Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 19, 2014

பிளஸ் டூ - அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரூ.10000 உதவித் தொகை!

பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் உதவித் தொகை வழங்குகிறது.

இந்த உதவித் தொகை பெற விரும்பும் மாணவர்கள் கல்லூரிக் கல்வி இயக்ககத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த, படிப்பில் சிறந்த மாணவர்கள், கல்லூரியில் படிக்கும்போது அன்றாட செலவுகளுக்குப் பயன்படும் வகையில் மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. என்ஜினீயரிங், மருத்துவம், கலை, அறிவியல், வணிகவியல் உள்பட பல்வேறு இளநிலைப் பட்டப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. இந்த உதவித் தொகை பெற தேர்வு செய்யப்படும் இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

அதே பாடப்பிரிவில் முதுநிலைப் படிப்பில் தொடர்ந்து படித்தால், அந்த மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் வீதம்

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்!

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாகனங்கள் பறிமுதல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றிச்செல்லப்படுவதாக சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம், கச்சேரி ரோடு, உடையார்குடி ஆகிய பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்சென்ற 4 மினிடெம்போக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மேலும் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஓட்டிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர் என மொத்தம் 9 வாகனங்கள்

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெரு பெரிய பள்ளிவாசல் அருகில் வசிக்கும் முஹம்மது இக்பால்  அவர்களின் தந்தை முகத்தார் அவர்கள் இன்று காலை தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஆகஸ்ட் 15, 2014

இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் குஞ்சாலி மரைக்காயர்!

இந்திய விடுதலைப்போர் என்பது ஒரு வீர காவியம். இந்தப் போரில் எண்ணற்றவர்கள் சிறை சென்றனர். இலட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இத்தியாக வேள்வியில் ஈடுபட்டவர்களில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது.

அலைகடல் அரிமா குஞ்சாலி மரைக்காயர்:  இந்திய விடுதலைப் போரின் முன்னோடிகளாகத் திகழ்பவர் ஒரு முஸ்லிம் தான் என்பதை வரலாறு எடுத்துக் காட்டுகிறது. கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்சாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால்பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர் பல செய்த குஞ்சாலி மரைக்காயர் தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

வாஸ்கோடகாமா கி.பி 1498 மே, 17ல் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார். வியாபாரத்தின் பெயரைக் கூரி இந்திய மண்ணில் கால்பதித்த மிகக் குறிய காலத்திலேயே கி.பி 1510ல் போர்ச்சுகீசியர்கள் கோவாநகரைக் கைப்பற்றுகிறார்கள். வாஸ்கோடகாமா வந்தது முதல் கோழிக்கோடு சாமுத்ரி அரசனுக்கும் பரங்கியருக்கும் இடைவிடாத போர் நடை பெற்று வந்தது. மலபார் பிராந்திய பரங்கியர் படைத்தலைவர் மார்டின் டி-ஸோஸா, 25 போர்கப்பல்களுடன் வடக்கிலிருந்த கோலத்ரி மன்னனின் ஆதரவோடு கோழிக்கோடு கடற்கரையை வந்தடைந்தார்.

கோழிக்கோடு அரசன் சாமுத்ரி செய்வதறியாது திகைத்து நின்ற போது தான், “அந்நியரைக் காலூன்ற அனுமதிக்க முடியாது. அதற்காக தரையிலும் கடலிலும் மனித இரத்தம் பெருக்கெடுத்து ஓடினாலும் நாம் அதற்குத் தயார்” என்று அந்நியருக்கெதிராக முதன்முதலில் சூளுரைத்தார் குஞ்சாலி மரைக்காயர். சொன்னது மட்டுமின்றி செயலிலும் காட்டும் முகமாக அந்நியருக்கெதிரான போரில் கடற்படைக்குத் தலைமை தாங்கினார் அந்த இஸ்லாமிய வீரர். இக்காலகட்டத்தில்

இந்திய திருநாட்டின் 68 வது சுதந்திர தினம் இன்று!

இன, மொழி, மத பேதமின்றி நாம் அனைவரும் இந்தியர்  என்பதில் பெருமிதம் கொள்வோம்!


ஆகஸ்ட் 09, 2014

ஓர் வபாத் செய்தி!

நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் ஆம்ஷா அவர்களின் மகனும்,அப்துல்பாரி அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அமீன் அவர்கள் நேற்று நள்ளிரவு தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.... 

எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு Xpress பிரார்த்தனை செய்கிறது.

ஜூலை 27, 2014

ஹஜ் பயணம்: தமிழகத்துக்கு கூடுதல் இடம் ஒதுக்க மத்திய அரசுக்கு ஜெ. கடிதம்

சென்னை: தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்வோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி 2014ம் ஆண்டுக்காக இதுவரை 13 ஆயிரத்து 159 விண்ணப்பங்களை பெற்றுள்ளது. முஸ்லீம் சமுதாய மக்கள்தொகையின்படி, இந்திய ஹஜ் கமிட்டி குழு நடப்பாண்டில் தமிழகத்துக்கு 2,672 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் 1,180 இடங்கள் சிறுபான்மையினருக்கும், 1,492 இடங்கள் பொதுபிரிவினருக்கும் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய ஹஜ் கமிட்டி மூலம் கூடுதலாக 100 இடங்கள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளின்போது, முஸ்லீம் மக்களின் நலன் கருதி, கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டது என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டில், 3,696 யாத்ரிகர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டனர். இது நடப்பாண்டில் புனித பயணம் மேற்கொள்வதற்காக விண்ணப்பம் அளித்துவிட்டு

நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரி நீர்மட்டம் படிப்படியாக குறைவு!

கடுமையான வெயில், நீர் வரத்து இல்லாததால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. 1,465 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள இந்த ஏரியின் மொத்த உயரம் 47.50 அடியாகும். இந்த ஏரிக்கு பருவமழை இல்லாத சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்தும் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் மழைநீர் வரும். இதன் மூலம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தாலுகாவில் உள்ள 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி நீரேற்றும் நிலையத்தில் இருந்து குழாய் வழியாக தினமும் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது. இதனால் சென்னை நகரின் குடிநீர் தேவை சரிசெய்யப்படுகிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 42 அடிக்கு கீழ் குறையும்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் அளவும் படிப்படியாக குறைக்கப்படும். தற்போது ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 42.90 அடியாக உள்ளது. கடுமையான வெயில் அடித்து

ஜூலை 26, 2014

மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை!

மும்பை: பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இம் மோதலை முடிவுக்கு கொண்டுவராத அமெரிக்காவை கண்டித்தும் மும்பையில் பெப்சி, கோக் குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஸா பகுதியில் பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது இஸ்ரேல். மொத்தம் 850 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனப்படுகொலையை தடுக்க அமெரிக்கா எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமெரிக்காவின் நிலைப்பாட்டைக் கண்டித்து மும்பையில் பெப்சி, கோக் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பெந்தி பசார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளில் பெப்சி, கோக் போன்ற அமெரிக்க நிறுவனங்களின் குளிர்பானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று

ஜூலை 19, 2014

காஸ்ஸாவின் மீது தீவிரவாத இஸ்ரேலின் தரைப்படை தாக்குதல்!

ஜெருசலம்: மேற்காசியாவில் அழிவு சக்தியான இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது தரைப்போரை துவக்கியுள்ளது. போர் நிறுத்தத்திற்கான சர்வதேச அழைப்புகளை புறக்கணித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை வடக்கு காஸ்ஸாவிற்குள் இஸ்ரேல் படையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஃபலஸ்தீன் மக்கள் புலன்பெயர்ந்து வருகின்றனர்.

ஹமாஸின் ஏவுகணை தளங்கள் மீது நேற்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இம்முறை முதன்முறையாக தரை வழி தாக்குதலை காஸ்ஸா மீது துவக்கியுள்ளது. கடந்த 6 தினங்களில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 170ஐ கடந்துள்ளது. அரைமணிநேரம் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை காஸ்ஸா மீது தாக்குதலை நடத்தியது. அதன்பிறகு திரும்பிச் சென்றது.ஹமாஸ் போராளிகளின் எதிர்ப்பு நடவடிக்கையில் நான்கு இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு காயம் ஏற்பட்டது. காஸ்ஸாவிற்கு எதிராக முழுமையான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகிவருவதாக ஊகமான செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு காஸ்ஸாவின் எல்லையில் இஸ்ரேலிய ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர். வீடுகளிலிருந்து வெளியேற கோரி இஸ்ரேலிய விமானங்கள் ஒரு லட்சம் பேர் வசிக்கும் பிட் லஹியாவில் துண்டு பிரசுரங்களை வீசின.

ஹமாஸ் தளங்களை தாக்கப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் நடத்தப்போகும் இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நடத்தும் அனைத்து இடங்களிலும் தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது. நான்காயிரத்திற்கும் மேற்பட்ட காஸ்ஸா மக்கள் ஐக்கியநாடுகள் அவை நிவாரண ஏஜன்சியின் எட்டு முகாம்களில் அபயம் தேடியிருப்பதாக ஏஜன்சியின் செய்தி தொடர்பாளர் க்ரூஸ் கன்னஸ் தெரிவித்தார். அதேவேளையில், இரட்டை குடியுரிமை உடைய 800 ஃபலஸ்தீனர்கள், இஸ்ரேலின் எரஸ்க்ராஸிங் வழியாக காஸ்ஸாவை விட்டு வெளியேறத்துவங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை இரவு பாதுகாப்பு படையின் தலைமையகம் மீது இஸ்ரேல் விமானத்தாக்குதலை நடத்தியிருந்தது.ஹமாஸின் ராக்கெட் தாக்குதல் பெரும்பாலும் வடக்கு காஸ்ஸாவில் இருந்து நடத்தப்படுவதால் அங்கு ராணுவ நடவடிக்கை

ஜூலை 07, 2014

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு!

சிதம்பரம் நகரில் பிளாஸ்டிக் கழிவுகளால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டம்
கடலூர் மாவட்டத்தின் வளர்ந்து வரும் நகராட்சியாக சிதம்பரம் உள்ளது. இங்கு 1962-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்பட்டது. இதன் மூலம் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றப்படுகிறது.

பாதாள சாக்கடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நகரின் பல பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் கொசுக்கள், கிருமிகளால் சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் முறையாக செயல்படாததற்கு முக்கிய காரணமாக பிளாஸ்டிக் பைகள் கூறப்படுகிறது.

மக்கும் தன்மையற்ற பிளாஸ்டிக் பைகள் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் கழிவுநீர் சீராக வழிந்து செல்லமுடியாமல் தெரு, சாலையின் மத்தியில் உள்ள பாதாள சாக்கடை திறப்பு வழியாக வெளியே வருகிறது. சில நேரங்களில் பாதாள சாக்கடை அமைத்துள்ள வீட்டுக்குள்ளே கழிவுநீர் புகுந்து விடுகிறது.

காற்றில் பறந்த அபராதம் தீர்மானம்
இதேபோல் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்வாய் ஓரம் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் கவர்கள், அந்த கால்வாயை அடைத்து விடுகிறது. இதனால் மழை காலங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லாமல் தெருவில் வழிந்து ஓடி, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 12.12.2012- அன்று சிதம்பரம் நகராட்சியில் அவரச கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் மொத்த விற்பனையாளருக்கு ரூ.10 ஆயிரமும், சில்லறை வியாபாரிக்கு ரூபாய் ஆயிரமும், சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.200-ம், உபயோகிப்பாளர்களுக்கு ரூ.100-ம் அபராதம் விதிக்கப்படும் என்று