Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 21, 2011

உள்ளாட்சி தேர்தல்: மேயர்கள்-நகரசபை தலைவர்களை நேரடியாக தேர்வு செய்ய சட்டம்; தமிழக அரசு முடிவு


உள்ளாட்சி தலைவர்களை நேரடியாக பொதுமக்களே தேர்வு செய்யும் முறை முன்பு இருந்து வந்தது.கடந்த தி.மு.க. ஆட்சியில் கவுன்சிலர்களே மாநகராட்சி மேயர், நகராட்சி, பஞ்சாயத்து தலைவர்களை தேர்வு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.
 
2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர்களே தங்கள் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்களை தேர்ந்து எடுத்தனர். இதன்படி சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் (தி.மு.க.), திருச்சி மேயர் சுஜாதா (காங்), மதுரை மேயர் தேன்மொழி (தி.மு.க.), சேலம் மேயர் ரேகாபிரியதர்ஷினி (தி.மு.க.), நெல்லை மேயர் ஏ.எல்.சுப்பிரமணியம் (தி.மு.க.), கோவை மேயர் வெங்கடாசலம் (காங்), ஆகியோரை பெரும்பான்மை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்தனர்.
திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துக்குடி நகரசபைகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இங்கு நகரசபை தலைவர்கள் மேயர்களாகி இருக்கிறார்கள்.
 
பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் கவுன்சிலர்கள் மூலமே தலைவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். கவுன்சிலர்கள் மட்டுமே பொதுமக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
 
இந்த முறையை மாற்றி பொதுமக்களே நேரடியாக மேயர், நகரசபை தலைவர்கள், நகர பஞ்சாயத்து தலைவர்கள், ஆகியோரை தேர்ந்து எடுக்கும் முறையை கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மீண்டும் மேயர், நகரசபை தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்து எடுக்கும் முறை கொண்டு வரப்படுகிறது.துணைமேயர், துணைத் தலைவர்களை மட்டுமே கவுன்சிலர்கள் தேர்ந்து எடுப்பார்கள்.
இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
 
இதற்கான சட்டத்தை உடனே கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் 4-ந்தேதி தொடங்க இருக்கும் “பட்ஜெட்” கூட்டத் தொடரின்போது இதற்கான புதிய சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
மேயர் மற்றும் உள்ளாட்சி தலைவர்களை பொதுமக்களே நேரடியாக தேர்ந்து எடுக்கும் சட்டம் நிறைவேற்றப் பட்ட பிறகு அதை நடை முறைக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் முறைப்படி வெளியிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
அக்டோபர் 3-வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த தேர்தலில் புதிய முறையில் மேயர்கள் மற்றும் உள்ளாட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...