Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 20, 2014

முசாபர்நகர் கலவர அகதிகளை வாக்களிக்க விடமாட்டோம்! பாஜக

பாஜகவின் மக்களவைத் தேர்தல் வேட்பாளர் ஹூக்கம் சிங் எம்.எல்.ஏ, கைரானா தொகுதியில் முசாபர்நகர் கலவர அகதிகளை வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“வீடுகளையும் சொந்த நிலத்தையும் விட்டு வெளியேறி அரசு நிலத்தை ஆக்கிரமித்து முகாமில் தங்கியிருக்கும் அகதிகளின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க மாட்டோம். அவர்களுடைய பெயர்கள் தங்கள் சொந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்தே இன்னும் நீக்கப்படவில்லை. அவர்கள் கைரானா தொகுதியின் வாக்காளர்கள் இல்லை என்பதால், அகதிகள் தங்கியிருக்கும் எந்த முகாமிற்கும் நான் செல்லவில்லை” என்றும் ஹூக்கம் சிங் கூறினார்.

உத்தரபிரதேசத்தில் நடந்த முசாபர்நகர் கலவரத்தையடுத்து சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் அகதிகளாக வந்து கைரானாவின் 9 முகாம்களில்
தங்கியுள்ளனர். முசாபர்நகரில் கலவரத்தை தூண்டும் வகையில் மேடைகளில் பேசி கைது செய்யப்பட்ட 16 அரசியல் தலைவர்களில் ஹூக்கம் சிங்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...