Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 26, 2011

பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார் இந்தியா & தென்கொரியா அணுசக்தி ஒப்பந்தம்

சியோல் : இந் தியா & தென்கொரியா இடையே அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தென்கொரிய பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தென்கொரியா, மங்கோலியா நாடுகளில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் ஒரு வார அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக்குடன் அவரது மாளிகையில் நேற்று விரிவான பேச்சு நடத்தினார்.

20 நிமிடங்கள் நீடித்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளின் உயரதிகாரிகள் குழுவினர் இடையே ஒரு மணி நேர பேச்சு நடந்தது. இந்த சந்திப்புகளின்போது அணுசக்தியை அமைதியான தேவைகளுக்கு பயன்படுத்தும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதிபாவும், லீயும் கையெழுத்திட்டனர். அணுசக்தி சப்ளை குழு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் உட்பட அணுசக்தி தொடர்பான பொருட்கள் சப்ளைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2008ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு நேற்று வரை தென்கொரியாவையும் சேர்த்து இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
முன்னதாக, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா, மங்கோலியா, கஜகஸ்தான், அர்ஜென்டினா, நமீபியா ஆகிய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்துள்ளது. தென்கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அந்நாட்டுக்கு தேவையான மொத்த மின்சாரத்தில் 35 சதவீதம் பெறப்படுகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு அணுமின் உற்பத்திக்கான நவீன தொழில்நுட்பங்களை அளிக்க தென்கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது. அணுசக்தி ஒப்பந்தம் தவிர இருநாடுகளிலும் வசிக்கும் சகநாட்டு மக்களின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிர்வாக ஏற்பாடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், இருநாடுகள் இடையே விரைவான தகவல் பரிமாற்றத்துக்கான ஒப்பந்தம் ஆகியவை ஏற்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...