கடந்த 1954-ம் ஆண்டு இந்தியா தான் எவரெஸ்ட் சிகரம் 8,848 மீட்டர் உயரமுடையது என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளயிட்டது. இன்றுவரை அந்த அளவீடு தான் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் சீனாவோ எவரெஸ்ட் சிகரம் 8,844 மீட்டர் என கூறி குழப்புகிறது. இது குறித்து நேபாள் நாட்டின் நிலச்சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கோபால் கிர், கூறியதாவது: கடந்த ஆண்டு நேபாள், சீனா இடையே எல்லைப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சீனா பிரதிநிதிகள் தான் எவரெஸ்ட் சிகரத்தின் சரியான உயரம் 8,844 என கூறினர்.
முதன்முதலாக 1856- ஆம் ஆண்டு தான் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் அளவீடு செய்யப்பட்டது. இது அடி அளவீட்டின் படி 29 ஆயிரத்து 29 அடி(29029 ) என அளவிடப்பட்டது. எனினும் தற்போதைய நவீன தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட நிலையில், மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தினை துல்லியமாக அளவிட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன் பிறகே இந்தியா கூறிய அளவு சரியானதா?, சீனா கூறிய அளவீடு சரியானதா? என குழப்பத்திற்கு விடை கிடைக்கும். இவ்வாறு கோபால் கிர் கூறினார். கடந்த 1953-ம் ஆண்டு மே மாதம் 29- ஆம் ஆண்டு முதன்முதலாக ஷெர்பா டென்சி்ங், எட்மாண்ட் ஹிலாரி ஆகியோர் எவரெஸ்ட சிகரத்தை அடைந்தனர். இதுவரை மொத்தம் 3 ஆயிரம் பேர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...