கடலூர், : கடலூர் மாவட்டத்தில் 39,310 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை பறக்கும்படை சோதனை செய்தது.
கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி அரசு பொது தேர்வுகளை 39 ஆயிரத்து 310 பள்ளி மாணவ, மாணவிகள் 107 மையங்களில் தேர்வு எழுதினர். நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. காலை 9.15 மணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டிருந்ததால் காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் வந்து ஹால்டிக்கெட் பெற்றனர்.
மாணவர்கள் சிறப்பாக தேர்வெழுத பல்வேறு பள்ளிகளில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காலை 9 மணிக்கு தேர்வு அறைகளில் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 9.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. தமிழ் முதல்தாள் எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கல்வித் துறை அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் தலைமையிலான பறக்கும் படையினர் பல்வேறு தேர்வு மையங்களில் சோதனை நடத்தினர்.
தேர்வு முடிவடைந்ததும் விடைத்தாள்களை வழித் தட அலுவலர்கள் பாதுகாப்பாக விடைத்தாள் காப்பு மையத்திற்கு கொண்டு சேர்த்தனர். கடலூர் மாவட்டத்தில் தேர்வு பணிகளில் 2150 அறை கண்காணிப்பாளர்கள், 107 முதன்மை கண்காணிப்பாளர்கள், 107 துறை அலுவலர்கள், 214 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பறக்கும் படையினர் அனைத்து அறைகளிலும் தேர்வு கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளை மேற்கொண்டனர். தேர்வு மையங்கள் இல்லாத பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் காலை 7 மணிக்கே பள்ளிகளுக்கு
வரவழைக்கப்பட்டு தேர்வு எழுதும் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...