டெல்லியில் உள்ள திகார் ஜெயில்தான் நாட்டில் உள்ள ஜெயில்களிலேயே மிகப்பெரியதாகும். இங்குதான் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த ஜெயிலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன.
கைதிகள் விபரம் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு அறிக்கை வெளியிடப்டுவது வழக்கம். அதன்படி நடப்பு 2011-ம் ஆண்டுக்கான ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் கடந்த ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 2,751 பேர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் தண்டனை கைதிகளில் 46 சதவீதம் பேர் கொலைக் குற்றவாளிகள். ஆண் தண்டனை கைதிகளில் 33.5 சதவீதம் பேர் மட்டுமே கொலைக் குற்றவாளிகள் ஆவர்.
கொலை முயற்சி வழக்கில் 6.73 சதவீதம் பெண்களும் 5.93 சதவீதம் ஆண்களும் தண்டனை பெற்றுள்ளனர். கடத்தல், தலைமறைவு, வரதட்சணை சாவு, போதை மருந்து கடத்தல் ஆகிய வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளிலும் பெண்களே முன்னணியில் உள்ளனர்.
பெண் தண்டனை கைதிகளில் பெரும்பாலானோர் (58 சதவிகிதம்) 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள்.
இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...