சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதியில் புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த 9ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் அனைத்து வாக்குசாவடிகளிலும் நடந்தது. இதில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 4086 பேரும், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் 4308 பேரும் என 8394 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிலும் தினந்தோறும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
உரிய வயது, இருப்பிடம் மற்றும் கல்வி சான்று இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஆன்- லைனில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை
நேற்று வட்டாட்சியர் விஜயா, மண்டல தேர்தல் துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், தேர்தல் துணை வட்டாட்சியர் ஆறுமுகம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
-DK

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...