Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 27, 2013

உலக வர்த்தக கண்காட்சி 2020 : துபையில் நடைபெறுகிறது!!

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்போ-2020 துபையில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்றுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது.

மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்றன, இறுதியாக நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி துபாய் முதல் இடம் பிடித்தது.168 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Bureau International des Expositions என்ற அமைப்பு 2020ம் ஆண்டில் World Expo 2020 நடக்கப் போகும் நகரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்தியது. பாரிசில் OECD சென்டரில் வைத்து இந்தத் தேர்தலில் மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இதனால் அமீரகம் எங்கும் இந்த வெற்றியை வரவேற்று கொண்டாடங்கள் நடைபெறுகின்றன. 2020ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உலக வர்த்தக கண்காட்சி மூலம் மத்திய கிழக்கு

நவம்பர் 26, 2013

பயிர் காப்பீடு கோரி மறியல்: 110 விவசாயிகள் கைது!

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 110 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழகஅரசே காப்பீடு தொகையைச் செலுத்தியது. இதில் 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், 50 சதவீதத்துக்கு கீழ் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 1109 ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் வீதம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி பகுதிக்கு ரூ.4 லட்சத்துக்குக் குறைவான தொகையை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத் தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி

காட்டுமன்னார்கோவிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் குவிந்தன!

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் வரை 18 வயது நிரம்பியவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன்படி எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர், மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளித்தனர். இணைய தளத்திலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்தில்

நவம்பர் 22, 2013

காட்டுமன்னார்குடியில் பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்!

காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவானந்தம் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைபிள்ளை, குழந்தைவேலு, ஹரிகரன் ஆகியோர் அடங்கிய சுகாதாரக்குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பஸ் நிலையம், கச்சேரி தெரு பகுதிகளில் புகையிலை எதிர்ப்பு வாசக விளம்பர பதாகைகள் வைக்காத 12 கடை உரிமையாளர்களுக்கு ரூ.1700–ஐ அபராத தொகை வசூலித்தனர். அதைத்தொடர்ந்து, பொது இடங்களில் புகைபிடித்த 3 நபர்களுக்கு தலா ரூ.300 வீதம் அபராத தொகை வசூல் செய்தனர்.
source:தினத்தந்தி

நவம்பர் 21, 2013

ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி!

நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud. இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.

முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார். வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக ‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.

அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன் –என்றார் அவர். ‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!
thanks:khanbaqavi.blogspot

நவம்பர் 17, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது. இதேபோல் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. இதன்மூலம் பாரத ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

மிக குறைந்த வயதில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் சச்சின்

நவம்பர் 16, 2013

கடலூர் மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுவடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் கிர்லோஷ்குமார் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்குவதற்காக பள்ளிக்கூடம், புயல்பாதுகாப்பு மையம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை சீரமைத்து

நவம்பர் 14, 2013

அப்துல் நாஸர் மஃதனியை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை!

புதுடெல்லி: மூன்று ஆண்டுகளாக அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி. கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லியில் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தான் செய்த குற்றம் என்னவென்று தெரியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் சின்னமே அப்துல் நாஸர் மஃதனி என்று ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனின் பிரதிநிதி மனீஷா சேத்தி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் ரிக்கார்டில் எவ்வித குற்றங்களும் செய்ததாக பதிவு செய்யப்படாத 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிமி இயக்க உறுப்பினர் என்பதுதான் இவர்கள் மீதான குற்றம் என்று அவர் கூறினார்.

ஜோடிக்கப்பட்ட வழக்குகளின்

வேகமாக பரவும் கோமாரி நோய் ஆட்சியர் அவசர ஆலோசனை!

காட்டுமன்னார்கோவில், : கடலூர் மாவட்டத்தில் கால்நடைகள், கோமாரி நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் வாய், கால் உள்ளிட்ட பகுதியில் புண்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது. இதனால் கால் நடைகள் உணவுகளை சாப்பிட முடியாமலும், நடக்க முடியாமலும் உள்ளன. தற்போது மருந்து, மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர், தனியார் மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்கி செல்கின்றனர். சிதம்பரம்: சி.வங்கார மாரி, காட்டுக்கூடலூர், நாஞ்சலூர், வடமூர், செட்டிமுட்டு, இளநாங்கூர், சிவாயம், மணலூர், சிலுவைபுரம், பூலமேடு, வல்லம்படுகை, அம்மாபேட்டை,

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதிப்படும் பொதுமக்கள்!

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மீண்டும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தினமும் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருந்த காலம் போய் கடந்த சில ஆண்டுகளாக மின்சார தடை என்ற நிலை தொடர் கதையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

குறிப்பாக சமையல் வேலைகளை செய்து வரும் இல்லத்தரசிகள் மின் சாதனங்களை பயன்படுத்த வழியின்றி தவிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வருண பகவானும், வாயு பகவானும் கருணை காட்டியதால் காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி அதிகரித்து கடந்த சில மாதங்கள் வரை மின்சார தடை இல்லாத நிலை இருந்தது. இதனால் இனிமேல் மின்சார தடை இருக்காது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில்

நவம்பர் 12, 2013

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு: இரண்டு முக்கிய காவி பயங்கரவாதிகள் கைது!

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சதியில் தொடர்புடைய ராஜு சாவோ என்பவனை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அக்டோபர் 27-ல் பங்கேற்ற பீகார் மாநிலத்தின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயாமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு பெரும் திருப்பமாக குண்டு வெடிப்பை நிகழ்த்திய காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கோபால்குமார் கோயல், விகாஷ் குமார், பவண் குமார், கணேஷ் குமார் ஆகியோர் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு