Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 06, 2013

சவூதி நிதாக்கத்: முதல்நாளில் 4915 பேர் கைது!

ஜெத்தா: நவம்பர் 3, 2013 அல்லது துல்ஹஜ் 1434 உடன் சவூதி அரசு அளித்திருந்த பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்ததையடுத்து, சட்ட மீறலாகத்தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடிக்கும் பணியை சவூதி காவல்துறை முன்னெடுத்துள்ளது.

நேற்று ஒரே நாளில் ஜெத்தா நகரில் மட்டுமே 4915 பேர் பிடிபட்டுள்ளதாக சவூதியிலுள்ள அரபு நாளேட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் சவூதி கெஸட் போன்ற ஆங்கில நாளேடுகளில் 1899 பேர் கைது என்றுகூறப்பட்டுள்ளது. எனினும் தலைநகர் ரியாத் நகரில் சோதனைகள், கைதுகள் குறித்த

நவம்பர் 05, 2013

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 38 ஆம்னி பஸ்சுக்கு அபராதம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க, பயண கட்டண விவரத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முறையான சீட் பர்மிட் இல்லாமலும், வரி செலுத்தாமலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில் ஈசிஆர் சாலையில் கடலூர், சிதம்பரத்திலும், சென்னை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி பகுதியிலும், சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தை கடந்து சென்ற 422 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்தது. அவற்றில் 38 பஸ்கள் உரிய வரி செலுத்தாமலும், பர்மிட் இல்லாமலும்

பதிவு செய்யும் பத்திரங்களை 'சிடி' ஆக வழங்கும் புதிய திட்டம் - ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் இந்த துறையை நவீனப்படுத்துவதுடன், எளிமைப்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரங்களை அலுவலகத்தில் பதிவு செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் சிசிடிவி மூலம் பதிவு செய்யப்படுகிறது. பத்திரங்களை பதிவு செய்யவருபவர்கள் தேவைப்பட்டால்

நவம்பர் 04, 2013

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் நம்முடைய கோரிக்கைகள் அல்லது புகார் மனுக்களை அனுப்பலாம்.புகார்களை அனுப்பி விட்டு அதனுடைய நிலவரம் கூட அறியாமல் இருந்த நிலைமாறி இன்று உங்களுடைய கோரிக்கைகளின் நிலை குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த இணைய தளம் அமைந்துள்ளது.

முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்களை அனுப்ப உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி இருந்தால் போதுமானது. முதல்வரின் தனிப்பிரிவு தளமான http://cmcell.tn.gov.in/ என்ற

அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோகும் மருத்துவர்கள்!

அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நீருக்குள் மூழ்கும் உணர்வை ஏற்படுத்தி மூச்சித்திணறச் செய்து சந்தேகநபர்களை சித்திரவதை செய்யும் வாட்டர்போடிங் போன்ற விசாரணை முறைகள் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் இன்னும் அவ்வாறான மோசமான கொடூரங்களை புரியுமாறு பணிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தடுப்புக்காவல் கைதிகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக உணவை திணிக்கும் துன்புறுத்தல்கள் குவாந்தனாமோ போன்ற பல சிறைக்கூடங்களில்

நவம்பர் 03, 2013

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் மர்மம் நீடிப்பு!!

பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்ட பேரணியில் குண்டுவெடித்த சம்பவத்தைக் குறித்த விசாரணையில் நாட்கள் செல்லச் செல்ல மர்மம் அதிகரிக்கிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து பிடிக்கப்பட்ட நபர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். அவரது மரணம் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்டது என்று போலீஸ் கூறுகிறது.

பீகாரில் தர்பாங்காவில் இருந்து கைதுச் செய்யப்பட்ட மெஹர் ஆலம் என்ற பதின்பருவ வயது நபரைக் குறித்த கதையில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. முதலில் ஊடகங்களின் முன்னால் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என்று அறிமுகப்படுத்திய மெஹர் ஆலம் என்ற குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக், பின்னர் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் பயன்படுத்தும் இன்ஃபார்மராக மாறியுள்ளார். மெஹர் ஆலம் என்.ஐ.ஏவின் கஸ்டடியில் இருந்து தப்பி பின்னர் பிடிபட்டதாக செய்தி வெளியானது. இதன் பின்னர் மெஹர் ஆலம் போலீஸ் இன்ஃபார்மராக கூறப்படுகிறார். ஆனால், என்.ஐ.ஏவின் கூற்றை மெஹர் ஆலத்தின் தந்தை மஹ்மூத் ஆலம் மறுக்கிறார். நண்பருடன் சொந்தக் கிராமமான சிதவுளியில் இருந்து தர்பாங்காவிற்கு செல்லும் வழியில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி(பாட்னா குண்டுவெடிப்பிற்கு முன்பு) மெஹரை என்.ஐ.ஏ அதிகாரிகள்

குளிர்பானங்கள் நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது! ஆய்வில் தகவல்!

மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (Soft Drinks) நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ்க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது. ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கும் காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து

முஹர்ரம் மாதமும் ஆஷுராவும்!

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்... 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி.(புனிதமான)அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) ஆதாரம் : புகாரி 3197

பஞ்சா எடுப்பது
இந்த புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் பல ஊர்களில் பஞ்சா என்ற பெயரில்

நவம்பர் 02, 2013

ஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 சதவீதம் முடிவு!

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, ரத்த வகை, பயிலும் பாடப்பிரிவு உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. தேர்வு நேரங்களின் போது, ஏற்படும் சில குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள, பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவேற்றும் செய்யும் பணி தீவிரமாக நடந்து

அக்டோபர் 31, 2013

முசாஃபர்நகரில் மீண்டும் கலவரம்:4பேர் பலி!!

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் மீண்டும் வகுப்பு கலவரம் மூண்டுள்ளது. இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். முசாஃபர் நகர் மாவட்டம் முகமத்புரைசிங், ஹூசைன்பூர் கிராமங்களில் வசிக்கும் இரு சமூகத்தினருக்கு இடையே நேற்றிரவு இந்த கலவரம் ஏற்பட்டுள்ளது. இதில், அப்ரோஸ், மெகர்பான், அஜ்மல் ஆகிய மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகமத்புரைசிங் கிராமத்தில் சிலர் புகுந்து

ஆப்கானிஸ்தான் போர் வெற்றி, தோல்வியின்றி முடிவு - ஆஸ்திரேலிய பிரதமர் ஒப்புதல்!

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் சென்றார். உருஸ்கான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமிற்குச் சென்ற அவர், அங்குள்ள ஆஸ்திரேலிய வீரர்களிடம் உரையாற்றினார். நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது, இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை என்று டோனி அபோட் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள், அல் காய்தா இயக்கத்தினரை எதிர்த்துப் போரிடும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் ஆஸ்திரேலிய படையினரும் இடம்பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்கியிருக்கும் ராணுவ முகாம், உருஸ்கான் மாகாணம், தாரின் கோட் பகுதியில் உள்ளது. அங்கு திங்கள்கிழமை வந்த டோனி அபோட்டை, ஆப்கான் உள்துறை அமைச்சர் முகமது ஒமர் தௌத்ஸாய் வரவேற்றார். வரும் 2014-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்க ப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் பயணம் மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

தனது நாட்டு ராணு வீரர்களிடையே பிரதமர் டோனி அபோட் பேசியதாவது: “ஆஸ்திரேலியாவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வருகிறது. இதில் நமக்கு வெற்றியும் இல்லை; தோல்வியும் இல்லை. ஆனால், இங்கு நாம் ஆற்றியுள்ள பணிகள் காரணமாக ஆப்கானிஸ்தானின் நிலை மேம்பட்டுள்ளது என்ற நம்பிக்கை எனக்குள்ளது. ஆப்கன் போர் மிகவும் சிக்கலாக இருந்தது. ஆஸ்திரேலிய படையினரை வாபஸ் பெறும் முடிவு