டெல்லி:தற்போது நடைமுறையில் உள்ள மிகவும் குறைந்த மதிப்புடைய நாணயமான 25 பைஸா வெள்ளிக்கிழமை முதல் நமது நினைவுகளில் மட்டுமே தஞ்சம் புகும். ஐந்து, பத்து, இருபது பைஸா நாணயங்களை தொடர்ந்து 25 பைஸா நாணயமும் நினைவுகளில் மட்டும் இடம் பெறப்போகிறது.
பணவீக்கம் அதிகரித்துள்ள சூழலில் 25 பைஸா நாணயம் மதிப்பை இழந்துவிட்டதால் அதனை வாபஸ் பெறுவதற்கு காரணமாக கூறப்படுகிறது. வங்கிகளிலும், ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவின் அலுவலகங்களில் இருந்தும் வியாழக்கிழமை மாலைக்குள் 25 பைஸா நாணயங்களை மாற்றலாம். 25 பைஸா நாணயத்தின் பண மதிப்பை விட அதிகமானது அதன் தயாரிப்பு செலவாகும். 25 பைஸா வாபஸ் பெறுவதை தொடர்ந்து இனி 50 பைஸா நாணயம் இந்தியாவில் மிக மதிப்பு குறைந்த நாணயமாகும். பொருட்களின் தயாரிப்பு விலையிலும் இதன் அடிப்படையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...