Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 24, 2015

பன்றிக்காய்ச்சல் நோய் பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை- கலெக்டர்

மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுப்பு தடுப்பூசி, மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் பன்றிக்காய்ச்சல் நோய் என்பது ‘ஏ‘ இன்ப்ளூயென்ஸா வகை வைரஸ் கிருமியினால் வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது. மனிதனுக்கு பொதுவாக வரக்கூடிய ப்ளூ காய்ச்சலுக்குரிய அறிகுறிகளுடன் தான் பன்றிக்காய்ச்சல் நோயும் வரும். வைரஸ்கள் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், தொண்டை வலி, சோர்வு, உடல்வலி, குளிர் போன்ற அறிகுறிகள் தோன்றும். சிலருக்கு குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.

கைகளை நன்றாக கழுவ வேண்டும் இதனால் நிமோனியா மற்றும் சுவாச உறுப்புகள் செயல் இழப்பு
ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய ப்ளூ வைரஸ்கள் இந்த நோய் வாய்ப்பட்டவரிடம் இருந்து தும்மல் மற்றும் இருமல் மூலமாக மற்றவருக்கு வேகமாக பரவக்கூடியது. சில சமயங்களில் ப்ளூ வைரஸ்கள் தொற்றியுள்ள பொருட்களை தொட்டுவிட்டு, பிறகு மூக்கு, கண் அல்லது வாய் பகுதிகளை தொட்டாலும் இந்த நோய் தாக்கக்கூடும். ஆகவே இந்த நோய் வராமல் தடுக்க, தும்மல் மற்றும் இருமலுக்கு பிறகு சோப்பு கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். அடிக்கடி கண்கள், வாய் மற்றும் மூக்கு பகுதிகளை தொடுவதை தவிர்க்கவும், கிருமிகள் இதன் மூலம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது.

பன்றிக்காய்ச்சல் உள்ளவர்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை அதிகப்படியான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடனடியாக அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். மாவட்டத்தில் இந்நோய் பரவாமல் தடுக்க, கடலூர் மாவட்ட நிர்வாகமும், பொது சுகாதாரத்துறையும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருகிறது. இந்த நோய்க்கான தடுப்பூசி, டாமிப்ளூ மாத்திரைகளும் போதுமான அளவுக்கு அனைத்து அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.

பன்றிக்காய்ச்சல் குறித்த தகவல்கள் மற்றும் சந்தேகங்களை பற்றி கேட்டு தெளிவு பெறவும், நோய் பற்றிய தகவல்கள் கூறவும் 04142– 295134, 9361482505, 9361482506 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...