Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 31, 2012

ஓர் வபாத் செய்தி!!!!

நமதூர் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஆட்டோ சுகைது அவர்களின் தந்தை ஜெக்கரியா அவர்கள் இன்று மாலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

  எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

மார்ச் 30, 2012

உயர்ந்தது மின் கட்டணம்!!!

சென்னை: தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 புதிய மின் கட்டண உயர்வு விவரம் 
 வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில், தற்போது 50 யூனிட் வரை 75 காசுகள் வசூலிக்கப்படுகிறது. இதை 100 யூனிட்களாக உயர்த்தி யூனிட்டுக்கு ரூ. 1.10 என்று நிர்ணயித்துள்ளனர்.

 அதேபோல 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இனி யூனிட் கட்டணம் ரூ. 1.80 ஆக இருக்கும்.
 201 முதல் 250 வரை பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு ரூ. 3 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 251 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ. 3.50 கட்டணமாகும்.

 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் இனி யூனிட்டுக்கு ரூ. 5.75 கட்ட வேண்டும்.
 புதிய கட்டண விகிதத்தில், 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு இனிமேல் மானியம் கிடையாது. முழுக் கட்டணத்தையும் வாடிக்கையாளர்களே கட்ட வேண்டும்.
 100 யூனிட்டுக்கும் கீழ் பயன்படுத்துவோருக்கு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச மின் கட்டணமான ரூ. 40 என்பது ரத்து செய்யப்படுகிறது.

 குடிசைகளுக்கு தற்போது

சவூதியில் இறந்த தமிழக தொழிலாளரின் உடல் மீட்கப்பட்டது

ஜித்தா: சவூதி அரேபியாவில் தபூக்-மதீனா நெடுஞ்சாலையில் இறந்து கிடந்த நெல்லையைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளையின் உடலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தபூக் கிளை நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி காலை சவூதி அரேபியாவின் தபூக்- மதீனா நெடுஞ்சலையில் பணிபுரியும் இடத்தில் ஒருவர் இறந்து கிடப்பதாக செய்தி அறிந்த தபூக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்து கிடப்பவர் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கம்பனேரியைச் சேர்ந்த அழகர்சாமி பெருமாள் பிள்ளை என்பது தெரிய வந்தது.
 
  உடனே இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த தபூக் அப்துல் ரஹ்மான் இந்திய துணை தூதரகத்திற்கு தகவல் தெரிவித்தார். தூதரகத்தின் வழிகாட்டுதலின்படி இறந்தவரின் ஸ்பான்சருக்கு தகவல் அனுப்பப்பட்டது. பிறகு அவரது உடலை போலீசாரின் உதவியுடன் தபூக் மன்னர் காலீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபப்ட்டது. அங்கு பிரேத பரிசோதனைக்குப்பின் அவர் மாரடைப்பால் மேலிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. அழகர்சாமி அவர்களின் அனைத்து விபரங்களையும் சேகரித்து கடந்த 13/01/2012 அன்று இந்திய தூதரகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட்டது. இந்திய தூதரகத்தின் வழி காட்டுதலின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் கிளையின் மூலம் கடையநல்லுர், கிருஷ்ணாபுரத்திலுள்ள அழகர்சாமியின் மனைவி முருகேஷ்வரி, மகன் சுடலைதுரை மற்றும் உறவினர்களையும் சந்தித்து பவர் ஆப் அட்டர்னி கடிதம் பெறப்பட்டது. இதையடுத்து உடலை ஊருக்கு அனுப்ப ஜித்தாவிலுள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் சவுதி உள்துறை அமைச்சகத்திலும் உள்ள வேலைகள் விரைந்து

இலங்கைக்கு எதிரான கேலிக் கூத்தான தீர்மானம்!


இலங்கைக்கு எதிராக ஐநா சபையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் குறித்து காரசாரமான வாதப்பிரதி வாதங்கள் தூள் பறக்கின்றன. இந்த விவாதங்கள் அனைத்தும் உண்மைக்கு மாற்றமாகவும் உலக மக்களை ஏமாற்றும் வகையிலும் உள்ளன என்பது நமது நிலைப்பாடாகும்.

அமெரிக்காவும் அனைத்து உலக நாடுகளும் மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றன என்பதற்கும். தமிழர்கள் பெயரில் இயக்கம் நடத்தும் அனைவரும் தமிழர்களை முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர் என்பதற்கும்  ஆதாரமாக ஐநாவில் கொண்டு வந்த தீர்மானம் அமைந்துள்ளதால் அறிவுடைய மக்கள் யாரும் இது போன்ற கிறுக்குத்தனங்களை ஆதரிக்க முடியாது. மக்களை ஏமாற்றும் இது போன்ற தீர்மான்ங்களை சிந்தனையாளர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்பட்தை முதலில் நாம் தெளிவுபடுத்துகிறோம்.
நாட்டில் உள்ள ஊடகங்களும், தமிழக மக்களை உசுப்பேற்றி வந்த தமிழினத் தலைவர்களும் மக்களிடம் என்ன சொன்னார்கள்? இலங்கை அதிபர் ராஜ்பக்சே போர்க்குற்றம் செய்திருக்கிறார். நிராயுதபாணிகளைக் கொன்று குவித்துள்ளார். சரணடைய வந்த தமிழர்களை ஏமாற்றி சுட்டுத் தள்ளி இருக்கிறார்.  சிறுவர்களையும் பெண்களையும் கூட கொன்று குவித்துள்ளார். அவரைச் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர்க்குற்றம் செய்ததற்காக மரண தண்டனை வாங்கிக் கொடுக்கப் போவது போலவும் அந்த நேரம் நெருங்கி விட்டது போலவும் படம் காட்டினார்கள்.
திரும்பத் திரும்ப ஊடகங்கள் காட்டிய கோரக்காட்சிகளும் அதற்கு நியாயம் கிடைக்க உள்ளது என்ற பிரச்சாரமும் எந்த அளவுக்கு இருந்தன என்பதை நாம் அறிவோம். அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்ன என்பதை அறியாமலே இவர்களே தீர்மானத்தைத் தயாரித்தவர்கள் போல வீறாப்பு காட்டினார்கள். ஆனால் ஐநாவில் கொண்டு வந்த தீர்மானத்தில் இவர்கள் சொன்னது போல் ஒன்றுமே இல்லை.

தீர்மானத்தின் விவரம்:

2009 மே மாதத்தில் இலங்கை அரசு , விடுதலைப் புலிகள் இடையே போர் முடிவுக்கு வந்த நிலையில், போரின் இறுதிக் கட்டத்தில் ராணுவத்தினரின் மனித உரிமை மீறல்கள் மீது நடவடிக்கை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் போன்றவற்றுக்கு இலங்கை அரசுக்கு 3 ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்நாட்டு அரசு நியமித்த ‘தெரிய வந்த பாடங்கள்

கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

     பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றிட முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். முன்பெல்லாம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் கடைக்கு செல்லும் போது துணிப்பை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், இன்று எண்ணெய் கூட பாலித்தின் கவரில் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறிவிட்டது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வீதிகளில் எறியப்படுகிறது. இவை எளிதில் மக்குவதில்லை. இதனால் மண்ணில் மழை நீர் இறங்குவதை தடை செய்வதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதோடு, மண்ணின் வளமும் குறைந்து வருகிறது.

இயற்கை வளத்தை மாசுபடுத்தும் எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என இயற்கை வள ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றுள்ள ராஜேந்திர ரத்னு, மாவட்டத்தில் சுற்றுச் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதனையொட்டி சுற்றுச் சூழலையும், மண் வளத்தையும் பாழ்படுத்தி வரும் மக்கா தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாத மாவட்டமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார். அதனையொட்டி அனைத்து அரசு அலுவலக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு நோட்டீஸ் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக பள்ளி, கல்லூரி வளாகங்களிலும், அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கூடும் இடங்களான கோவில், பீச், பஸ் நிலையங்களில் தடை விதிக்க நடவடிக்கை

மார்ச் 27, 2012

சிதம்பரம் மருத்துவமனைக்கு ரூ.3 கோடியில் புதிய கட்டடம்: கட்டுமான பணி தீவிரம்

சிதம்பரம் :சிதம்பரம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் வகையில் பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் 3 கோடி ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அடுத்த அந்தஸ்து பெரிய மருத்துவமனையாக சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது.

    சிதம்பரத்தைச் சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர். இங்கு எக்ஸ்ரே, ரத்த வங்கி, மகப்பேறு, தோல் சிகிச்சை, பல் சிகிச்சை, கண் சிகிச்சை, நரம்பியல், எலும்பு முறிவு, ஓமியோபதி, சித்தா என தனித்தனி பிரிவுகள் உள்ளன. எந்த நேரத்திலும் ஆபரேஷன் செய்யும் வகையில் அறுவை அரங்கம் உள்ளது. தினமும் 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு மற்றும் பல்வேறு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் செலவில் 100 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டடம் கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கட்டி திறக்கப்பட்டது. மேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் 60 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டது. இருந்தும் அரசு மருத்துவமனையில் முகப்பு கட்டடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் புதிய கட்டடம் கட்ட கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் சிதம்பரம் மருத்துவமனையில் பழைமையான கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட

மார்ச் 26, 2012

தமிழக அரசின் பட்ஜெட் சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்

சென்னை:தமிழக அரசின் பட்ஜெட் இன்று வருவாய்த்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதில் சிறுபான்மை மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: சிறுபான்மையின மாணவ-மாணவியர்கள் கல்வியில் உயர்வு பெறும் வகையில் அரசு பல்வேறு கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

   2011‑2012 ஆம் ஆண்டில், 2,68,211 சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவி தொகையாக 39 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினைத் தொடர்ந்து செயல்படுத்த 2012‑2013 ஆம் ஆண்டிற்கு 55 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஹஜ் குழுவின் நிர்வாகச் செலவினங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத் தொகையை பத்து லட்ச ரூபாயிலிருந்து இருபது லட்ச ரூபாயாக இந்த அரசு உயர்த்தி ஆணையிட்டுள்ளது. 2012‑2013 ஆம் ஆண்டும், உயர்த்தப்பட்ட இதே அளவில், மானியத் தொகை வழங்கப்படும். உலமாக்களின்(முஸ்லிம் அறிஞர்களின்) மாத ஓய்வூதியம் 750 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2012-2013 ஆம் ஆண்டில் உலமாக்களின் நலவாரியத்திற்கு உதவி தொகையாக ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

மார்ச் 25, 2012

வங்கி காசோலை, வரைவோலை மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லும்!

புதுடில்லி, மார்ச் 25- வங்கிகளின் காசோலை, வரை வோலை மற்றும் வழங்கு ஆணை போன்றவைகள் இனி 3 மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்று, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவாக தொடங்க வேண்டும் இ.யூ.முஸ்லிம் லீக் தீர்மானம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற அரசின் முடிவை வரவேற்கிறோம். மின்தட்டுப்பாட்டை போக்க அணுமின்சாரம் தேவை என்பதை உணர்ந்து எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது 65வது ஆண்டு விழாவையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த வெற்றி விழா மாநாட்டினையும் எழும்பூரில் நேற்று நடாத்தியது. இவ்விழாவில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி., மாநில பொருளாளர் எஸ்.ஏ.ஷாஜகான், துணை தலைவர் வடக்கு கோட்டையார் வி.எம்.சைய்யது அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவ்விழாவில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவாக தொடங்க வேண்டும் என்ற அரசின் முடிவை வரவேற்கிறோம். மின்தட்டுப்பாட்டை போக்க அணுமின்சாரம் தேவை என்பதை உணர்ந்து எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று முஸ்லிம் லீக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

 மேலும்,‘கட்சியை அங்கீகரித்து ஏணி சின்னம் ஒதுக்க பாடுபட்ட மத்திய மந்திரி இ.அகமது, காதர் மொகிதீன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் முஸ்லிம்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவும் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் 5% உயர்த்த வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கேரளாவில் நடைபெறவுள்ள முஸ்லிம் லீக் மாநாட்டில் தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞர்களை பங்கேற்க செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மே மாதம் 1ம்தேதி சென்னையில் தொழிலாளர் உரிமை பேரணி மற்றும் மாநாடு நடத்தப்படும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முதல் முறையாக ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட்

சென்னை, மார்ச் 25: ஹஜ் பயணம் செல்பவர்கள் வசதிக்காக, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் ஏற்பாட்டில், சிறப்பு பாஸ்போர்ட் முகாம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, ஒரே இடத்தில் பாஸ்போர்ட் எடுப்பதற்கு வசதியாக, சென்னையில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.

 இதற்கான ஏற்பாடுகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் செய்திருந்தார். இந்த முகாமை தொடங்கிவைத்து, பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன் பேசும்போது கூறியதாவது. ஹஜ் பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பாஸ்போர்ட் அலுவலகம் விடுமுறை என்றபோதிலும், ஹஜ் புனித பயணம் செல்பவர்களின் வசதிக்காக, இன்று இந்த முகாம் நடத்தப்படுகிறது. ஹஜ் பயணம் செல்வோர் அதிக ஆர்வத்துடன் வந்துள்ளதால், 31-ந் தேதி(சனிக்கிழமை)யும் இதுபோன்று சிறப்பு முகாம் நடைபெறும். இது அல்லாமல், சாலிகிராமம் பாஸ்போர்ட் அலுவலகத்தில், 31-ந் தேதி வரையில், தினசரி மிகக்குறைந்த அளவில் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப மனுக்கள் பெறவும் ஏறுபாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செந்தில் பாண்டியன் கூறினார். நன்றி: தினதந்தி

மார்ச் 18, 2012

சங்கரன்கோவில்:இன்று வாக்குப்பதிவு!

திருநெல்வேலி:சங்கரன் கோவில் சட்டப்பேரவை தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடந்த அக்டோபர் மாதம் இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான கருப்பசாமி மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.13 வேட்பாளர்கள் இங்கு போட்டியிடுகின்றனர்.

ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.க – தி.மு.க இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும் ம.தி.மு.கவும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.தே.மு.தி.கவும் தனது வேட்பாளரை களமிறக்கியுள்ளது.

242 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. இத்தொகுதியில் மொத்தம் 2,06,087 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 1,02,921, பெண்கள் 1,03,166.

அனைத்து வாக்குச் சாவடிகளும் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் போலீசாருடன் மத்திய துணை ராணுவப் படையின் 6 கம்பெனிகளைச் சேர்ந்தோர், பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் 1,160 வாக்குச் சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தேர்வு பயம் போக்க ஹார்லிக்ஸ்,காம்ப்ளான்: பிரிட்டனில் தடைச்செய்த விளம்பரம் இந்தியாவில் நீடிப்பு!

புதுடெல்லி:தேர்வு காலம் துவங்கிய உடனே தொலைக்காட்சியிலும், இன்னும் பிற ஊடகங்களிலும் மிகச்சிறந்த புத்தி சக்தியும், ஞாபக சக்தியையும் வாக்குறுதி அளித்து பிரபல பானங்களான காம்ப்ளானும், ஹார்லிக்சும் பரப்புரைச் செய்யும் விளம்பரம் பிரிட்டனில் பல வருடங்களுக்கு முன்பே தடைச் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு காலம் துவங்கிய உடனே வழக்கமாக மாணவ, மாணவிகளுக்கு உருவாகும் கவலை, பயம், தைரியம் இழத்தல் ஆகியவற்றை மாற்றுவதற்கு இவ்விரு பானங்களையும் நிரந்தரமாக அருந்தினால் போதும் என்ற விளம்பரத்தை ஹார்லிக்சும், காம்ப்ளானும் அளித்து வருகின்றன.

நம்பமுடியாத ஆய்வுகளை முன்னிறுத்தி இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்வதாக கண்டுபிடித்ததை தொடர்ந்து பிரிட்டனில் அட்வர்டைசிங் ஸ்டாண்டர்ட் அதாரிட்டி 2008-ஆம் ஆண்டு ஹார்லிக்ஸ் விளம்பரத்திற்கு தடை ஏற்படுத்தியது. தினமும் 2 தடவை ஹார்லிக்ஸ் குடித்தாலே போதும் குழந்தைகள் புத்திசாலிகளாகவும், சக்தி வாய்ந்தவர்களாகவும் மாறிவிடுவார்கள் என்பது ஹார்லிக்ஸின் கண்டுபிடிப்பாகும்.

இஸ்லாமாஃபோபியா:ஐரோப்பாவின் அறியாமை – வாடிகன் கர்டினால்!

வாடிகன் சிட்டி:இஸ்லாத்தை குறித்த ஐரோப்பாவின் அச்சத்திற்கு அடிப்படை அறியாமையே என்று வாடிகனின் மத விவாத கவுன்சில் தலைவர் கர்டினால் ஜீன் லூயி டவ்ரான் கூறியுள்ளார். அல்ஜஸீரா தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அவர் இக்கருத்தை கூறினார்.

கர்டினால் ஜீன் லூயி டவ்ரான் கூறியது: நாகரீகங்கள் இடையேயான மோதலை தீர்க்க முடிந்தபோதிலும் அறியாமையின் மோதல் தொடரத்தான் செய்கிறது. வலதுசாரி சிந்தனையாளர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், அவர்களில் ஒருவர்கூட வாழ்க்கையில் திருக்குர்ஆனை திறந்து பார்க்கவோ, ஒரு முஸ்லிமை நேரடியாக சந்தித்துப் பேசியிருக்கவோ மாட்டார்கள். இவர்களை அதனை குறித்து புரியவைப்பது அவ்வளவு எளிதானது அல்ல.

மார்ச் 16, 2012

மத்திய பட்ஜெட் 2012-13 முக்கிய அம்சங்கள்

மொத்த செலவு ரூ 14.9 ட்ரில்லியனாக உயர்வு. கடந்த பட்ஜெட்டை விட இது 29 சதவீதம் அதிகம் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி).

விலை குறையும் பொருட்கள்: எல்சிடி, எல்இடி, சைக்கிள், சினிமா டிக்கெட், கேன்சர் மற்றும் எச்ஐவி மருந்துகள் விலை

விலை உயரும் பொருட்கள்: ஏஸி, பிரிட்ஜ், மொபைல் போன் கட்டணம், சிகரெட் விலை

தங்கம், பிளாட்டினம் மீதான சுங்க வரி 2 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்வு

வைரம் மீதான வரிகள் உயர்வு

விமானங்கள், ரயில்களுக்கான கருவிகள் இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து

சுத்திகரிக்கப்பட்ட தங்கம் மீதான சுங்க வரி 2 மடங்காக உயர்வு

மொபைல் போன் பாகங்கள் மீதான அடிப்படை சுங்க வரி ரத்து

ரூ.2 லட்சம் வருமானம் வரை வரி இல்லை: ரூ.10 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30% வரி!

டெல்லி: இன்று 2012-13ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று மக்களவையில் தாக்கல் செய்தார்.

இதில் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.8 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது நாம் எவ்வளவு ஊதியம் வாங்கினாலும் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சம் வரை வரி இல்லை.

ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு ஊதியத்துக்கு 10% வருமான வரி விதிக்கப்படும்.

ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 20% வரி விதிக்கப்படும்.

ரூ. 10 லட்சத்துக்கு மேலான ஆண்டு வருமானத்துக்கு 30% வருமான வரி விதிக்கப்படும்.

இதுவரை ரூ.1.8 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி இல்லை. ரூ. 1.8 லட்சம் ரூ. 5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீதமும், ரூ. 5 முதல் ரூ. 8 லட்சம் வரையிலான பட்ஜெட்டுக்கு 20 சதவீதமும், ரூ. 8 லட்சத்துக்கு மேலான வருமானத்துக்கு 30 சதவீதமும் வரி விதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேரடி வரிகள் சட்ட மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, வருமான வரி விலக்கு உச்ச வரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்தும்படி சிபாரிசு செய்திருந்தது. ஆனால், நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பிரணாப் முகர்ஜி, அதை ஏற்காமல் விட்டுவிட்டார்.

ஈரான் உறவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

நியூயார்க்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் நிபந்தனையை ஏற்க இந்தியா மறுக்கும்நிலையில் பொருளாதாரத் தடை விதிக்க நேரிடலாம் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இத்தகைய எச்சரிக்கைகளுக்குப் பின்னணியில் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு குழுவினரே காரணம் என்று அமெரிக்காவுக்காக இந்திய தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.

மார்ச் 15, 2012

ரெயில்வே பட்ஜெட் தாக்கல்:பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அனைத்து வகுப்புக் கட்டணமும் உயர்வு!

புதுடெல்லி:தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள ரெயில்வே அமைச்சர் திரிவேதி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அனைத்து வகுப்பு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2 பைஸா முதல் 30 பைஸா வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக ரெயில்வே டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.

2012-13 ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்:

3ம் வகுப்பு ஏசி வகுப்பு கட்டணம் கிலோ மீட்டருக்கு 10 பைசா உயர்வு.

முதல் வகுப்பு ஏசி கட்டணம் கிலோ மீட்டருக்கு 30 பைசா உயர்வு.

300 கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்துக்கான கட்டணம் ரூ. 12 அதிகரிப்பு.

புறநகர் ரயில் கட்டணங்கள் கி.மீக்கு 2 பைசா உயர்வு

பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.5 ஆக உயர்வு

இந்தியாவில் 1,70,000 ஆயிரம் பேருக்கு ஹஜ் செல்ல வாய்ப்பு!

புதுடெல்லி:சவூதி அரேபியாவுடன் இவ்வாண்டிற்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் 1,70,000 பேருக்கு இம்முறை இந்தியாவில் இருந்து புனித ஹஜ்ஜிற்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெளியுறவு துணை அமைச்சர் இ.அஹ்மதின் தலைமையில் உயர்மட்டக்குழு சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார துறை அமைச்சர் டாக்டர் பந்தர் பின் முஹம்மது பின் ஹம்ஸா அஸத் ஹாஜருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவில் இருந்து வரும் ஹஜ்ஜிற்கான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை பரிசீலித்து 10 ஆயிரம் கூடுதலாக ஒதுக்கீட்டை அனுமதிக்கவேண்டும் என்று பேச்சுவார்த்தையில் இந்திய குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இதுத்தொடர்பான தீர்மானம் ஹஜ்ஜையொட்டிய கட்டத்தில் உருவாகும்.

புனித பயணிகளுக்கு மெட்ரோ ரெயில் வசதியை அனுமதிக்கவேண்டும் என்றும் இந்திய குழுவினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை பின்னர் பரிசீலிக்கப்படும்.

மார்ச் 14, 2012

முக்கிய எதிரி இஸ்ரேல் – எகிப்து பாராளுமன்றத்தில் தீர்மானம்!

கெய்ரோ:இஸ்ரேல் முதல் எதிரி என்று அறிவிக்கும் தீர்மானம் எகிப்து பாராளுமன்றம் அங்கீகரித்துள்ளது.

இஸ்ரேல் தூதரை நாட்டைவிட்டு வெளியேற்றவும், இஸ்ரேலுக்கான எரிவாயு ஏற்றுமதியை நிறுத்தவும் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. மக்கள் அவையில் அரபு விவகார கவுன்சில் இத்தீர்மானத்தை தயாரித்தது. பாராளுமன்ற எம்.பிக்கள் ஒரு மனதாக இத்தீர்மானத்தை ஆதரித்தனர்.

‘புரட்சிக்கு பிந்தைய எகிப்து ஒருபோதும் சியோனிச தேசத்தை நண்பராகவோ, பங்காளியாகவோ, கூட்டணி நாடாகவோ ஆகாது. எகிப்து மற்றும் அரபுலகின் முதல் எதிரியாகவே இஸ்ரேலை நாங்கள் பார்க்கிறோம். இஸ்ரேலை எதிரியாக கருதி அவர்களுடன் ஏற்படுத்திய அனைத்து ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய எகிப்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம்’ இவ்வாறு அத்தீர்மானம் கூறுகிறது.

1979-ஆம் ஆண்டு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எகிப்து, இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது. இஸ்ரேலுக்கு இயற்கை எரிவாயுவை அளிக்க இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இஸ்ரேலுக்கு தேவையான 40 சதவீத எரிவாயுவை அளிப்பது எகிப்து ஆகும். இந்த ஒப்பந்தத்தை ரத்துச்செய்ய பெரும்பாலான எகிப்திய மக்கள் கோரிக்கை விடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மார்ச் 12, 2012

2014-ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமம்- ஆர்.எஸ்.எஸ்

புதுடெல்லி:2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பா.ஜ.க ஆட்சியை பிடிப்பது சிரமமான காரியம் என்று சங்க்பரிவாரங்களின் தலைமை அமைப்பான ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகாரப்பூர்வ ஏடுகளான ‘ஆர்கனைசர்’ மற்றும் ‘பாஞ்சசன்யா’ ஆகியவற்றின் தலையங்கங்களில் இது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

‘உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸின் அதே நிலைமை பா.ஜ.கவுக்கும் ஏற்பட்டுள்ளது. தொண்டர்களை விட பா.ஜ.கவில் தலைவர்கள்தாம் அதிகம். உ.பியில் மக்களுடனான உறவை பா.ஜ.க இழந்துவிட்டது’ என ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது.

2007 உ.பி சட்டப்பேரவை தேர்தலில் பெற்ற சீட்டுகளை விட தற்பொழுது 4 இடங்கள் குறைவாகவே பா.ஜ.க வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. உ.பி தேர்தலில் 47 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்தன.

மார்ச் 11, 2012

விக்கல் வருவது ஏன்?..

விக்கல் வருவது இயல்பு காரமாக உள்ள உணவுகள் சாப்பிடும்போது விக்கல் வருவது இயல்பு. சர்க்கரை நோய், உடல் பருமன், அல்சர், நரம்பு பிரச்னை, வயிற்றில் அறுவை சிகிச்சை, பக்கவாதம், அல்சர் நோய்களுக்காக மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும் விக்கல் வர வாய்ப்புள்ளது. விக்கல் தொடர்ந்து வரும் போது கண் வறண்டு போதல் மற்றும் மயக்கம் ஏற்படலாம்.

இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளாக சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகளவில் எடுத்துக் கொள்ளலாம். மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்க்கவும். வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

நார்ச்சத்து, புரதம் அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்க்கவும். சப்பாத்தி, பரோட்டா, எண்ணெயில் பொரித்தவற்றை கூடுமானவரை தவிர்க்கவும். வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். தக்காளி, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா ஆகியவற்றில் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது.

சூடான உணவுகள் தவிர்த்து எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவும். தினமும் 4 முதல் 8 லிட்டர் தண்ணீர் வரை அருந்தவும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

மேற்கு வங்கம் : பஞ்சம்-பட்டினியை சமாளிக்க கிட்னியை விற்கும் மக்கள்!

மேற்குவங்காள மாநிலத்தில் பசியை போக்க ஆண்களும், பெண்களும் "கிட்னி"யை விற்கும் அவலம் நிலவி வருகிறது.

மேற்கு வங்காள மாநிலத்தில் பல கிராமங்களில் வறட்சியும், பஞ்சமும் தலை விரித்தாடுகிறது. அரசியல்வாதிகள் வாய் கிழிய பேசினாலும் இவர்களின் அவல நிலையை போக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

இதனால் சாராயம் காய்ச்சி விற்பது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. சில கிராம மக்கள் பஞ்சத்தையும், பட்டினியையும் சமாளிக்க தங்களது கிட்னியை விற்பனை செய்கின்றனர்.
இதனால் சில கிராமங்களை 'கிட்னி கிராமம்' என்று அழைக்கின்றனர். 

அந்த கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலானோர், ஒரு கிட்னியுடன் தான் உயிர் வாழ்கின்றனர். வடக்கு டியாஞ்ச்பூர் மாவட்டத்தில் உள்ள பிந்தால் கிராமம், கிட்னிக்கு பெயர் பெற்ற கிராமம் ஆகும்.
இங்குள்ள மக்களிடம் இருந்து பெறப்படும் கிட்னி மாநில தலைநகர் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
கிட்னி விற்பனைக்கு ஏற்பாடு செய்வதற்கு என்றே புரோக்கர்கள் செயல்படுகின்றனர். அவர்கள் கிட்னி ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை விலை நிர்ணயிக்கின்றனர். ஆனால், கிட்னி கொடுக்கும் கிராம மக்களுக்கு சொற்ப தொகையே தருகின்றனர். அதிகபட்சமாக 80 ஆயிரம் ரூபாய் வரைதான் கொடுக்கின்றனர்.

ஹிந்துத்துவா தீவிரவாதம், பொறுப்பற்ற ஊடகங்கள்: இந்தியாவின் சூப்பர் பவர் கனவு அம்பேல்! ஆய்வில் தகவல்!

லண்டன்:உலகில் வல்லரசாக மாறவேண்டும் என்று கனவு காணும் இந்தியாவின் விருப்பம் அவ்வளவு எளிதாக நிறைவேறாது என்றும், அதற்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கணாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயன்ஸ் ஆய்வு இந்தியாவின் கனவுகளுக்கு கரி நிழலை சாத்துகிறது.

ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி ஆகிய விஷயங்களில் இந்தியா வெகுவாக முன்னேறிய பொழுதும் உள்நாட்டு பிரச்சனைகள்தாம் இந்தியாவின் சூப்பர் பவர் நம்பிக்கைக்கு தடைகற்களாக மாறியுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

தீவிரமான ஊழல், திறமையற்ற ஆட்சியாளர்கள், பணக்காரர்-ஏழை இடைவெளி, சமூக மோதல்கள், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், மத தீவிரவாதம் ஆகியன பலகீனத்திற்கு காரணமான காரணிகளாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரம், பாதுகாப்பு, நிர்வாகம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், சமூகம் ஆகிய துறைகளில் விரிவான ஆய்வை நடத்தி ஒன்பது வல்லுநர்கள் இணைந்து இந்தியா அடுத்த வல்லரசா? என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை தயாரித்துள்ளனர்.

மார்ச் 10, 2012

ஆன்லைன் மூலம் ரேஷன் அட்டை புதுப்பிக்கும் வசதி! மக்கள் வரவேற்பு

சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டதின் கீழ் வழங்கப்படும் குடும்ப (ரேஷன்) அட்டைகளை நிமிட நேரத்தில் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ள அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆன்லைன் வசதிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கார்டுகள், ஸ்மார்ட் கார்டு முறைக்கு மாற்றப்பட உள்ளன ஆனால். இதற்கு போதிய அவகாசம் தேவைப்படுவதால் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை புதுப்பித்து இந்த 2012 ஆம் ஆண்டு இறுதி வரை உபயோகப்படுத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் சென்று குடுமப அட்டையை கொடுத்து 2012ம் ஆண்டுக்கான இணைப்புத்தாளை பொருத்தி, கடையில் கையொப்பம் மற்றும் ‘சீல்’ பெற வேண்டும். அப்போதுதான் குடும்பஅட்டைகள் செல்லுபடியாகும் என்று அரசு அறிவித்தது.

புதுப்பித்தலுக்கு முதலில் ஜனவரி 31, 2012 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் புதுபித்தல் நிறைவடையாததை தொடர்ந்து அந்த காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. தற்போது மார்ச் 31, 2012 வரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில். பொதுமக்கள் நலன் கருதி ஆன்லைனில் புதுப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் பொது விநியோகத் துறை சார்பில் www.consumer.tn.gov.in என்ற பெயரில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் ‘கார்டு புதுப்பித்தல் 2012’ என்ற பகுதிக்கு சென்று ரேஷன் கார்டின் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பிறகு அட்டையின் நிறம், குடும்ப உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கப்பட வேண்டியவர், சமையல் எரிவாயு விவரம் போன்ற தகவல்களோடு, தொலைபேசி எண்களையும் இணைய தளத்தில் பூர்த்தி பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி யார் என்ற விவாதம் விறுவிறுப்பு: பிரபலமானவரை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு?

புதுடில்லி : உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக, ஜனாதிபதி தேர்தல் குறித்த விஷயம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரும் ஜூலை மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், அரசியல் பின்னணி உடையவர், அடுத்த ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவாரா அல்லது அரசியல் பின்னணி அல்லாத பிரபலமான நபர், தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் ஒரு வழியாக முடிந்துவிட்டன. குறிப்பாக, உ.பி., மாநில தேர்தல் முடிவுகளை பெரிதும் எதிர்பார்த்த காங்கிரசுக்கு, பலத்த அடி கிடைத்துள்ளது. மற்றொரு தேசியக் கட்சியான பா.ஜ.,வுக்கும், சொல்லிக் கொள்ளும்படியாக வெற்றி கிடைக்கவில்லை. மாநில கட்சிகளின் கைதான், இந்த தேர்தலில் ஓங்கியிருந்தது.உ.பி.,யில் சமாஜ்வாதி கட்சிக்கு கிடைத்த வெற்றி, தேசியக் கட்சிகளான காங்கிரசுக்கும், பா.ஜ.,வுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தங்கள் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால், மாநில கட்சிகளின் உதவி, இந்த இரண்டு கட்சிகளுக்கும் கட்டாயம் தேவை.

இந்திய சுற்றுலா துறையில் 2.5 கோடி பேருக்கு வேலை

புதுடில்லி :

"வரும் 2016ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை 12 சதவீத வளர்ச்சியை எட்டி விட்டால், கூடுதலாக, இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விட முடியும்' என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் தெரிவித்தார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் பேசியதாவது: இந்தியா ஆற்றல் மிக்க சுற்றுலாத்துறையை கொண்டுள்ளது. 

இத்துறை வரும் 2016ம் ஆண்டுக்குள், 12 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டி விட்டால், இந்த துறை 2016ம் ஆண்டுக்குள் இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விடமுடியும். இந்த இலக்கை எட்ட, வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கான சுற்றுலா போக்குவரத்தை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நாட்டில் 2010ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, 11.8 சதவீதமாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டு, இந்தியாவுக்கு வெளிநாடு சுற்றுலா பயணிகளாக 60 லட்சம் பேர் வந்துள்ளனர்.இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 70 லட்சமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுபோத்காந்த் சகாய் பேசினார்.

மார்ச் 07, 2012

மருத்துவக் காப்பீடுத் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஏற்கனவே பயன்பெற்ற பயனாளிகளுக்கு காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 23ம் தேதி முதல், விருத்தாசலம் வட்டத்தில் 28ம் தேதி முதல் காப்பீட்டுத் திட்ட முகவர்களால் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
பயனாளிகள் அனைவரும் ஒப்புதல் அளித்து அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள விடுபட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டை பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தினை தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் புகைப்பட அலுவலகத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உஸாமாவின் உடல் அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது – விக்கிலீக்ஸ்

லண்டன்:அல்காயிதா தலைவர் உஸாமா பின்லேடனின் உடல் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றிருக்கலாம் என்று விக்கிலீக்ஸின் தகவல் கூறுகிறது.

பாகிஸ்தானில் அபோட்டாபாத்தில் அமெரிக்க நேவி ஸீல் கமாண்டோக்கள் உஸாமாவை கொலைச் செய்த பிறகு அவரது உடலை அமெரிக்காவிற்கு கொண்டு சென்றதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தனியார் அமெரிக்க ஏஜன்சியான ஸ்ட்ராட்ஃபாரின்(Stratfor) ரகசிய இ-மெயில் களிலிருந்து விக்கிலீக்ஸ் இதனை தெரிவிக்கிறது.

இந்தியாவுக்கு மின்சாரம் தர தயார் – ஈரான் அறிவிப்பு

டெஹ்ரான்:எரிவாயு குழாய் திட்டம் முடங்கிய சூழலில் அதற்கு பதிலாக இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்தியாவிற்கு மின்சாரத்தை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை குறித்து ஈரான் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் எண்ணெய்துறை அமைச்சர் மஜீத் கூறியுள்ளார்.

எரிசக்திகளுக்காக புதிய திட்டங்களை துவக்கும் இந்தியாவுக்கு ஈரானின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார். ஈரானில் இருந்து மின்சாரத்தை இறக்குமதிச் செய்வதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அமைச்சரவையின் அஜண்டாவில் இவ்விஷயம் தொடர்பாக உட்படுத்தியிருப்பதாகவும் ஈரானின் அமைச்சர் கூறுகிறார்.

ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் புதிய எரிசக்தி நிலையம் நிறுவ திட்டமிட்டுள்ளதாக மஜீத் கூறினார்.

விவசாயம், எண்ணெய், இயற்கை எரிவாயு, பசுமை எரிபொருள் ஆகிய துறைகளில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும், ஈரானும் கடந்த ஜனவரியில் தீர்மானித்திருந்தன.

டெஹ்ரானில் இந்திய தூதர் சி.பி.ஸ்ரீவஸ்தவா, ஈரான் வர்த்தக வளர்ச்சிப் பிரிவு தலைவர் மாஜித் ஹிராயத் ஆகியோர் இதுக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

அயோத்தியில் பா.ஜ.கவுக்கு பின்னடைவு!

லக்னோ:வகுப்புவாத அஜண்டாவை துருப்புச சீட்டாக பயன்படுத்தி உ.பி தேர்தல் களத்தில் இறங்கிய பாரதீய ஜனதா கட்சிக்கு 3-வது இடத்துடன் திருப்தி அடையவேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த அயோத்தியிலும் அக்கட்சி அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்துள்ளது. 1992-ஆம் ஆண்டிற்கு பிறகு முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சி அயோத்தியில் தோல்வியை தழுவியுள்ளது.

பா.ஜ.க வேட்பாளர் லல்லு சிங் சமாஜ்வாதி கட்சியின் தேஜ் நாராயணன் பாண்டேயிடம் 5,405 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்:

பாண்டே(55, 262), லல்லுசிங்(49,857), வேத் பிரகாஷ் குப்தா-பி.எஸ்.பி(33481), குல்ஷன் ஸ்வதா(22,023), ராஜேந்திர பிரதாப் சிங்-காங்கிரஸ்(9,710)

மார்ச் 06, 2012

உ.பி.,யில் ஆட்சி அமைக்கிறது சமாஜ்வாடி

லக்னோ : 
ஆடம்பர செலவில் சிலைகள் அமைத்தல், சட்டம் ஒழுங்கை பாதுகாத்திட தவறியது, தேசிய சுகாதார திட்டத்தில் ஊழல் , பந்தா அரசியல் என பல்வேறு பிரச்னைகளுடன் தேர்தலை சந்தித்த மாயாவதி கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர், இளம் தலைமுறை அரசியலுக்கு மக்கள் வரவேற்பு அளித்திருக்கின்றனர் என்றாலும் தேசிய கட்சியான காங்கிரசின் இளவரசர் என்றழைக்கப்படும் ராகுலின் பிரசாரம் எடுபடாமல் போனது.

இம்மாநிலத்தில் இவரது பிரசாரம் காரணமாக காங்கிரசுக்கு பெரும் அளவில் ஆதாயம் கிட்டவில்லை என்று சொன்னாலும் கடந்த 2007 தேர்தலை விட 22 தொகுதிகள் தற்போது 37 தொகுதிகளாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மற்றபடி ஆளும் கட்சியாகவோ , எதிர்கட்சியாகவோ வர முடியாமல் போனது. நடந்து முடிந்திருக்கும் 5 மாநில தேர்தலில் ஏற்கனவே ஆட்சியில் இருந்த கோவாவையும் காங்., இழக்கிறது. மணிப்பூரை மட்டும் தக்க வைத்து கொள்ளும் . மாயாவதியின் சறுக்கலுக்கு என்ன காரணம் ? : இன்றைய தேர்தல் முடிவின் படி உ .பி., மாநிலத்தில் ஆளும் பகுஜன்சமாஜ் கட்சிக்கு ( மாயாவதி ) சம்மட்டி அடி விழுந்துள்ளது. 

நினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்

மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது.

கனடாவின் மொன்றியல் பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.

ஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களை முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேசனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்

உத்தர பிரதேசம்   
தற்போதைய தகவல்: - 403/403
கட்சிகள்முன்னிலைமுடிவுகள்
சமாஜ்வாடி
0
224
பகுஜன் சமாஜ்
0
80
பா.ஜ.,
0
47
காங்கிரஸ்; மற்றவை
0
52
உத்தரகண்ட்   
தற்போதைய தகவல்: - 70/70
கட்சிகள்முன்னிலைமுடிவுகள்
பா.ஜ.,031
காங்கிரஸ்032
பகுஜன் சமாஜ்03
மற்றவர்கள்04
பஞ்சாப்    
தற்போதைய தகவல்: - 117/117
கட்சிகள்முன்னிலைமுடிவுகள்
அகாலி - பா.ஜ.068
காங்கிரஸ்046
மற்றவர்கள்03
மணிப்பூர்    
தற்போதைய தகவல்: - 60/60
கட்சிகள்முன்னிலைமுடிவுகள்
காங்கிரஸ்042
மற்றவர்கள்011
திரிணமுல் காங்.,07
கோவா    
தற்போதைய தகவல்: - 40/40
கட்சிகள்முன்னிலைமுடிவுகள்
பா.ஜ.,026
காங்கிரஸ்09
மற்றவர்கள்05

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகள் சர்க்கரை நோயை குணப்படுத்தும் உணவுப் பொருட்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டனர்.

பஞ்சாபில் வரலாறு படைத்த பாதல்- முதல் முறையாக ஆட்சியை தக்க வைக்கும் அகாலிதளம்!

சண்டிகர்: பஞ்சாபில் முதல் முறையாக தனது ஆட்சியை தக்க வைத்து புதிய சரித்திரம் படைத்துள்ளது சிரோமணி அகாலிதளம். மேலும், 5வது முறையாக பிரகாஷ் சிங் பாதல் முதலமைச்சராகிறார். இதுவும் ஒரு சாதனையே.

2012 சட்டசபைத் தேர்தலில் வரலாறு படைக்கும் வெற்றியை பாதல் தலைமையிலான கூட்டணி பஞ்சாபில் பதிவு செய்துள்ளது. ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை நிலவி வந்த போதிலும் அதையும் மீறி, காங்கிரஸின் கடும் எதிர்பார்ப்புகளையும் மீறி அங்கு ஆட்சியை தக்க வைக்கிறார் பாதல். இப்படி ஆட்சியை தக்க வைப்பது அகாலிதளத்திற்கு இதுவே முதல் முறையாகும்.

பஞ்சாபைப் பொறுத்தமட்டில் இதுவரை மொத்தம் 30 முறை முதல்வர்கள் பதவியேற்றுள்ளனர். அதில் 22 முறை காங்கிரஸ் அல்லது சிரோமணி அகாலிதளம் ஆகியவற்றைச் சேர்ந்த யாராவது ஒருவர்தான் முதல்வராகியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளைத் தவிர அதிக அளவில் அங்கு ஆட்சி புரிந்திருப்பவர் யார் என்றால் குடியரசுத் தலைவர்தான். பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 8 முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ் தட்டுப்பாட்டால் அரசுக்கு புது தலைவலி : மின்சார அடுப்பிற்கு மாறும் மக்கள்

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் காஸ் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் நுகர்வோர்கள் வேறு வழியின்றி மின்சார அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே மின்வெட்டில் தவிக்கும் தமிழகத்திற்கு மேலும் ஒரு "தலைவலி' ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 3 லட்சம் வீட்டு உபயோக காஸ் இணைப்புகள் உள்ளன. இதற்காக இந்தியன் ஆயில் கார்பரேஷன் சார்பில் கடலூர் மற்றும் நெய்வேலியில் தலா மூன்றும், விருத்தாசலம், சிதம்பரத்தில் தலா ஒரு ஏஜன்சியும், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் சிதம்பரம், கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் தலா ஒரு ஏஜன்சியும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில் பண்ருட்டியில் இரண்டும், நெய்வேலி மற்றும் காட்டுமன்னார்கோவிலில் தலா ஒரு ஏஜன்சி என 15 காஸ் ஏஜன்சிகள் இயங்கி வருகின்றன.

மாணவர்களை பிரம்பால் அடிக்கக் கூடாது: ஆசிரியர்களுக்கு குழந்தைகள் உரிமை கமிஷன் கட்டுப்பாடு

மத்திய அரசு அமைப்பான தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷனின் 5-வது நிறுவன தின கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பள்ளிக் குழந்தைகளுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து நாடு தழுவிய அளவில் நடந்த கருத்து கணிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

7 மாநிலங்களில் 6,632 மாணவர்களிடம் கேட்கப்பட்ட கருத்து கணிப்பில் பெரும்பாலான மாணவர்கள் தாங்கள் மனரீதியாக அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்து இருந்தனர். இதையடுத்து ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு விதித்து வழிகாட்டி அறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி பள்ளியில் குழந்தைகளை பிரம்பால் அடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. பிரம் படி தண்டனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பள்ளிகள் தோறும் சிறப்பு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்.

மார்ச் 04, 2012

புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, மார்ச். 3-

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மார்ச் 03, 2012

சம்பளத்தை மனைவியிடம்தான் தருவோம்: இந்தோனேசியா அரசு அடம்

இந்தோனேசியா : இந்தோனேசியா நாட்டில் ஆண் அரசு ஊழியர்களின் சம்பளப்பணம் முழுவதும் அவர்களின் மனைவியிடம் தரப்படுகிறது. ஆண்கள் தங்களின் சம்பளம் முழுவதையும் வேறு தொடர்புகளை செலவழிப்பதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தோனேசியாவில் அரசு பணிகள் மேற்கொள்ளும் ஆண்கள் தங்களது சம்பள பணத்தை கள்ளக்காதலி மற்றும் விபசாரிகளிடம் செலவு செய்வதாக கூறப்படுகிறது. கணவர்களின் ஊதாரி தனமான செலவினால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுவதாக அரசு ஊழியர்களின் மனைவிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வடக்கு சுலாவேசி தீவில் உள்ள உகாரண்டலோ பகுதி நிர்வாகத்தில் அதிக அரசு ஊழியர்கள் கள்ள தொடர்பில் ஈடுபட்டு பணத்தை செலவிடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அரசு ஊழியர்களின் சம்பள பணத்தை அவர்களது மனைவி மார்களிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து மனைவிமார்களின் பெயரில் பாங்கிகளில் கணக்கு தொடங்கப்பட்டு சம்பள பணம் அதில் போடப்பட்டது. இந்த நடைமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. தற்போது 3,200 அரசு ஊழியர்களின் சம்பள பணம் அவர்களது மனைவிகளிடம் இதுபோன்று நேரடியாக ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

நாடுமுழுவதும் அமல்

ஆண் அரசு ஊழியர்களின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் அதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ரிப்ளி கட்லி கூறியுள்ளார். இந்த நடைமுறை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 02, 2012

வண்டியில போறீங்களா... கொஞ்சம் இதைப் படிச்சுட்டுப் போனா நல்லது!

டெல்லி: சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.

இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எதெல்லாம் சாலை விதிமீறல்கள்:

1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.
2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.
3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.
4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது.
5. ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.
6. நம்பர் பிளேட் இல்லாமை.
7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது.
8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.
9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது.
10. இரவில் லைட் போடாமல் செல்வது.

ஆங்கில வழிக் கல்வியில் சேரும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லி: நாட்டில், ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, முதன்முறையாக 2 கோடியைத் தாண்டியுள்ளது.

கடந்த 2003-04 ஆண்டு எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், இந்த 2010-11 ஆண்டின் எண்ணிக்கையானது 274% அதிகம். இந்தியாவில், இந்தி வழிக் கல்விக்கு அடுத்து, ஆங்கில வழிக் கல்வியே அதிகக் குழந்தைகளால் கற்கப்படுகிறது. வங்காளம் மற்றும் மராத்திய மொழிகளை இது பின்னுக்கு தள்ளிவிட்டது. கல்வி, திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசியப் பல்கலைக்கழகம் (National university of Education, planning and Administration - NUEPA) என்ற அமைப்பின், கல்விக்கான மாவட்ட தகவல் அமைப்பு(District information system for Education - DISE) மேற்கொண்ட, நாடு தழுவிய பள்ளி சேர்க்கை ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அதேசமயம், இந்த ஆய்வறிக்கை இனிமேல்தான் வெளியிடப்படும்.

இந்தி, பெங்காலி, மராத்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழி வழிக் கல்வியில் நடைபெறும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2010-11 ம் ஆண்டு கணக்கெடுப்பில் அதிகரித்திருந்தாலும், ஆங்கில வழிக் கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அனைத்தையும்விட அதிகரித்திருக்கிறது.

சம்ஜோதா:மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளம் தெரிந்தது!

புதுடெல்லி:
68 பேரின் மரணத்திற்கு காரணமான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் ஒரு ஹிந்துத்துவா தீவிரவாதியின் அடையாளத்தை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டறிந்துள்ளது.

மத்தியபிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திர பஹல்வான் என்ற சமந்தர் என்பவர் ரெயிலில் குண்டுவைத்த நான்குபேரில் ஒருவர் என்பதை என்.ஐ.ஏ கண்டுபிடித்துள்ளது.

மர்மமான முறையில் கொலைச் செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியின் உத்தரவின்படி பஹல்வான் ஜம்முவிற்கு சென்று பயிற்சி பெற்றுள்ளார். கடந்த மாதம் கைது செய்யப்பட்ட கமல் சவுகானிடம் விசாரணை நடத்தியபொழுது பஹல்வான் குறித்து தகவல் என்.ஐ.ஏவுக்கு கிடைத்தது.

சிரியா:மரண எண்ணிக்கை 7500-ஐ தாண்டியது!

டமாஸ்கஸ்:சிரியாவில் சாதாரண மக்கள் மீது கடந்த 11 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் தாக்குதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 7500ஐ தாண்டியுள்ளது. பெண்களும், குழந்தைகளும் உள்பட தினந்தோறும் 100 பேர் பலியாகி வருவதாக ஐ.நா அண்டர் செகரட்டரி ஜெனரல் லேன் பாஸ்கோ அறிவித்துள்ளார்.

குண்டுவீச்சு தொடரும் ஹிம்ஸில் செவ்வாய்க்கிழமை 104 பேர் கொல்லப்பட்டனர். ஹமாவில் நடந்த கூட்டுப் படுகொலைகளில் 35 பேரும், பாப் அம்ரில் 26 பேரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, சிரியா அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேவேளையில், சிரியாவின் பிரச்சனையில் அல்காயிதா ஆதாயம் தேட முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. சிரியா எதிர்ப்பாளர்களுக்கு அல்காயிதாவின் தற்போதைய தலைவராக கருதப்படும் அய்மான் அல் ழவாஹிரி ஆதரவு தெரிவித்திருந்தார்.

மார்ச் 01, 2012

1 லட்சம் ப்ரீ ஆடர்களை எட்டிய பிஎஸ்என்எல் டேப்லட்கள்!

தொலைபேசி மற்றும் ஆன்லைன் மூலமாக 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்றுள்ள பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 3 புதிய குறைந்த விலை டேப்லட்கள்.

புதிய தொழில் நுட்பம் கொண்ட ஆயிரம் ஆயிரம் டேப்லட்கள் இப்போது விற்பனை சந்தையில் இடம் பெற்று வருகிறது. இதில் 3 புதிய குறைந்த விலை கொண்ட டேப்லட்களை வெளியிட்டு உள்ளது பிஎஸ்என்எல் தொலை தொடர்பு நிறுவனம்.

இதை தொடர்ந்து குறைந்த விலை கொண்ட இந்த 3 புதிய டேப்லட்களும் 1 லட்சம் ப்ரீ ஆடர்களை பெற்று இருப்பதாக பேன்ட்டல் டெக்னாலஜியின் மேனேஜிங் டைரக்டரான வீரேந்திர சிங் கூறியுள்ளார்.

உயர்ந்த தொழில் நுட்பமாக இருக்க வேண்டும் அதே சமயம் குறைந்த விலை கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். இதை மனதில் கொண்டு பல நிறுவனங்கள் இதற்கு தகுந்த வகையில் தொழில் நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர்.

"கலை, அறிவியல் படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு

சென்னை: கலை, அறிவியல் படிப்புகளை முடித்து, வேலை வாய்ப்பு கிடைக்காத, 60% மாணவர்களுக்கு, உரிய வேலை வாய்ப்புக்கான புதிய திட்டங்களை வகுத்து, அது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் விரைவில் வழங்குவேன்.

இவ்வாறு கூறியிருப்பவர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் புதிய துணைத் தலைவர் சிந்தியா பாண்டியன்.

முந்தைய ஆட்சியில், உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ராமசாமி இருந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இவரது பதவிக் காலம் முடிந்தது. இதையடுத்து, நெல்லை மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தரான சிந்தியா பாண்டியனை, உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக நியமித்து, கவர்னர் உத்தரவிட்டார்.

கல்வித்தரம் உயர...

சென்னை, காமராஜர் சாலையில் உள்ள உயர்கல்வி மன்றத்தில், துணைத் தலைவர் பதவியை ஏற்ற பின், சிந்தியா பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: உயர் கல்வித் துறையில் ஏராளமான பணிகள் நடக்கின்றன. இன்னும், அதிகமான பணிகள் செய்ய வேண்டியுள்ளது. 18 - 23 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், உயர்கல்வி கற்பதை அதிகரிக்க வேண்டும் என, முதல்வர் தெரிவித்துள்ளார்.

பாப்ரி மஸ்ஜித்:அகழ்வாராய்ச்சித்துறை அறிக்கையை வெளியிட சி.ஐ.சி உத்தரவு!

புதுடெல்லி:அயோத்தியில் பாபர் மசூதி உரிமையியல் வழக்கில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி பற்றிய அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்புக்கு (ஏ.எஸ்.ஐ.) மத்திய தகவல் உரிமை கமிஷன்(சி.ஐ.சி) உத்தரவிட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு, உயர் நீதிமன்றத்தின் தடை இருக்கும் பட்சத்தில், அந்த உத்தரவின் நகலை மனுதாரரான சுபாஷ் அகர்வாலுக்கு அளிக்க வேண்டும் என்று தலைமைத் தகவல் கமிஷனர் சத்யானந்த மிஸ்ரா கூறியுள்ளார்.

அலாகாபாத் நீதிமன்ற உத்தரவுப்படி, அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

சிரியாவில் மனித உரிமை மீறல்களை தடுக்க சர்வதேச சமூகம் தயாராகவேண்டும் – கத்தர் கோரிக்கை!

ஜெனீவா:சிரியாவில் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவும், அங்குள்ள குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் சர்வதேச சமூகம் விழிப்புணர்வுடன் செயலாற்ற முன்வருமாறு கத்தர் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் நேற்று நடந்த மனித உரிமை கவுன்சிலின் கூட்டத்தில் விவாதத்தில் பங்கேற்ற கத்தர் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டாக்டர்.காலித் பின் முஹம்மது அல் அதிய்யா இக்கோரிக்கையை முன்வைத்தார்.

சிரியாவில் பகிரங்கமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதை சுட்டிக்காட்டுவதே இந்த மனித உரிமை கவுன்சில் கூட்டம் என்று அவர் சுட்டிக்காட்டினார். சிரியாவில் இரத்தக் களரியை முடிவுக்கு கொண்டுவரவும், அங்குள்ள மக்களுக்கு ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தவும் துவக்கம் முதலே கத்தர் சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்பது சர்வதேச சமூகத்திற்கு தெரிந்த விஷயமாகும்.