Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 12, 2013

மெட்ரோ ரயில் திட்டம் 6.5 கி.மீ. தூரத்துக்கு சுரங்க பணி நிறைவு!

சென்னை மெட்ரோ என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்து தேவைக்காக வரைவு செய்யப்பட ஒரு திட்டமாகும். இத்திட்டத்தின்படி தொடருந்துகள் அதற்கென உருவாக்கப்படுகின்ற இருப்புவழிகளில் தனியே இயக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் இருப்பு வழிகளின் தண்டவாளங்கள், மேம்பாலங்கள் அல்லது நிலத்தடியில் கட்டப்படும்.

மேல்வாரியாக, இத்திட்டம் "சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தை" ஒத்திருந்தாலும், இத்திட்டத்தின்படி இயங்கும் தொடருந்துகள் புது தில்லி மெட்ரோ திட்டத்தை ஒத்து இருக்கும். இத்திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்கள் கட்டப்பட உள்ளன. முதல் கட்டப்பணிகள் தற்போது தொடங்கப்பட்டு, கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. 2014-2015 ஆம் ஆண்டு வாக்கில் இத்திட்டத்தின் கட்டுமானம் முடிவுற்று பொதுப் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னையில் வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை, சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை என மொத்தம் 45 கிமீ தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 24 கிமீ தூரம் சுரங்கப்பாதையில் ரயில் செல்கிறது. சுரங்கப்பாதையில் மட்டும் 19 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பூமிக்கு அடியில் ரயில் பாதை அமைக்க சுரங்கம் தோண்டும் பணி சென்னையில் முதலாவதாக நேரு பூங்காவில் 2012ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 11 டனல் போரிங் மிஷின் மூலம் பூமிக்கு அடியில் 20 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி நேரு பூங்கா, வண்ணாரப்பேட்டை, மே தின பூங்கா, சைதாப்பேட்டை, ஷெனாய்நகர் பகுதியில் முழு வேகத்தில் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. சுரங்கத்தில் இரு வழித்தடங்களில் தனித்தனியாக ரயில் செல்லும் வகையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. ரயில் நிலையத்தில் மட்டும் இரண்டு ரயில்களும் சந்திக்கும். மற்ற இடங்களில் ஒரு ரயிலுக்கும் அடுத்த பாதையில் செல்லும் ரயிலுக்கும் சுமார் 15 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில் தனித்தனி சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. சுரங்கம் தோண்டும் பணி துவங்கி தற்போது ஒரு ஆண்டு முடிவடைகிறது. இந்த ஒரு ஆண்டில் மெட்ரோ ரயில் செல்வதற்காக 6,500 மீட்டர் அதாவது 6.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி

ஆகஸ்ட் 11, 2013

இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிகளின் தியாகம்!!

வரலாற்றை படிங்கள் தெரியாதவர்களுக்கு தெரியபடுதுக்கள் பெருமையோடு !!!!!!!

அந்நியனுக்கு அடிமைச் சேவகம் செய்தவர்கள் எல்லாம் இன்று ஆட்சிக் கட்டிலும், அதிகார இடங்களிலும் அமர்ந்து கொண்டு சுதந்திரத்திற்கு தங்கள் எதிர்கால சந்ததியினரின் நலன்களை அர்ப்பணித்த சமுதாயத்தை அடக்கியாகின்ற அவலம் இங்குமட்டும் சுதத்திரத்திற்கு வாளேந்திய சமுதாயம் வாழ்வுரிமை கேட்டு வீதியில் நிற்கும் அவலம் இங்கு மட்டுமே.

கிழக்கிந்திய கம்பெனிக்கு கிஸ்தி வசூ­த்து தந்தவர்கள் நினைக்கலாம் ஆதவனை கரங் கொண்டு மறைத்திவிடலாம் என்று, ஆனால் ஆயிரம் கரம் கொண்டு மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. இந்திய மண்ணின் கடைசி இஸ்லாமியர் இருக்கும் வரை இந்தியாவின் விடுதலைக்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய அரும்பணிகள் மறையாது.

(நன்றி) மறந்தவர்களுக்கு நம் சமுதாயத்தின் தியாகங்களை சற்றே நினைவூட்டுவோம்.

மாவீரன் திப்பு சுல்தான்:
''ஆயிரம் ஆண்டுகள் அடிமையாய் வாழ்வதை விட சமருக்கு நின்று சாய்வதே
சிறந்தது!'' என்று அந்த மாவீரன் திப்புசுல்தான் தென்னகத்தில் 5 பெரும் போர்களில் வெள்ளையர்களை படுதோல்வி அடையச் செய்து ஓட ஓட விரட்டினார். மே.4ம் தேதி 1799ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் சூழ்ந்து கொண்டு துரோகிகளை விலை கொடுத்து வாங்கி மாவீரன் திப்புவை வெள்ளையர்கள் கொன்றார்கள். அந்த மாவீரன் இந்த நாட்டில் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இன்று மிஞ்சமிருக்க அவனது வாழ்க்கை வரலாற்றைக் கூட இந்தப் பாவிகள் 'இது ஒரு கற்பனைக் கதை' என்று தொலைக்காட்சியில் வெளியிட்டார்கள். எத்தனை பெரிய துரோகம்?

பேகம் ஹஜ்ரத் மஹல்:
டெல்லியை ஆண்ட ஹஜ்ரத் பேகம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய முஸ்லிம் பெண்மணியாவார். அவருக்கு அன்றைய ஆட்சியிலிருந்த எந்த ஒரு இந்து மன்னனும் உதவவாததால், தன் நாட்டை இழந்து இமயத்தின் அடிவாரக் காடுகளில் தன் பத்து வயது மகனுடன் அநாதையாய் அலைந்து, வீர மரணம் அடைந்தாள் அந்த வீரத்தாய்! இதை எப்படி மறந்தார்கள் ? இல்லை மறைத்து விட்டனர். 

அஸ்வ குல்லா கான்:
பகத்சிங்கை அறிந்துள்ள இன்றைய சமுதாயம் அன்று அவனுடன் தூக்கி­டப்பட் மற்றொரு மாவீரன் அஸ்வ குல்லா கானை ஏன் மறந்து விட்டார்கள் இல்லை மறைத்தது விட்டார்கள் 

வேலூர் சிப்பாய்க் கலகம்:
சுதந்திரப் போராட்டத்தைக் கூட முஸலிம்கள் செய்தால் கலகம் என்று வரலாற்றுப் புரட்டு செய்யும் பாவிகளே, 1857 சிப்பாய்க் கலகப் புரட்சிக்கு வித்திட்ட மௌலவி அஹமது ஷாவின் தலைமையில் போராடிய சிப்பாய்களை பீரங்கி வாயில் வைத்து பிளந்து, அகழியில் வீசியவர்களே! இந்த தியாகத்தைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?

மாவீரன் கான் சாஹிப்:
மதுரையைச் சேர்ந்த மருதநாயகம் பிள்ளையாய் இருந்தும், பின்னர் யூசுப் கான் சாஹிபாக மாறிய வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்த யூசுப் கான் சாஹிப் தூக்கிலிடப்பட்ட பிறகும் நிம்மதியாய் உறங்க முடியாத வெள்ளையர்கள், அவனது உடலை தோண்டி எடுத்து தலைவேறு, உடல் வேறாக பிரித்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அடக்கினார்கள் என்றால் எந்த அளவுக்கு வெள்ளையர்களை எதிர்த்து அந்த மாவீரன் அன்று போராடி இருப்பான் என்று சிந்தித்துப் பாருங்கள்! மதுரை சம்மட்டிபுரத்தில் அந்த மாவீரன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அவனது அடக்கஸ்தலம் இருக்க, இந்த மாவீரனை நினைவூட்ட ஒரு நடிகன் தேவைப்படுகிறான் என்றால் எத்தனை வேதனைக்குரிய விஷயம்.! அப்படியாவது அந்த படம் வெளியே வந்தத ? இல்லை வரேவே செய்யது ,தற்போது வெளியே வந்த மதராச பட்டினம் என்ற படத்தில் கூட முஸ்லிம்களின் போராட்டங்கள் பற்றி சொல்லுவார்களா ? ஆர்வத்துடன் பார்த்தேன் ஆனால் அது ஒரு காதல் படம் என்பதால் வரலாறு சார்ந்து இல்லை . கடைசி காட்சிக்கு முன் சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம் களின் பங்கு நிறைய இருக்கு என்ற வசனம் இருந்தது , படத்தில் சொல்லுகிறார்கள் பாடத்தில் சொல்ல மறுப்பது ஏன் ?

மாப்பிளா மார்கள் போராட்டம்:
1921ல் வெள்ளையனுக்கு எதிராக கிலாபத் இயக்கம் கண்ட 100க்கும் அதிகமான மாப்பிளாமார்கள் கேரளாவின் திரலிருந்து ஏற்றி கோயம்புத்தூருக்கு கூட்ஸ் வண்டியில் அடைக்கப்பட்டு அனுப்பி கொல்லப்பட்டாகளே! அவர்கள் அடக்கஸ்தலங்கள் இன்று கோவை ரயில் நிலையில் அருகில் அவர்களின் வரலாற்றைச் சொல்லும் விதமாக உள்ளதே இதை எப்படி மறந்தீர்கள் .இல்லை மறைத்தீர்கள் 

காந்திஜி அழைப்பு விடுத்த கள்ளுக்கடை போராட்டத்திற்கு மதுரையில் கைதான 19பேரில் 10 முஸலிம்கள் தங்களின் 13 சதவிகிதத்தையும் தாண்டி, 50 சதவிகிதத்திற்கு அதிகமாகப் பங்கு கொண்டுள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.

கப்பல் ஓட்டிய தமிழன் வா.உ.சி. லி கப்பல் வாங்கியதற்கு உதவிய தமிழன்?
அன்றைய வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டது. கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மது வை மறந்து விட்டார்களா? இல்லை வேண்டும் என்றே மறைத்துவிட்டார்களா?

காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்பு போராட்டம்
அன்றைய வெள்ளையன் ஆட்சியில் 13% இடஒதுக்கீட்டில் இருந்த முஸ்லிம் சமுதாயம் காந்திஜியின் பட்டங்கள், பதவிகள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. கான் சாஹிபிலிருந்து, காயிதே மில்லத் வரை 90% அதிகமானோர் தங்கள் பட்டங்கள் பதவிகளைத் துறந்தனர். அன்று பட்டங்கள் பதவிகளைத் துறக்காமல் இருந்திருந்தால், இன்று இடஒதுக்கீடு கேட்டுப் போராடும் அவல நிலை இருந்திருக்காதே!

இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு
இந்திய விடுதலைப் போரில் உலமாக்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்திய விடுதலைப் போரில் தங்கள் வழிபாட்டுத் தலங்களைக் கூட வெள்ளையனுக்கு எதிராகப் பயன்படுத்திய ஒரு சமுதாயம் உண்டென்றால், அது இஸ்லாமிய சமுதாயம்தான்.

வெள்ளிக் கிழமை ஜூம்மா மேடைகள் எல்லாம் வெள்ளையனுக்கு எதிராக போர்ப் பரணி பாடின.. ஜூம்மா மேடைகளில் உரமேற்றியதன் விளைவு வீரத்துடன் இந்த சமுதாயம் வெள்ளையனை எதிர்த்துப் போராடியது. வெள்ளையனின் உடை கலாச்சாரம், மொழி போன்றவை ஹராம் என பத்வாக்கள் அளித்தனர். வெள்ளையனின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிலப்பரப்புகள் யுத்த பூமி (தாருல் ஹர்டி) என்பது போன்ற பத்வாக்கள் வழங்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய இஸ்லாமிய அறிஞராகத் திகழ்ந்த மௌலவி காசிம் அஹ்மத் நாளோத்வி 1885ல் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினராகச் சேர வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். வெள்ளையனை நாட்டை விட்டு விரட்டுவது மார்க்கக் கடமை என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்வாக்களை (மார்க்கத் தீர்ப்புக்களை) திரட்டி நுஸ்ரத்தூல் அஹ்ரார் (விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான உதவி) என்ற பெயரில் நூல் ஒன்றையும் வெளியிட்டார்.

காந்திஜி நடத்திய அஹிம்சைப் போராட்டத்தில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் பட்டியலில் ஒரு பகுதி:

1. காதிர் முஹைத்தீன் மரைக்காயர்

மத்திய அரசின் 3,500 புள்ளி விவர தொகுப்புகள் ஒரே இணையதளத்தில்!

மத்திய அரசின் 3,500 புள்ளிவிவர தொகுப்புகளை இனி பொதுமக்கள் ஒரே இணைய தளத்தில் பெறலாம். சுகாதாரத்துறை தகவல்கள் முதல் பல்வேறு திட்டங் களில் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை வரையில் இதில் தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசு சார்பில் www.data.gov.in என்ற புதிய இணைய தளம்  தொடங்கப்பட்டுள்ளது  மத்திய தொலைத் தொடர் புத்துறை அமைச்சர் கபில்சிபல் இந்த இணைய தளத்தை தொடங்கி வைத்து பேசிய தாவது:

மத்தியில் அய்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் புரட்சி ஏற்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனை வருடனும் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகிறோம். ஆனால், புள்ளிவிவரங்கள் இல்லாமல் எந்த ஒரு சரியான முடிவையும் எடுக்க முடியாது. அதன் அடிப்படையில்தான் மத்திய அரசின் 3,500 புள்ளிவிவர தொகுப்புகள் கொண்ட புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. அரசில் உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயங்களை தவிர மற்றவற்றை பொதுமக்களுக்கு பகிர முன்வர வேண்டும்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இணையதளத்தில் சுகாதாரத் தகவல்கள், பல்வேறு திட்டங்களின் பயனடைந்த பயனாளிகளின் எண் ணிக்கை, தொழிற்சாலை உற்பத்தி என்று வரையில் பல்வேறு புள்ளி விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு கபில்சிபல் பேசினார். பிரதமரின் ஆலோசகர் சாம் பிட் ரோடா பேசியதாவது: தற்போது 3,500 புள்ளிவிவர தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதத்தில் இது

ஷவ்வால் மாத ஆறு நோன்பு!

ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1984 திர்மிதி, அபுதாவூத்

 மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும். பெருநாளை தொடர்ந்து ஷவ்வால் மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ்

ஆகஸ்ட் 10, 2013

வீராணம் ஏரிக்கு 2500 கன அடி தண்ணீர் வருகிறது: புதன்கிழமை நிரம்பும்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 4 மாதமாக தண்ணீர் இல்லாததால் வீராணம் ஏரி வறண்டு கிடந்தது. இந்த நிலையில் மேட்டூர் அணை நிரம்பியதால் காவிரியில் அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இது கல்லணை, அணைக் கரை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நேற்று முன்தினம் முதல் வரத் தொடங்கியது. வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் வருவதால் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.

ஏரியின் மொத்த உயரம் 41 அடி. தற்போது 18 அடிக்கு தண்ணீர் வந்துள்ளது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் வருகிற புதன்கிழமைக்குள் வீராணம் ஏரி நிரம்பிவிடும். எனவே அடுத்த வாரம் முதல் வீராணத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் சப்ளை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் மற்ற ஏரிகளான பூண்டியில் 188 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 360 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 466 மில்லியன் கன அடி என குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் சூழ்நிலையில் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருவது சென்னை குடிநீர்

இஸ்லாத்தை நோக்கி பிரிட்டன் – அதிர்ந்து போயுள்ள கிறிஸ்தவ உலகம்....

2013/08/08 ஆங்கிலப் பத்திரிகைத் தொகுப்பு : அக்கரையூர் அப்துல்ரஹீம்

பிரிட்டனில் வாழும் முஸ்லீம்கள் அரசின் பல்வேறு நெருக்குதல்களுக்கும்,தொல்லைகளுக்கும், தொந்தரவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருந்தும் அல்லாஹ்வுடயை கிருபையால் இலட்சக்கணக்கான மக்கள் (குறிப்பாக கிறிஸ்தவர்கள்) இஸ்லாத்தை நோக்கி அலை, அலையாய் வந்து கொண்டிருகின்றனர்.

''இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன்'' என்ற தலைப்பில் “The Independent” என்ற பிர ட்டன் பத்திரிக்கை ஓர் ஆய்வுத் தகவலைவெளியிட்டுள்ளது. (பார்க்க http://www.independent.co.uk/news/uk/home-news/the-islamification-of-britain-record-numbers-embrace-muslim-faith-2175178.html) கிறிஸ்தவ உலகத்தின் அடித்தளமான ஐரோப்பாவே இஸ்லாத்தை நோக்கி வேகமாக நகர்வதை பார்த்து கிறிஸ்தவ உலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஐரோப்பாக் கண்டத்தில் பிரான்ஸில் தான் முஸ்லீம்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகின்றது, ஆனால், தற்போது பிரான்ஸை காட்டிலும் இஸ்லாமிய வளர்ச்சி விகிதம் பிரிட்டனில் தான் அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.

2001ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 14,000 முதல் 25,000 வரை இருக்கலாம் என கணெக்கெடுக்கப்படது, ஆனால் தற்போதைய கணக்கெடுப்பில் ஒரு இலட்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளார்கள் என “Faith Matters” என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆய்வாளர்கள், மசூதிகளில் சென்று எத்தனை முஸ்லீம்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள் கணக்கெடுத்துள்ளனர், அதில் தலை நகர் லண்டனில் மட்டும் 1400 முஸ்லீம்கள் கடந்த ஓராண்டில் பள்ளிவாசல்களில் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர், (அமைப்புகள் மூலமாக, தனி நபர் மூலமாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் தனி), இப்படி பிரிட்டன் முழுவதும் பள்ளிவாசல்களில் எடுத்த கணக்கெடுப்பின் படி 5200 நபர்கள் ஓர் ஆண்டில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர் (அல்ஹம்துலில்லாஹ்).

பிரான்ஸ் ஜெர்மனியில் இஸ்லாத்தை ஏற்ற நபர்களில் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிக்கு 4000. எனவே “The Independent” நடத்திய இந்த புது ஆய்வின் படி ஐரோப்பா கண்டத்தில் பிரிட்டன் மக்கள் தான் இஸ்லாத்தை தழுவுவதில் முன்னனியில் உள்ளனர். இந்த ஆய்வை நடத்திய “Faith Matters” அமைப்பின் இயக்குனர் கூறுகையில், நாங்கள் இந்த தகவலை பள்ளிவாசலில் திரட்டினோம், முழுவதுமாக எடுக்கப்பட்ட எண்ணிக்கை அல்ல, முழுவதும் கணக்கெடுத்தால் இந்த எண்ணிக்கை பன் மடங்காக இருக்கும் என தெரிவித்தார் . ஏன் முஸ்லீம்களாக மாறினார்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், இஸ்லாத்தை பற்றி ஊடகங்கள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது, இந்த பொய் பிரச்சாரத்தை பார்ப்பவர்கள், படிப்பவர்கள் இஸ்லாத்தை அறிய ஆர்வமடைகின்றனர்,

இந்த ஆய்வில் பலர், இஸ்லாத்தின் உன்னதமிக்க கருத்தினால் ஈர்க்கப்படு, உந்தப்பட்டு

ஆகஸ்ட் 09, 2013

ஆகஸ்ட் 07, 2013

காரைக்காலில் புதிய விமான நிலையம் - மத்திய அரசு ஒப்புதல்

சென்னை:காரைக்காலில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.புதுச்சேரி மாநில எல்லையில் இருந்தாலும் மூன்று பக்கமும் தமிழக எல்லை சூழ்ந்த நகராக காரைக்கால் விளங்கி வருகிறது. மேல வாஞ்சூர் வரை காரைக்கால் எல்லை உள்ளது. இங்கு சி.பி.சி.எல் பெட்ரோலிய நிறுவனம் இயங்குவதால் ஏராளமான தொழில் வாய்ப்புகள் உள்ளன.

மேலும் தமிழகத்தை விட எல்லாவிதமான பொருட்களின் விலையும் இங்கு குறைவு என்பதால் இங்கிருந்து பலர் அங்கு சென்று எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கி வருகின்றனர். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில், காரைக்கால் அம்மையார் கோயில் போன்ற வழிபாட்டு தலங்கள் இங்கு உள்ளன. காரைக்காலுக்கு மிக அருகில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், நாகை துறைமுகம் போன்ற இடங்களும் உள்ளன. மேலும் 60 ம் கல்யாணத்துக்கு புகழ் பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ள திருக்கடையூரும் காரைக்காலுக்கு அருகே உள்ளது. இவ்வாறு முக்கிய இடங்கள் உள்ளதால் காரைக்காலுக்கு வந்து செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. காரைக்கால் துறைமுகம், ஆயில் ஜெட்டி போன்றவை உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் காரைக்காலில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதையடுத்து விமான நிலையம் அமைக்க கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்தது. மொத்தம் 562 ஏக்கர் நிலங்கள் இதற்காக வாங்கப்பட்டன. கடந்த 2011 ல் நிலம் வாங்கியதோடு பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் நின்றது. இந்நிலையில் காரைக்கால் விமான நிலையத்துக்கு மத்திய அரசு, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகியவை ஒப்புதல் அளித்துள்ளன. ‘காரைக்கால் ஏர்போர்ட் பிரைவேட் லிமிடெட்’ என்று காரைக்கால் விமான நிலையத்துக்கு பெயர் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. புதியதாக அமையும் இந்த

டிகிரி படித்தவர்களுக்கு உளவுத்துறையில் அதிகாரி பணி : 750 காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் 750 உதவி மத்திய புலனாய்வு அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்தக் காலியிடங்களுக்கு பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Central Intellligence Officer GradeII/Executive: மொத்த இடங்கள்: 750 (பொது-380, ஓபிசி-202, எஸ்சி-112, எஸ்டி-56). வயது: 12.8.2013ன்படி 18 லிருந்து 27க்குள். வயது வரம்பில் எஸ்சி.எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள். கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங் கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி. கம்ப்யூட்டர் பற்றிய அறிவை பெற்றிருப்பது விரும்பத் தக்கது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- எஸ்சி.எஸ்டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இதை ஸ்டேட் வங்கி செலான் அல்லது நெட் பேங்கிங் செலுத்தலாம். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, நன்னடத்தை ஆய்வு, மருத்துவ சோதனை ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு

காட்டுமன்னார்கோவில் பகுதியில் மண்ணெண்ணெய் விநியோகம் குறைவால் அவதியுறும் மக்கள்

காட்டுமன்னார்கோவில் பகுதியில் ரேஷன் கடை களில் குறைந்த அளவே மண்ணெண்ணெய் விநி யோகம் செய்யப்படுவதால் பொதுமக்கள் காலையிலிருந்தே வெயி லில் காத்திருந்து வாங்க வேண்டிய நிலையில் உள் ளனர். இந்த பகுதியில் சுமார் 77 ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் கடைகளில் பல்வேறு அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு மண்ணெண்ணெயின் அளவை குறைத்துள்ளதால் ரேஷன் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவை விட குறைத்து வழங்கப்படுகிறது. இதை ரேஷன் கடைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆதலால் மண்ணெண் ணெய் விநி யோகம் செய்யப்படும் நாட் களில் யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடைப் பதில்லை. இதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் நாட் களில் கடையின் முன்பு விடியற்காலையிலேயே

ஆகஸ்ட் 06, 2013

வெள்ள அபாய அச்சம்,மாவட்ட கலெக்டர் ரகசிய ஆய்வு !

வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும். வடவாறிலிருந்து வரும் தண்ணீர் உத்திரசோலை மதகு வழியாக வீராணம் ஏரிக்குள் நுழையும். அதன்படி வீராணம் ஏரி நிரம்பியவுடன் வடவாறிலிருந்து வரும் தண்ணீர் நிறுத்தப்படும் அப்போது ஏரியின் தண்ணீர் வெளியேறாத வகையில் உத்திரசோலையில் உள்ள ஷட்டருடன் கூடிய மதகை மூடிவிடுவர். மீண்டும் தண்ணீர் வரும் காலங்களில் மட்டும் ஷட்டர் திறக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 16 கண் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து, கொள்ளிடம் வழியாக கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நாளை( புதன்கிழமை) கீழணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் உத்திரசோலையில் உள்ள மதகினை சுண்ணாம்பு அடித்தும், ஷட்டரை திறக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வடவாற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே 15 தினங்களில் வீராணம் ஏரி தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டும். வறண்டு கிடந்த வீராணம் ஏரிக்கு தண்ணீர் வர இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

மாவட்ட ஆட்சியர் ரகசிய ஆய்வு : மேட்டூர் அணையில் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கல்லணையிலிருந்து கொள்ளிடம் வழியாக கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரும் என