Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 27, 2011

இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி : சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பரபரப்பான வாதம் ஆரம்பமானது. ‘‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு வக்கீல் வாதாடினார். இன்றும் வாதம் தொடர்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது. ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். வரும் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தமிழக அரசின் மனுவுக்கு பெற்றோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும். கடந்த 2 மாதங்களாக மாணவ, மாணவிகள் எந்த புத்தகத்தையும் படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். எனவே உடனே சமச்சீர் புத்தகத்தை வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கூடாது’’ என்று அதில் கூறியுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் சமச்சீர் கல்வி வழக்கின் இறுதி விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சவுகான் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆஜராகி, ‘‘சமச்சீர் கல்வியை நடப்பு ஆண்டிலேயே அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. தேசிய அளவிலான தரத்துடன் சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உயர்மட்டக் குழு அமைத்து இதுகுறித்து ஆராய வேண்டியுள்ளது. இதற்கு போதிய கால அவகாசம் தேவை. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சமச்சீர் பாடபுத்தகங்கள் தரமானதாக இல்லை’’ என்று வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு , சமச்சீர் கல்வியை தள்ளிவைத்ததாக கூறியுள்ளீர்கள். அதை எந்த ஆண்டு அமுல்படுத்துவோம் என்று கூறவில்லை; அதே சமயம், சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளை கூறிவிட்டு, 2004ம் ஆண்டு பாடப்புத்தகத்தை அமல்படுத்த திட்டமிடுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு விரிவாக நாளை (இன்று) பதில் அளிப்பதாக அரசு வக்கீல் கூறினார். இதை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணை நாளை (இன்று) தொடரும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது சமச்சீர் கல்விக்கு ஆதரவாக வக்கீல்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், கே.பாலு , கங்குலி, விடுதலை ஆகியோர் ஆஜராகி, சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்றனர். தமிழக அரசு சார்பாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...