Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 24, 2015

வீராணம் ஏரியை குத்தகைக்கு விடும் விவகாரம்: மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

வீராணம் ஏரியில் மீன்பிடி உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை மற்றும் கொள்ளுமேடு பகுதியில் வீராணம் ஏரி உள்ளது. இதன் மூலம் சித்தமல்லி, அறந்தாங்கி, சென்னிநத்தம், மணவெளி, வானமாதேவி, புடையூர், நத்தமலை, வாழக்கொல்லை, கந்தகுமரன், சின்னமணல் மேடு, வெய்யலூர், கூத்தங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் வீராணம் ஏரியில் மீன் பிடிக்கும் உரிமையை தனியாருக்கு குத்தகைக்கு விட இந்த ஆண்டு
மீன்வளத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து கடலூர் மாவட்ட மீன்பிடி தொழிலாளர் நலச்சங்கம், வீராணம் ஏரி மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் லால்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மீன்பிடி வலையுடன் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமை தாங்கினார்.
-தினத்தந்தி 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...