Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 28, 2011

இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது

மணிலா:இவ்வாண்டிற்கான ரமண் மகசேசே விருதை வென்றவர்களில் இரண்டு பேர் இந்தியாவைச் சார்ந்தவர்களாவர்.

ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசவிருது ஆண்டுதோறும் விமானவிபத்தில் இறந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமண் மகசேசேவின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.

1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருது ஆசிய நாடுகளில் மனித மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காக பாடுபட்டோருக்கு அளிக்கப்படுகிறது. இவ்விருது ஆசியாவின் நோபல் என அழைக்கப்படுகிறது.

இவ்வாண்டு இவ்விருது வழங்கப்பட்ட 6 நபர்களில் இரண்டுபேர் இந்தியர்களாவர்.
மஹராஷ்ட்ரா மாநிலத்தில் ஏழைகளுக்கு உதவும் விதத்தில் சிறுகடன் உதவியை அளித்துவரும் நிலீமா மிஷ்ராவும், சூரிய சக்தியிலான விளக்குகளின் உபயோகத்தை அனைத்து மக்களும் பயன்பெற பாடுபடும் பொறியாளர் ஹரீஷ் ஹாண்டேவும் இவ்விருதை பெற்றுள்ள இந்தியர்களாவர்.

நவீன தொழில் நுட்பத்தின் உதவியுடன் இரண்டுபேரும் தங்களது நாட்டிற்கு பாராட்டும் விதமான பணிகளை ஆற்றியதாக விருதுக் கமிட்டி மதிப்பீடுச் செய்துள்ளது.

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய பள்ளியை நிறுவி பெண் கல்விக்காக பாடுபடும் ஹசனைன் ஜுவைனி, இந்தோனேஷியாவில் மைக்ரோ நீர்மின்சக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்திய ட்ரை மம்புனி, கம்போடியாவில் ஜனநாயகத்திற்காக போராடி வரும் கோல் பன்ஹா ஆகியோர் இவ்விருதை பெற்ற இதர நபர்களாவர்.

ஆச்சார்யா வினோபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், அன்னை தெரஸா, டி.என்.சேசன், கிரண் பேடி ஆகியோர் இதற்கு முன் இவ்விருதை பெற்ற இந்தியர்களாவர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...