டெகரான் : கடன் பாக்கி ரூ.22,500 கோடியை செலுத்த தவறினால், இந்தியாவுக்கு அடுத்த மாதம் முதல் கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தப்படும்ம் என ஈரான் திடீர் நிபந்தனை விதித்துள்ளது. நம்நாட்டின் பெட்ரோலிய பொருட்கள் தேவையில் பெரும்பகுதி, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி மூலமே ஈடுகட்டப்படுகிறது. சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாட்டில் இருந்து மத்திய அரசு அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. மாதத்துக்கு 1 கோடியே 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் ஈரானிடமிருந்து வருகிறது. இதற்காக செலுத்தப்படும் பணம் ஜெர்மனியின் மத்திய வங்கி வழியாக செலுத்தப்பட்டு வந்தது.
அணுசக்தி திட்டத்தில் ஈடுபட்டதால் ஈரானுக்கு சர்வதேச நாடுகள் தடை விதித்தன. அதனால், ஜெர்மனி வங்கி மூலமாக ஈரானுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பணம் செலுத்துவது தடைபட்டது. மாற்று வழியில் ஈரானுக்கு பணம் செலுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானுக்கு இந்தியாவின் கடன் பாக்கி ரூ.22,500 கோடியாக உயர்ந்தது.
இதுகுறித்து தலைநகர் டெகரானில் நேற்று தெரிவித்த ஈரான் எண்ணெய் அமைச்சக அதிகாரி ஒருவர், ÔÔகடன்பாக்கியை இந்தியா உடனடியாக செலுத்த வேண்டும். தவறினால், அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கச்சா எண்ணெய் அனுப்ப மாட்டோம்ÕÕ என்றார். இதுகுறித்து ஈரான் சென்ட்ரல் வங்கி கவர்னர் மகமூத் பஹ்மனி கூறுகையில், ÔÔபணம் வழங்கப்படாததற்கு வங்கி நடைமுறை காரணம் அல்ல, அரசியல் பிரச்னைதான் காரணம்ÕÕ என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...