Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2012

மேலாண்மை படிப்புகளுக்கான CAT தேர்வு தேதி அறிவிப்பு...


உலக அளவில் புகழ் பெற்றஇந்தியாவின் தலை சிறந்த மேலாண்மைகல்வி நிறுவனங்களாக கருதப்படும்தமிழகத்தின் திருச்சி உள்படஇந்தியாவில் 13 இடங்களில்  இயங்கி வரும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப்மேனேஜ்மென்ட்(IIMநிறுவனங்கள் நடத்தும் அகில  இந்திய பொதுநுழைவுத் தேர்வான CAT தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

Indian Institute of Managementன்  மேனேஜ்மென்ட் படிப்புகள் சர்வதேசத் தரம் வாய்ந்தவை.எனவே கடுமையான போட்டியை உள்ளடக்கியதாக இத்தேர்வு இருக்கும். இத்தேர்வில் வெற்றி பெற்று IIM  நிறுவனங்களில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களை சர்வதேச நிறுவனங்கள் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. மேலும் இவர்களுக்கு மாதம் லட்சங்களில் சம்பளத்தை அள்ளி தர தயாராக இருகின்றனர்.
 
இந்த தேர்வானது அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 6 ஆம் தேதி வரை நடத்தப்படும்.பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள்  இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். தற்போது இறுதியாண்டு பயில்பவரும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பதாரர்கள் அனைவரும் தற்போது பயன்பாட்டில் உள்ளஇமெயில் முகவரி ஒன்றைப் வைத்திருப்பது அவசியம். Axis Bankன்குறிப்பிட்ட கிளைகளில் CAT-2012 Voucher என்று கேட்டு வாங்க வேண்டும்.ஜூலை 30 தேதி  முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை இது கிடைக்கும்இதன்விலை ரூ.1600. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.800 மட்டுமேஎத்தனைIIMகளுக்கு ஒருவர் விண்ணப்பித்தாலும் ஒரே ஒரு வவுச்சரைப்வாங்கினால் போதுமானது.. யாருடைய பெயரில் இது வாங்கப்படுகிறதோஅவர் மட்டுமே இதை பயன்படுத்த முடியும்.
 
வவுச்சரை வாங்கியப் பின்பு www.catiim.in என்னும் இணைய தளத்திற்குச்சென்று ஆன்லைனில் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.  CATதொடர்பான அனைத்து விவரங்களையும் இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்இந்த தேர்வானது இந்தியா முழுவதும் 36மையங்களில் நடைபெறும்.

முக்கிய தேதிகள்
நிகழ்வுதேதிமற்ற தகவல்கள்
ெல்ப்லைன்26 ஜூலை 2012 1-800-102-2256
விளம்பர தேதி26 ஜூலை 2012முக்கிய செய்தி தாள்களில்
வவுச்சர் விற்பனை நாட்கள்30 ஜூலை – 17 செப்டம்பர் 2012Axix Bankil பணம் செலுத்துதல் மற்றும் வவுச்சர் பெறுதல்
பதிவு செய்யும் நாட்கள்30 ஜூலை – 19 செப்டம்பர் 2012பதிவு செய்ய வலைத்தளம் www.catiim.in
பரீட்சை தேதி11 அக்டோபர் – 6 நவம்பர் 2012 பரீட்சை நடைபெறும் சென்டர்கள் பற்றிய தகவல்கள் அறிய www.catiim.in
ரிசல்ட் தேதி9 ஜனவரி 2013www.catiim.in
 
thanks  :அஜ்மல், கோவை

அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் போடோ விடுதலைப் புலிகள்

குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள்.
கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.
ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.
டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.
“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.
கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.

பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.

குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள்

ஜூலை 30, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!


நெல்லூர்: ‌டெல்லியில் இருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் உடல் கருகி பலியாயினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ்-11 கோச்சில் இருந்த மொத்தம் 72 பேரில் இன்னும் சிலர் தீயில் சிக்கி இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

டெல்லியில் இருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர். 

நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார். 

சிறப்பு ரயிலுக்கு ஏற்பாடு?
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயில் விடப்பட்டுள்ளது. சென்ட்ரலில் காலை  10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது. மேலும், சென்ட்ரலில் இருந்து கிளம்பும் சிறப்பு ரயிலில் பாதிக்கப்பட்டோரின் உறவினர் இலவசமாக அழைத்து செல்லப்படுவர் எனவும் கூறப்பட்டு உள்ளது. 

ரயில் விபத்து முதல்வர் விரைகிறார்

ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ஹெலிகாப்டரில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கிறார், ஜதராபத்திலிருந்து சென்னை வந்து பின்னர் கார் மூலம் நெல்லூர் செல்கிறார். நெல்லூர் மாவட்ட ஆட்சியர், ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்.

விபத்து எப்படி?
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூர் அருகே வரும் போது எஸ்-11 பெட்டியில் தீப்பிடித்தது. நெல்லூர் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தீப்பிடித்தது. எஸ்-11 கோச்சில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தால், ஐதாரபாத்தில் இருந்து சென்னை வர வேண்டிய சார்மினார் எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்து சேரும் என கூறப்பட்டு உள்ளது. 
அதிகாலையில் தீ விபத்து

விபத்துள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சனி கிழமை டெல்லியில் இரவு 10 மணியளவில் புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூரை கடந்ததும் விபத்துக் கண்டறியப்பட்டுள்ளது. விபத்தை அறிந்ததும் பயணிகள் ரயிலில் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தியுள்ளனர். தீ பிடித்த படுக்கை வசதிக் கொண்ட 2ஆம் வகுப்பு  பயணிகள் இருக்கையில் 72 பேர் இருந்துள்ளனர். விபத்தால் 7.15 வர வேண்டிய ரயில் 11.45க்கு வரும் என

சிதம்பரத்தில் சிறுநீரக நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை

சிதம்பரம், : சிதம்பரத்தில் சிறுநீரக நோய்களுக்கு சென்னை சிறுநீரக மருத்துவ நிபுணர் இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் வேளச்சேரி எக்செலண்ட் கேர் மருத்துவமனையில் மூத்த சிறுநீரக மருத்துவராக பணிபுரியும் டாக்டர் நடராஜன் வருகின்ற 5-ம் தேதி ஞாயிறு காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் சிறுநீரக நோய்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்குகிறார். சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு அல்ட்ரா சவுண்ட் சோதனை உள்பட இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆலோசனை பெற விரும்புவர்கள் வருகின்ற 3-ம் தேதிக்குள் பள்ளி அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை காமராஜ் கல்வி நிறுவனங்களின் சார்பாக முன்னாள் மேலவை உறுப்பினர் லட்சுமிகாந்தன் செய்து வருகிறார்.
-Dinakaran

அஸ்ஸாம் கலவரம்:இந்திய குடிமக்களை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரிக்க முயற்சி! – எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:அஸ்ஸாம், உ.பி மாநிலங்களில் வெடித்து கிளம்பிய கலவரங்கள் குறித்து சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளது. வகுப்புவாத கலவரங்களை குறித்து விசாரணை நடத்த நீதி விசாரணை கமிஷனை நியமிக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ தேசியதலைவர் இ.அபூபக்கர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ‘இரு கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள் ஆவர். மாநில அரசு கற்பனை எண்ணத்தை கைவிட்டு நிலைமைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அஸ்ஸாமில் செயல் திறன் இல்லாத முதல்வரை மாற்ற காங்கிரஸ் கட்சி தயாராக வேண்டும்.

 மறுவாழ்வு நடவடிக்கைகளை உறுதிச்செய்யும் வரை கலவரம் பாதித்த பகுதிகளை ராணுவத்திடம் மத்திய அரசு ஒப்படைக்கவேண்டும். மத்திய அரசு மெளனம் சாதித்தால் கலவரம் தேசத்தின் இதர பகுதிகளுக்கும் பரவி விடும். பா.ஜ.க மற்றும் சிவசேனாவுடன் ஒப்பிடுகையில் சற்றும் வித்தியாசம் இல்லாத காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களின் பாதுகாவலன் என கூறுவது கவலைக்குரியது. திப்ருகர்(Dibrugarh), கோலாகட்(Golaghat), ஸிப்ஸாகர்(Sibsagar), தின்சூகியா(Tinsukia), ஜோர்ஹட்(Jorhat) ஆகிய மாவட்டங்களில் தொழிலாளி வர்க்கத்தினரை வங்காளதேச குடியேற்றக்காரர்களாக சித்தரித்து கொடுமைப்படுத்துகிறார்கள். அப்பர் அஸ்ஸாமில் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள்.

 கலவரத்தை தடுக்க அஸ்ஸாம் ஆளுநர் முன்வரவேண்டும். பங்களாதேஷ் குடியேற்றக்காரர்களுக்கு எதிரான தாக்குதல் என கூறி அஸ்ஸாம் கலவரத்தை சாதாரணமாக மாற்ற முயற்சிக்கின்றார்கள். பெரும்பாலான மக்கள் பல தசாப்தங்களாக இப்பகுதிகளில் வாழும் இந்திய குடிமக்கள் ஆவர். உத்தரபிரதேச மாநிலத்தில் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள சமாஜ்வாதி கட்சி மாநிலத்தில் மிகப்பெரிய சிறுபான்மை மக்களின் சொத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதில் தோல்வியை தழுவியுள்ளது. அகிலேஷ் யாதவின் 100 நாட்கள் ஆட்சியில் கோஸிகலான், பிரதாப்கர், பரேலி ஆகிய மூன்று இடங்களில் வகுப்பு வாத கலவரங்கள் நடந்தேறியுள்ளன.

2014-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில்

சம்பா பருவ விதை நெல் மானிய விலையில் விற்பனை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதி சம்பா பருவ விதை நெல் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு சம்பா பருவத்திற்கு காட்டுமன்னார்கோவில் பகுதிக்குத் தேவையான விதை நெல் மானிய விலையில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில், திருமுட்டம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சி.ஆர் 1009, (பொன்மனி) பி.பி.டி., ஆந்திரா பொன்னி ஆகிய ரகங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் வாங்கி வேளாண் துறையின் நவீன தொழில் நுட்பம், திருந்திய நெல் சாகுபடி செய்து செலவினங்களை குறைத்து அதிக மகசூல் பெற வேளாண் துறை வழி காட்டுதலை பின்பற்றி பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் கனகசபை தெரிவித்துள்ளார்.
-DM

ஜூலை 26, 2012

உலக மக்கள்தொகையை மிஞ்சும் செல்போன்கள்

ஜூலை 26: உலகில் மக்கள்தொகையை விட மொபைல்போன் களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகி விடும் என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. மொபைல்போன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி பார்த்தால், உலக மக்கள் தொகையான 700 கோடியை, மொபைல்போன்களின் எண்ணிக்கை விரைவில் தாண்டும் என தெரிகிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

 உலகம் முழுவதும், மொபைல் போன்க ளில் பிரிபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கடந்த 2000ஆம் ஆண்டில் நூறு கோடியாக இருந்தது. இது 2012ஆம் ஆண்டில் 600 கோடியை தாண்டியுள்ளது. அவற்றில் 500 கோடி வாடிக்கையாளர்கள், வளரும் நாடுகளில் வசிப்போர். 2000ஆம் ஆண்டில் பத்து பேருக்கு ஒரு செல்போன் என்ற வீதத்தில் செல்போன்களின் எண்ணிக்கை இருந்தது. அதுவே 2011ஆம் ஆண்டு இறுதியில் 10 பேரில் 8 பேரிடம் செல்போன் இருக்கும் அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் உலக வங்கியின் உறுப்பு நாடுகளில் செல்போன் பயன்பாடு வேகமாக வளர்ந்துள்ளது. அதிலும் 50 சதவீத நாடுகளில், அதாவது 90 நாடுகளில் நூறு சதவீத அளவில் செல்போன் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. எனினும், ஏராளமானோர் 2 அல்லது 3 செல்போன் வைத்திருக்கின் றனர்.

 அதாவது, சிக்கனத்துக் காக அதிக சலுகை தரும் நிறுவனத்தின் சிம்கார்டை யும், இன்கமிங் கால்களுக்கு மட்டும் இன்னொரு சிம் கார்டையும் பயன்படுத்துகின்றனர். எனவே, செல்போன் பயன்பாட்டு

ஜூலை 24, 2012

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து விதி மீறுவோருக்கு ஸ்பாட் பைன் அமலுக்கு வந்தது

கடலூர், : போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது. செல்போன் பேசியபடியே வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட விதிமீறலில் ஈடுபட்டோருக்கு அபராதம் விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்துகளை தவிர்க்க வும், விலை மதிக்க முடியாத மனித உயிர்களை காப்பாற்றவும், போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமுறை களை மீறும் 34 விதமான குற்றங்களுக்கு ஸ்பாட் பைன் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் பின்பற்றப்பட்டு வந்த இந்த முறை தற்போது முதன் முறையாக கடலூர் மாவட் டத்திலும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 34 வித குற்றங்கள்:

பதிவு செய்யாமல் வாகனங்களை ஓட்டினால் முதல் முறை ரூ. 2, 500 ம் இரண்டாம் முறையாக ரூ 5 ஆயிரமும் அபராதம்.

 காப்பீடு செய்யாமல் வாகனங்களை ஓட்டினால் இரு சக்கர வாகனங்களுக்கு முதல் முறை ரூ. 500 ம், சொந்த வாகனத்திற்கு ரூ. 700, போக்குவரத்து வாகனத்திற்கு ரூ. 1000, இரண்டாம் முறையாக அனைத்து வாகனங்களுக் கும் ரூ. 1000 மும் அபராதம்.

அளவிற்கு அதிகமாக எடை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு ரூ. 2 ஆயிரம் மற்றும் கூடுதலாக எடை டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் அபராதம்.

செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுவது, ஆவணங்களின்றி வாகனங் கள் ஓட்டுவது, தலை கவசமின்றி ஓட்டுவது., போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது, வயது வரம்பினை மீறி சிறுவர் சிறுமியர் வாகனங்களை ஓட்டுவது போன்ற குற்றங்களுக்காக முதல் முறையாக ரூ.100ம் இரண்டாவது முறையாக ரூ. 300ம் அபராதம்.

உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவது, சாலையில் அனுமதியின்றி சோதனையோட்டம் நடத்துவது, அனுமதியின்றி வாகனங்களின் வடிவமைப்பை மாற்றுவது, பொய்யான தகவல்களை தருவது போன்ற குற்றங்களுக்காக ரூ. 500 அபராதம்.

வேகமாக வாகனத்தை ஓட்டினால் முதல்முறையாக ரூ. 400 ம், இரண்டாம் முறையாக ரூஆயிரமும் அபராதம். தகுதியற்றவர்கள் வாகனம் ஓட்டினால் முதன் முறையாக ரூ 200, இரண்டாம் முறையாக ரூ 500,

அதிக புகையை கக்கிய வாறு சுற்றுச்சூழலை மாசு படுத்தியும் அதிக சத்தம் எழுப்பி ஒலியை மாசுப்படுத்தியும் வாகனம் ஒட்டி னால் முதன் முறை யாக ரூ. 1000 மும், இரண்டாம் முறையாக ரூ. 2000 மும் அபராதம் விதிக்கப்பட்டுவருகிறது.

 கடலூரில் நேற்று காலை கடலூர் டவுன்ஹால் அருகே போக்குவரத்து ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் போக்குவரத்து விதிமுறை களை மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து

கலீஃபா உமர்:தொலைக்காட்சி தொடருக்கு எதிர்ப்பு!

கெய்ரோ:2-வது கலீஃபா(ஆட்சியாளர்) உமர் அவர்களைக் குறித்த தொலைக்காட்சி தொடரை ஒளிபரப்ப முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரமலானில் உமர்(ரலி) அவர்களின் வரலாறு தொலைக்காட்சி தொடராக ஒளிபரப்ப இருக்கும் வேளையில் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

 நபி(ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் சித்தரிப்பதை இஸ்லாம் தடை செய்துள்ளதாகவும், இது சிலை வணக்கத்திற்கு கொண்டு போய்விடும் என சில முஸ்லிம் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இத்தொடரில் நடிக்கும் நடிகர்கள் இதர தொடர்களிலும் நடிப்பார்கள் என்பதால் இது உமர்(ரலி) அவர்களை அவமதிப்பது போன்றாகும் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஷேக் யூசுஃப் அல் கர்ழாவி போன்ற பிரபல மார்க்க அறிஞர்கள் தங்களின் தயாரிப்பை ஆதரிப்பதாக சவூதியில் மிடில் ஈஸ்ட் ப்ராட்காஸ்டிங் சென்டர் கூறுகிறது. முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய தோழரும், இரண்டாவது கலீஃபாவுமான உமர்(ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் இத்தொலைக்காட்சி தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.

நீதிமானாக விளங்கிய உமர்(ரலி) அவர்கள் இஸ்லாமிய உலகின் வெளியேயும் நன்றாக பிரபலமானவர். இந்தியாவில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சி வரவேண்டும் என தேசத் தந்தை காந்தியடிகள் விரும்பினார். 30 ஆயிரம் நடிகர்களும், 10 நாடுகளைச் சார்ந்த தொழில்நுட்ப குழுவும்

ஜூலை 23, 2012

அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும்! – இஸ்மாயீல் ஹானிய்யா!

காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:

 ‘பரிசுத்தமான மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையில் அரபு வசந்தம் முடிவடையும். பாரம்பரிய எண்ணங்களையும், முன்னரே தீர்மானித்த ஒழுங்கு முறைகளயும் மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தில் நாம் உள்ளோம். தற்போதைய அமைப்பு முறைகள் தகர்க்கப்பட்டு புதிய அமைப்பு நிறுவப்படும். அரசியல் வரைப்படம் மாற்றி வரைக்கப்படும். பூமியில் குழப்பம் விளைவிக்கும் ஆட்சியாளர்களை பதவியில் இருந்து கீழே இறக்க முஸ்லிம் உம்மத் தீர்மானித்துள்ள முக்கியத்துவம் கட்டம் இது. சில அரபு ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள்.

கிலாஃபத் திரும்ப வராது என்றும், சியோனிஸ்டுகளின் விருப்பங்களை என்ன விலை கொடுத்தேனும் பாதுகாப்போம் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வாலைப் பிடித்துக்கொண்டுதான் முஸ்லிம் உம்மத் முன்னேற வேண்டும் என்றும் அந்த அரபு ஆட்சியாளர்கள் தீர்மானித்துள்ளார்கள்’

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி!

பிரணாப் முகர்ஜி 
புதுடெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி. கடந்த 19ம் தேதி நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் 72 சதவீதம் வாக்கு பதிவானது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

 குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். முதலில் எம்.பி.க்கள் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில் பிரணாப் முகர்ஜி 527 எம்.பி.க்களின் ஓட்டு கிடைத்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட சங்மாவிற்கு 206 எம்.பி.க்கள் ஓட்டளித்தனர். இதில் பிரணாப் அமோக வெற்றி பெற்றார். மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 893 மதிப்பு ஓட்டுக்களை பெற்றுள்ளார். சங்மாவுக்கு 3 லட்சத்து 73 ஆயிரத்து 116 ஓட்டுக்கள் மதிப்பு பெற்றுள்ளார்.

 பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார்.

ஜூலை 21, 2012

கொள்ளிடம் ஊற்றுநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றின் ஊற்றுநீரை சிதம்பரம் மற்றும் கிள்ளை பகுதிக்கு பாசனம் மற்றும் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்ய கான்சாகிப் வாய்க்காலுக்கு திருப்பிவிடும் திட்டம் ரூ.58.70 கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்டு கடந்த ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கி நிறைவேற்றிட வேண்டும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் (படம்) அண்மையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.


கடிதவிவரம்: கொள்ளிடம் ஆற்றில் ஆண்டு முழுவதும் ஊற்றுநீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
அதே சமயம் சிதம்பரம் வட்டத்தில் கிள்ளைப் பகுதியில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் சாகுபடி மேற்கொள்ள முடிவதில்லை.கோடைக் காலங்களில் சிதம்பரம் வட்டம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இக்குறையைப் போக்க கொள்ளிடம் ஆற்றில் கடலூர் மாவட்டம் ஆதனூர் - நாகை மாவட்டம், குமாரமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையே 83 கண்மாய்களை கொண்ட ஒரு ரெகுலேட்டர் கட்டி, ஊற்றுநீரை தேக்கி பயன்படுத்தவதற்கான திட்டம் ரூ.58.70 கோடி மதிப்பில் 2003-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது.இதன் மூலம் 1120 மீட்டர் கனஅடி நீரைத் தேக்க முடியும். வடக்குராஜன் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் அளிக்க முடியும். மேலும் உபரியாக உள்ள முழுநீரையும், கான்சாகிப் வாய்க்கால் பாசன பகுதிகளுக்கு நீர் அளிக்கவும் திட்டமிடப்பட்டது.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் 25 ஆயிரம் சாகுபடி செய்யவும், சிதம்பரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் பாதுகாக்கவும், கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்நீராக

சிரியா: புரட்சியாளர்கள் கை ஓங்குகிறது முக்கிய நகரங்களை கைப்பற்றினர்!

டமாஸ்கஸ்:சர்வாதிகார அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதிற்கு எதிரான போராட்டம் இரத்தக்களரியாக மாறியுள்ள சூழலில், சிரியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஈராக்-துருக்கி எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களை புரட்சியாளர்கள் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர். மேற்காசியாவின் வர்த்தக பாதையில் முக்கிய இடம் வகிக்கும் டமாஸ்கஸ்-பாக்தாத் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை நகரங்களான அபூகமால், ஜோர்டான் எல்லையில் உள்ள அல் வலீத், துருக்கி எல்லையில் உள்ள ஜர்பலூஸ், பாபுல் ஹவா ஆகிய நகரங்களின் கட்டுப்பாட்டை ஆஸாத் அரசு இழந்துள்ளது.

 சிரியாவின் முக்கிய துறைமுக நகரம்தான் அல்வலீத். 605 கி.மீ வரை ஜோர்டானும், சிரியாவும் இந்த எல்லையை பங்கிடுகின்றன. இந்நிலையில் தலைநகருக்கு அருகில் உள்ள புரட்சியாளர்களின் ஆதிக்கம் நிறைந்த மிதான் நகரத்தில் போராளிகளை துடைத்து எறிந்ததாக சிரியா தொலைக்காட்சி கூறுகிறது. டாங்குகள் மற்றும் கவச வாகனங்களுடன் சர்வாதிகாரி ஆஸாதின் ராணுவம் அங்கு முகாமிட்டுள்ளது. இதனிடையே, கடந்த புதன்கிழமை நேசனல் செக்யூரிட்டி கட்டிடத்தில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் காயமடைந்த பாதுகாப்புத்துறை தலைவர் ஹிஷாம் பக்தியார் மரணமடைந்தார். உயர் பாதுகாப்பு அதிகாரிகளும், அமைச்சர்களும் நடத்திய கூட்டத்தின் போது நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பாதுகாப்பு அமைச்சர், துணை பாதுகாப்பு அமைச்சர், உயர் ராணுவ அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். அதேவேளையில், பதவியில் இருந்து விலக ஆஸாத் அறிவித்ததாக வெளியான செய்திகளை சிரியா அரசு மறுத்துள்ளது.

பிரான்சில் உள்ள ரஷ்ய தூதர் ஆஸாத் பதவி விலக விருப்பம் தெரிவித்ததாக தெரிவித்தார். இச்செய்தி முற்றிலும் அடிப்படையற்றது என சிரியா செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சிரியாவிற்கு எதிராக நேற்று முன்தினம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 3-வது தடவையாக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோவை பயன்படுத்தி தோற்கடித்தன. இரு நாடுகளின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன. அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன் ஆகிய நாடுகள் இரு நாடுகளின் நடவடிக்கைக்கு கண்டனம்

ஜூலை 19, 2012

பரவலாக மழை பெய்வதால் ஆடிப்பட்டம் துவங்கியது!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் ஆடிப்பட்டத்தில் நம்பிக்கையுடன் மானாவாரி பயிர் செய்யத் துவங்கியுள்ளனர்.விவசாயிகள் பாசனத்தை நம்பி பயிர் செய்வது இறவை பட்டம். மழையை நம்பி பயிர் செய்வது மானாவாரி பட்டம். ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழையின் போது கடலூர் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் விவசாயிகள் எள், மணிலா, சோளம், பருத்தி, கம்பு, கேழ்வரகு, பச்சை பயறு, உளுந்து, துவரை உட்பட பல பயிர்களை மனாவாரியில் பயிர் செய்வது வழக்கம்.

மாவட்டத்தில் திட்டக்குடி, தொழுதூர் பகுதிகளில் அதிக பட்சமாக 30 ஏக்கரில் மானாவாரியில் சோளம், பருத்தி பயிர் செய்யப்படும். பரவலாக மழை தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இதனையடுத்து விவசாயிகள் நிலத்தை உழுது, அடியுரமிட்டு மானாவாரி பட்டத்தில் பயிர் செய்ய மும்முரமாகி வருகின்றனர்.விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் இறவை பட்டத்தில் பயிர் செய்யப்பட்ட எள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால், மானாவாரியிலும் இப்பகுதியில் விவசாயிகள் எள் பயிர் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேப்போன்று இப்பகுதிகளில் மக்காசோளம், துவரை, கம்பு, மணிலா, வரகு, திணை உள்ளிட்டவைகளை விவசாயிகள் பயிர் செய்ய துவங்கியுள்ளனர்.

91,950 ஏக்கர் மானாவாரி வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மானாவாரியில் 71 ஆயிரத்து 250 ஏக்கரில் கம்பு, சோளம், வரகு, திணை உள்ளிட்ட தானியப் பயிர்களும், 12 ஆயிரத்து 500 ஏக்கரில் எள், 8,250 ஏக்கரில் மணிலா, பச்சை பயறு, துவரை உள்ளிட்ட பயறு வகைகள் என மொத்தம் 91 ஆயிரத்து 950 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்ய வாய்ப்புள்ளது. இதில், தேசிய பயிறு உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிறு உற்பத்தியைப் பெருக்க உளுந்து உள்ளிட்ட பயறு வகை விதைகள் கிலோ 22 ரூபாயும், வரகு உள்ளிட்ட தானிய வகை விதைகள் கிலோ 12 ரூபாய்க்கும் வேளாண் துறை மூலம் வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்களுக்கு வேளாண் அலுவலக

கடலூர் மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகத்தில் அலைமோதும் இளைஞர்கள் கூட்டம்!


திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்றொரு பழமொழி உண்டு. ஆம், உள்நாட்டில் வாய்ப்பு இல்லாவிட்டால் வெளிநாடு சென்று பொருள் சேர்க்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த வகையில் இன்று வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாஸ்போர்ட் அலுவலங்களில் குவியும் இளைஞர்கள் கூட்டத்தை வைத்தே இதை கணிக்க முடிகிறது.

அதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கிற அனைவரும் உடனடியாக வெளிநாடு சென்று விடுவதில்லை. என்றாலும் கடந்த சில ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகம் அருகில் மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விடுமுறை நாட்களை தவிர இந்த அலுவலகத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் நீண்ட வரிசையில் நின்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து செல்வதை காண முடிகிறது.

முன்பு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறிப்பட்ட பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களில்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது. அதன் பின்னர் மாவட்டங்கள் தோறும் இது விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நேரில் சென்று விண்ணப்பிப்பதற்கு பதிலாக ஆன் லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது.

ஆன் லைன் மூலம் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க ரூ.2,500 கட்டணமும், சாதாரண முறையில் விண்ணப்பிக்க ரூ.1,000 கட்டணமும் செலுத்த வேண்டும். சாதாரண முறையில் விண்ணப்பித்தால் பாஸ்போர்ட் கையில் வந்து சேர 4 மாதங்கள் ஆகும். தட்கல் முறையில் விண்ணப்பித்தால் 10 முதல் 15 நாட்களுக்குள் பாஸ்போர்ட் வீடு தேடி வந்துவிடும்.

ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றாலும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் இளைஞர்களின் கூட்டம் குறைந்த பாடு இல்லை. நேற்று முன்தினம் ஒரே நாளில் 75 பேர் பாஸ்போர்ட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

ஒரு காலத்தில் வெளிநாடு செல்பவர்கள் மட்டுமே பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் ஒரு அடையாள அட்டையாக பாஸ்போர்டையும் பயன்படுத்தி

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை: ஒ.ஐ.சி அவசர கூட்டம் நடத்த கோரிக்கை!

டெஹ்ரான்:மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசு ஆதரவுடன் நடத்தப்படும் வன்முறைகள் தொடர்பாக விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு(ஒ.ஐ.சி) கூட்டத்தை அவசரமாக கூட்டுமாறு மூத்த ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் ஹுஸைன் நக்வி ஹுஸைனி கோரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நிலைமை பீதி அளிப்பதாக உள்ளது. இங்குள்ள சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு ஈரான் தலைமை வகிக்கவேண்டும் என்றும் ஹுஸைனி வலியுறுத்தியுள்ளார்.

 சர்வதேச சட்டங்களை பகிரங்கமாக மீறும் போக்கு மியான்மரில் நடந்து வருகிறது. இச்சம்பவம் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலோ, மனித உரிமை ஏஜன்சியோ பதில் அளிக்காதது ஆச்சரியமாக உள்ளது. மியான்மர் கலவரத்தை கண்டிக்க சர்வதேச அமைப்புகள் முன்வரவேண்டும். இச்சம்பவம் குறித்து மெளனம் சாதிக்கும் முஸ்லிம் நாடுகளின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்று ஹுஸைனி தெரிவித்தார். மியான்மரில் மேற்கு மாநிலமான ராக்கேனில் கடந்த மாதம் துவங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு கல்வரத்தில் 650க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொலைச் செய்யப்பட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 1200க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 80 ஆயிரம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என்று மனித உரிமை

ஜூலை 18, 2012

போலி குடும்ப அட்டைகள் வழங்கினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, ஜூலை 17: போலி குடும்ப அட்டைகள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரித்தார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் அமைச்சர் பேசியது: புதிய குடும்ப அட்டை கோரி பெறப்படும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதில் கவனமுடன் செயல்பட வேண்டும். புதிய குடும்ப அட்டைக்காக வீடுகளில் மேற்கொள்ளப்படும் விசாரணையை தீவிரப்படுத்தி உண்மையான குடும்பங்களுக்கு அட்டைகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். போலி குடும்ப அட்டைகள் வழங்கியது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். போலி குடும்ப அட்டைகளை களைய தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் புகார்கள் தெரிவிக்க விரும்பினால் அதற்கான தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு கூறலாம். மேலும் உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள மாநில நுகர்வோர் சேவை மையத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் புகார்களைக் கூறலாம்.

 இத்தகைய புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து குறைகள் களையப்படும் என்று

இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் – இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ஸா !

கொழும்பு:இஸ்லாமிய ஷரீஅத்தின்(சட்டத்திட்டம்) சட்டங்களையோ, சவூதி அரேபியா போன்ற நாடுகளின் சட்டங்களையோ இலங்கையில் அமல்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து இலங்கை அமைச்சரும், பெளத்த மதத்தைச் சார்ந்தவருமான விமல் வீரவன்ஸா அழுத்தம் திருத்தமாக தெரிவித்துள்ளார்.பாலியல் கொடுமைகள், குற்றச் செயல்கள், அதிகரித்துவரும் போதைப் பொருள் உபயோகம் ஆகியவற்றிற்கு எதிராக போராட இத்தகைய சட்டங்கள் முக்கியமானது என்று வீரவன்ஸா கூறினார். குழந்தைகள் மீதுபாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்துவோரை சட்டத்தில் திருத்தம் செய்து குறைந்த மரணத் தண்டனையாவது அளிக்கவேண்டும் என்று வீரவன்ஸா கூறினார்.

சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவிடம் மனு அளிக்கலாம்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வசிக்கும் மக்கள், சங்கங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பில் தங்களுடைய குறைகளை மனுக்களாக எழுதி `தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை` என்ற முகவரிக்கு இந்த மாதம் 31ம் தேதிக்குள் அனுப்ப மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்ததாக வட்டாட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மனுக்கள் பொது பிரச்சனைகள் குறித்தும், அரசு அலுவலகங்களில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக் கும் பிரச்சனை உள்ளடக்கியதாகவும், ஒரே ஒரு துறையை சார்ந்ததாகவும் இருக்க வேண்டுமெனவும் கூறப்பட்டுள்ளது. இதில் தனிநபர் குறை நீதிமன்ற வழக்கு சம்மந்தப்பட்டவை, வேலைவாய்ப்பு, பட்டா, முதியோர் உதவிதொகை, வங்கி கடன், தொழில் கடன், அரசு பணிமாற்றம், அரசு அலுவலர்களின் குறைகள் ஆகியவை பற்றி மனுக்களாக அனுப்பக்கூடாது. சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்டு மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். மனு பற்றிய விவரங்கள் மனுதாரருக்கு தெரிவிக்கப் படும் ஆகவே மனுதாரர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு மனுக் களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
-தினகரன் 

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து போராட்டம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 ஜமாத்துல் உலமா தலைவர் அப்துல் ரஹ்மான் ஆலிம் தலைமையில் நடைபெற்றது.
பெண்கள் திருமணம் முடிக்கும் வயது குறித்த டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்!


ஜுலை 17: பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று 17 .07.2012 செவ்வாய் கிழமை தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் ஆர்ப்பாட்டத்தை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்  இதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.


பரங்கிபேட்டையில் கோ.அருள்முருகன் (8 ஆவது வார்டு கவுன்சிலர், நகர செயலாளர்) ,  மகேஷ் (மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்) , சங்கர் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) ஆகியோர் தலைமையில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களும், வன்னியர் சங்க இளைஞர்களும் கலந்து கொண்டு மதுவிற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.


பரங்கிபேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கடைக்கு  பூட்டு  போட இவர்கள் முயன்ற  போது காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில்  ஏற்றி சென்றனர்.

இதில் மனித நேய ஆர்வலர் கா.மு.கவுஸ் கலந்து கொண்டார்  அனைவரையும் கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது தனக்கு நெஞ்சி வலிப்பதாக

ஜூலை 17, 2012

ஹஜ்ஜுப் பயணிகளுக்கு உதவும் நிரலி -கண்டுபிடிப்பு


முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும்,  மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த  இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன் "The Global Post" நாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்."ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்" என்றார் அவர். 
"கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்".

தனது பயன்பாட்டு நிரலிக்கு "அமீர்" என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில் 'அமீர்' என்று கூறுவார்கள்(இந்த நிரலிக்கான சுட்டி: 
http://itunes.apple.com/tw/app/amir-personal-hajj-assistant/id473935680?mt=8)

உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், "நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த  இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்" என்று நினைவு கூர்ந்தார்.

ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.

அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும்  காணமுடியும்.

இரண்டு வருட கால ஆய்வின் முடிவின் இந்நிரலியை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹபீபுர் ரஹ்மான், தன் ஆய்வில் ஆஸ்திரேலிய முஸ்லிம் அறிஞரும், ஹஜ்ஜு பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளவருமான அபூமுனீர் இஸ்மாயில் டேவிட்ஸ் என்பவரை கலந்தோலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு க்ளிக்கில் கிப்லா (தொழ வேண்டிய திசை) காட்டும்இன்னொரு நிரலியையும் இவர்

ஜூலை 16, 2012

பெரம்பலூர் ஆட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறிதலையிட்டும்,இந்திய நீதிமன்றத்தையும் அவமதித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரையும் காவல்துறையையும் கண்டித்து தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தை தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளன.

ஜூலை 15, 2012

கடலூர் மாவட்ட அரசு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!



கடலூர், ஜுலை 15 : கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் காலிப் பணியிடங்களுக்கான  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கலெக்டர் ராஜேந்திர ரத்னு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கீழ்கண்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரண்டு காலியிடங்கள் உள்ள பாதுகாப்பு அலுவலர் பதவிக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். 

ஒரு பணியிடம் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துனர், கணக்காளர் மற்றும் இரு பணியிடங்களுக்கான சமூக நலப் பணியாளர் பதவிக்கு 8,000 ரூபாய் மாத தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.


ஒரு காலிப் பணியிடம் உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு 5,000 ரூபாய் மாத தொகுப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.ஏ., - பி.சி.ஏ., - பி.எஸ்சி., புள்ளியியல், கணிதம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
இரு காலியிடங்கள் உள்ள புறத்தொடர்பு பணியாளர் பதவிக்கு 4,000 ரூபாய் மாத தொகுப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. இப்பதவிக்கு பிளஸ் 2 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இப்பணியிடங்களுக்கான அனைத்து பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இப்பணியிடங்களுக்குத் தேவையான வயது, கல்வித்தகுதி, விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை www.cuddalore.tn.nic.in  என்ற கடலூர் மாவட்ட இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், அண்ணாமலை நகர், ஐ.டி.ஐ., பின்புறம், சாவடி, கடலூர்-607 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதை பதிவிறக்கம் செய்து புகைப்படத்துடன் 25.07.2012 மாலை 5.30 மணிக்குள், கண்காணிப்பாளர், அரசினர் கூர்நோக்கு இல்லம், அண்ணாமலை நகர், ஐ.டி.ஐ பின்புறம், சாவடி, கடலூர் மாவட்டம்-607 001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தொடர்புக்கு 04142-203050, 9894241784 என்ற எண்ணையோ, நேரிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதரர்களே,
முஸ்லிம்களாகிய நாம் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் (EMPLOYMENT OFFICE) நமது படித்த படிப்புகளை பெரும்பாலும் பதிவு செய்வதே கிடையாது. சொற்பமானவர்களை தவிர்த்து.

நமக்கு என்ன கவர்மெண்ட் வேலையா கிடைக்க போகுது??? (நம்ம மவூத்த போனா பிறகுதான் வேலை வரும் என்று எல்லாம் கூறுவோம்) என்று அலட்சியமாக

ரமளானை வரவேற்போம்...!



மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...

இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)

மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்...!

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். 

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.

தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை -அது ஆணாயினும், பெண்ணாயினும் -  ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றாலமனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. 

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட

மீண்டும் துணை ஜனாதிபதியாகிறார் ஹமீத் அன்சாரி!

புதுடெல்லி:ஹாமித் அன்ஸாரி 2-வது முறையாக துணை குடியரசு தலைவர் வேட்பாளராக காங். தலைமையிலான ஐ.மு கூட்டணியால் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று(ஜூலை14) அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. துணை குடியரசு தலைவராக இருக்கும் ஹாமித் அன்ஸாரியின் பதவிக் காலம் விரைவில் முடிவடைகிறது. இதனையடுத்து ஆகஸ்ட் 7ம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

 குடியாசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை நிறுத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ஹாமித் அன்ஸாரியை மீண்டும் நிறுத்துவது என முடிவு செய்திருந்தது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக கூட்டணிக் கட்சிகளுடன் காங்கிரஸ் தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதைத் தொடர்ந்து இன்று மாலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், திமுகவின் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் குடியரசு துணைத் தலைவர் தேர்தகில் ஹாமித் அன்ஸாரியையே மீண்டும் நிறுத்துவதாக சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

 துணை குடியரசு தலைவர் தேர்தலில் ஹாமித் அன்ஸாரிக்கு பெருவாரியான எம்.பிக்களின் ஆதரவு இருப்பதால் அவர் இத்தேர்தலில் எளிதாக வெற்றிப் பெறுவார் என கருதப்படுகிறது. ஹாமித் அன்ஸாரி 2-வது முறையாக துணை குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் முன்னாள் துணை குடியரசு தலைவர் மறைந்த எஸ்.ராதாகிருஷ்ணனின் சாதனையை சமன் செய்வார். எஸ்.ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை துணை குடியரசு தலைவராக பதவி வகித்தார். கடந்த முறை

ஜூலை 14, 2012

பொது மக்களால் சீரமைக்கப்பட்ட ரம்ஜான் தைக்கால் வளைவு சாலை

காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் உள்ளது. இப்பகுதி சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சாலை யில் உள்ளது. இப்பகுதிக்கு அருகே சாலையில் குண்டும் குழியும் காணப்பட்டது. தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு செல்லும் நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. ஒரு நாளைக்கு 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதை கருத்தில் கொண்டு இப்பகுதியில் உள்ள மக்கள் சாலையை சீர்செய்ய நெடுஞ்சாலை துறையிடம் வலியுறுத்தினர். ஆனால் நெடுஞ்சாலைதுறை அலட்சியப்படுத்தினர். இந்நிலையில் பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து சாலையை சீர்செய்யும் பணியை நள்ளிரவில் தொடங்கினர். இதே போன்று காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை அருகே மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் தினந்தோறும் காட்டுமன்னார்கோவில் நகரத்திற்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சாலை முடக்கில்தான் கொள்ளுமேட்டை சேர்ந்த ஒரு இலைஞர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது இதுபோல் பல்வேறு விபத்துகளின் கேடயமாக இருக்கும் இந்த வளைவு பகுதியை அரசு சீர்படுத்திதந்தால் சிறப்பாக இருக்கும்.

முஸ்லிம்களை வெளியேற்றும் மியான்மர் அரசு !!

யங்கூன்:ரோஹிங்கியா முஸ்லிம்களை நாட்டில் இருந்து வெளியேற்றுவோம் என்றும், ஐக்கிய நாடுகள் சபையின் அகதி முகாமிற்கு அவர்களை அனுப்புவோம் என்றும் மியான்மர் அதிபர் தைன் ஸைன் அறிவித்துள்ளார். 10 லட்சம் எண்ணிக்கையிலான ரோஹிங்கியா முஸ்லிம்களை இதர நாடுகள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் ஐ.நா அகதி முகாமிற்கு அனுப்புவதே தங்கள் முன்னால் உள்ள ஒரே வழி என்று ஸைன் கூறுகிறார்.

 ஆனால், மியான்மரின் கோரிக்கையை ஐ.நா அகதிகள் ஏஜன்சி அங்கீகரிக்கவில்லை. பல தசாப்தங்களாக மியான்மரில் வாழும் ரோஹிங்கியா முஸ்லிம்களுடன் அரசு கடுமையான பாரபட்சத்தை காண்பிப்பதாகவும், கல்வி கற்கவோ, வேலை தேடவோ வாய்ப்புகளை அளிக்காமல், பயண தடைகள் உள்பட கடுமையான கட்டுப்பாடுகளை அரசு இவர்கள் மீது சுமத்துவதாகவும் ஐ.நா குற்றம் சாட்டுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கிடையே மியான்மரில் நடந்த பல்வேறு இனக்கலவரங்களும், அரசு நடத்தும் ஒருதலை பட்சமான அடக்குமுறைகளும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து புலன்பெயரும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திற்கான ரமளான் சஹர் & இஃப்தார் நேர அட்டவனை!


ஜூலை 11, 2012

கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்கு ரூ24.71 கோடி ஒதுக்கீடு

கடலூர், : கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 24 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரத்து 263 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை அந்தந்த ஊராட்சிகள், ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சி எடுத்து செய்ய வேண்டும் என்று ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தன் சொந்த வருவாயிலிருந்து குறிப்பிட்ட தொகையை மாநில நிதிக்குழு மானியமாக வழங்கி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் ஏப்ரல் 2012 முதல் மே 2012 வரை மாநில நிதிக்குழு மானியம் மாவட்ட ஊராட்சிக்கு ரூ.2 கோடியே 4 லட்சத்து 90 ஆயிரத்து 764ம், 13 ஒன்றியங்களுக்கும் ரூ.7 கோடியே 52 லட்சத்து 96 ஆயிரத்து 987ம், 683 ஊராட்சிகளுக்கும் ரூ.15 கோடியே 13 லட்சத்து 68 ஆயிரத்து 212 என ஆக மொத்தம் ரூ.24 கோடியே 71 லட்சத்து 55 ஆயிரத்து 263 ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சி பணியாளர்களுக்கு முழுமையாக ஊதியம் மற்றும் நிலுவை தொகை வழங்க வேண்டும். நூலக வரித் தொகை நூலக ஆய்வுக்குழுவிற்கு செலுத்தப்பட வேண்டும்.

ஊராட்சி பணியாளர்களுக்கு குழு காப்பீடு திட்ட சந்தா, பங்கு தொகை கட்டப்பட வேண்டும். ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி மற்றும் சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை அளித்து மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற பணிகளுக்கு கிராம ஊராட்சிகள் முன்னுரிமை அளித்து செலவினம்

காட்டுமன்னார்கோவிலில் சில்லரை தட்டுப்பாடு

காட்டுமன்னார்கோவில், : தினமும் கிராமங்களிலிருந்து அதிக அள வில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் காட்டுமன்னார்கோவில் வருகின்றனர். பெரும்பாலானோர் 100, 500, 1000 ரூபாய் நோட்டுகளை எடுத்து வருகின்றனர். சில்லரை தட்டுப்பாடு காரணமாக பல மணி நேரம் கடைகளின் முன்பு காத்திருக்க வேண் டிய சூழல் நிலவி வருகிறது. இதனால் காலவிரயம் ஏற்பட்டு வீடு திரும்புவதில் சிக்கல் ஏற்படுகிறது.

 தற்போது பொதுமக்களிடம் ஐநூறு ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகளவில் உள்ளன. இதனால் பொருட்கள் வாங்குவதற்கு முன் சில்லரைக் காக பல கடைகளுக்கு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நூறு ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிக குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமா கவே சில்லரை தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறுகின்றனர். வேலைக்கு செல்பவர்களுக்கு ஊதியமாக ரூ 200, 500 என வழங்கப்படுவதால் பெரும்பாலா னோர் ரூபாய் நோட்டுகளையே கடைகளுக்கு எடுத்து வருகின்றனர். ரூ 10, 20 50 ஆகிய ரூபாய் நோட்டுகளே முற்றிலும் புழக்கத்தில் இல்லை. இதனால் தொடர்ந்து சில்லரை தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இப்பகுதியில் இயங்கி வரும் வங்கி மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லரை வினியோகம்

இவ்வாண்டிற்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமை - யூசுஃப் எஸ்டஸ் தேர்வு!

துபாய்:அமெரிக்காவின் பிரபல இஸ்லாமிய பிரச்சாரகர் யூசுஃப் எஸ்டஸ் இவ்வாண்டிற்கான சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 16-வது துபாய் புனித திருக்குர்ஆன் விருதுக்குழு இவரை சிறந்த இஸ்லாமிய ஆளுமையாக தேர்வுச் செய்துள்ளது. இத்தகவலை நேற்று மாலை தேர்வுக்குழு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 10க்கும் மேற்பட்ட ஆளுமைகளில் இருந்து யூசுஃப் எஸ்டஸ் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய பிரச்சாரம் மற்றும் பரப்புரைச் செய்ததில் அவர் அளித்துள்ள சேவைகளை கருத்தில் கொண்டு இவ்விருதிற்கு தேர்வுச் செய்ததாக துபாய் புனித திருக்குர்ஆன் விருதுக் கமிட்டியின் நிர்வாக குழு உறுப்பினர் இப்ராஹிம் பூமில்ஹா கூறினார். 1944-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸில் ப்ரொட்டஸ்டாண்ட் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த

ஜூலை 10, 2012

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக புவி அமைப்பு தகவல்!

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக வேளாண்மை துறையில் நிலத்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த புவி அமைப்பு தகவல் பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக அமைக்கப் பட்டுள்ள அலுவலர்கள் குழுவிற்கு சிறப்பு 5 நாள் பயிற்சி வழங்கப்படுகிறது. புவியியல் ரீதியாக உலக வரைப்படம் உள்ளது. இதி லிருந்து பல்வேறு தகவல்கள் பெற வழிகாணப்பட்டுள்ளது.

 செயற்கை கோள் உதவியுடன் புவி அமைப்பு அதன் பல்வேறு இடங்களின் தன்மை துறை ரீதியாக தகவல்கள் பெற வழி உண்டு. இதில் வேளாண்மை துறையில் அதற்கேற்ப தகவல்களை பெற வழிவகை செய்யப்பட்டுள் ளது. இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் வேளாண்மை துறையின் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நிலத்தடி நீர், மண் உள்ளிட்டவை களின் தன்மை குறித்து விவரங்கள் செயற்கைகோள் மூலம் பெற்று தரும் பணியை மேற்கொள்ள உள்ளது. முதல் முறையாக இது போன்ற திட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது

இதற்காக வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை, தேசிய கணினி மையம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் 10 பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழு பூலோக வரைப்படத்தில் கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீரின் தன்மை, மண் வளம் குறித்து தகவல்களை செயற்கோள் மூலம் பெற்று பதிவு செய்யும். இக்குழுவுக்கு 5 நாள் பயிற்சி கடலூர் வேளாண்மை துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை உதவி செயற் பொறியாளர் சங்கரசேகர் வரவேற்றார். வேளாண்மை இணை இயக்குனர் ராதா கிருஷ்ணன்

ஜூலை 09, 2012

முஸ்லிம்களுக்கு எதிராக ராகவேந்திரா கல்லூரியா?


 கிழமுங்கிலடி ஜுலை 09: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள கிழமுங்கிலடியில் இருக்கும் ராகவேந்திரா தனியார் கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன்  RSS  (Rashtriya Swayamsevak Sangh) கேம்ப்”  நடந்துள்ளது. இது சம்பந்தமாக கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அக்கல்லூரிக்கு சென்று கல்லூரியின் முதல்வரை சந்தித்து "அல்கொய்தா பயிற்சி நடத்த இடம் கொடுப்பீர்களா? என கேட்டபோது  அதிர்ச்சி அடைந்த அவர் என்ன சார் சொல்றீங்க? என கேட்டார்.

"RSS" என்பது தீவிரவாத அமைப்பு அவர்களால் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்களால் ஆயிரகணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் , பல ஆயிரம் கோடிகள் மதிப்புடைய முஸ்லிம்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன  , ஆயிரகணக்கான முஸ்லிம் பெண்களின் கற்புகள் சூரையாடபட்டுள்ளன. இது போன்ற ஒரு கொடூரமான அமைப்புக்கு உங்கள் கல்லூரியில் கூட்டம் நடத்த அனுமதி கொடுத்துள்ளீர்கள.

எங்களின் (TNTJ) தலைமை உங்கள் கல்லூரிக்கு எதிராக முஸ்லிம்களை கருவறுக்க துடிக்கும் RSS கல்லூரியான ராகவேந்திரா கல்லூரியில் யாரும் படிக்க வேண்டாம், யாரையும் அங்கு சேர்க்காதீர்கள் என மாவட்டம் முழுவதும் வால் போஸ்ட் அடித்து ஓட்ட சொல்லி இருக்கிறார்கள். மாவட்டம் முழுவதும் உங்கள் கல்லூரிக்கு எதிராக நோட்டிஸ் கொடுக்க சொல்லி உள்ளார்கள் அத்தோடு இல்லாமல் வாரம் வாரம் நடக்கும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு பிறகும் ராகவேந்திரா கல்லூரி முஸ்லிம்களுக்கு எதிரான RSS கல்லூரி என்று பிரசங்கம் செய்ய சொல்லி உள்ளார்கள். நாங்கள் இதெல்லாம் செய்ய போகின்றோம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டோம்.
எங்களுக்கு அவர்கள் இவ்வளவு கொடுமையானவர்கள் என தெரியாது. தெரிந்திருந்தால் கொடுத்திருக்க மாட்டோம் , விடுமுறை நாள் தானே என்று பணத்திற்காக வாடகைக்கு விட்டோம். இனிமேல் இதுபோல் தவறுகள் நடக்காமல் பார்த்துகொள்கிறோம்.  இனிமேல் நூறு சதவீதம் அவர்களுக்கு (RSS ) இங்கே இடமளிக்க மாட்டோம் என உறுதியாக கூறுகிறோம். தயவு செய்து இதை பெரிதுபடுத்தாதீர்கள் என கூறினார்.

இந்த கல்லூரியில் அதிகமான முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மாணவ மாணவிகள் படிக்கின்றனர். முஸ்லிம் மாணவிகளுக்கு புர்கா அணியவோ தலையில் முக்காடு போடவோ அனுமதி இல்லை. இவ்வளவு பெரிய கல்லூரியில் முஸ்லிம் மாணவர்கள் தொழுவதற்கு இதுவரை

கள்ளநோட்டை கண்டுபிடிக்க புதிய இணையதளம்: ரிசர்வ் வங்கி

புதுடில்லி: நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழித்துக்கட்டவும், இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் ஆகும்.

கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துகட்டவும், அவற்றை எளிதாக சாதாரண மக்கள் இனம் காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி, www.paisaboltahai.rbi.org.in என்ற புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. கடந்த 2010-2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில்இருந்த 6.74 மில்லியன் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள விவரம் உள்ளிட்டவை இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளது.

 ரூ. 10, 50, 100, 500, 1000 ஆகிய கரன்சிகளின் வரிசைப்படி கள்ள நோட்டுகளுக்கும், ஒரிஜினல் கரன்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தினை கண்டுபிடிக்க முடியும், மேலும் கள்ளநோட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்படமும் காட்சியாக இடம் பெற்றுள்ளன. இவற்றினை டவுன்‌லோடு செய்து, கள்ள நோட்டினை எவ்வாறு இனம் காணலாம்

ஜூலை 08, 2012

இந்தியன் ஆயில் கார்பரேசன் கல்வி உதவித்தொகை 2012-13

இந்தியாவில் 12ம்வகுப்பு,ஐடிஐ,பொறியியல்(BE), மருத்துவம்(MBBS), மேலாண்மை(MBA) படிக்கும் மாணவர்களுக்கு இந்தியன் ஆயில் கார்பரேசன் ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது . இந்த கல்வி ஆண்டிற்கான (2012-13) விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றது.

 மேலும் விபரங்களுக்கு:http://www.tntjsw.net/readmore.php?id=377&t=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88%202012-13


 http://iocl.com/Aboutus/Scholarships.aspxஇணையதளத்தை  பார்க்கவும்.