீமாஜி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 105க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. சுமார் 1.50 லட்சம் மக்கள் நீரில் தத்தளித்து வருகின்றனர்.

இந்த மாநிலங்களில் உள்ள நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததே இத்தகைய மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கி உள்ளன.
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...