கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளின் செயல்பாடு குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கிர்லோஷ்குமாரிடம் கேட்ட போது: கடலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் 3 ஆயிரம் போலீசார் உள்ளிட்ட 18 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் தேர்தல் பணிகள் தொடர்பான முதல்கட்ட பயிற்சி அனைத்து தேர்தல் அலுவலர்களுக்கும் முடிக்கப்பட்டுள்ளது. 2ம் கட்ட பயிற்சி வரும் 25ம் தேதி துவங்கப்படவுள்ளது.
தேர்தல் பணியில் முதல்கட்டமாக 20ம் தேதி முதல் 120 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் ஈடுபடவுள்ளனர். இதில் தேர்தல் விதிகளின் படி அமைச்சருக்கான பாதுகாப்பு பணியிலும் ராணுவத்தில் ஒருவர் ஈடுபடுவார். சுவர் விளம்பரங்கள் பொறுத்த வரை நகரில் முற்றிலுமாக அணுமதி கிடையாது. கிராமங்களில் தனியார் இடங்களில் உரிய அனுமதி கடிதத்தோடு எழுதலாம் என அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிரசார பணிகளை அரசியல் கட்சியினர் துவங்கி வருகின்றனர். தேர்தல் விதிமுறை மீறலை கண்காணிக்கவும், பிரசாரத்தில் மேற்கொள்ளப்படும் செலவினங்கள் குறித்து பதிவு செய்யவும், அனைத்து கட்சியினர் பிரசாரத்தையும் வீடியோ கண்காணிப்பு குழு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் பதிவு செய்யப்பட்டு புவனகிரியில் ஒரு வழக்கு பதிவாகியுள்ளது.
ஒவ்வொரு வீடியோ கண்காணிப்பு குழுவிலும்
ஒரு துணை இயக்குனர் அளவிலான தேர்தல் அலுவலர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேர் இடம்பெற்றுள்ளனர். எனவே பொதுஇடம், உள்அரங்க கூட்டம் எதுவாக இருந்தாலும் தேர்தல் பிரசாரம் கண்டிப்பாக வீடியோ பதிவு செய்யப்பட்டு செலவினம் உள்ளிட்டவை வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். மாவட்டத்தில் வாக்குசாவடிகளின் அளவு தேர்தல் விதிமுறைப்படி 210 சதுர அடி அளவிற்கு அமைக்கப்படுகிறது. சில வாக்குசாவடிகள் அளவு குறைவு என கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து ஆய்வு செய்து மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதற்றம் நிறைந்ததாக கண்டறியப்பட்டுள்ள 484 வாக்குசாவடிகளின் நிலை குறித்து பாதுகாப்பு பலப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்திற்காக கடலூர் வருகிறார். இதற்கான செலவினங்கள் அனைத்தும் அதிமுக கட்சியினர் மேற்கொண்டுள்ளனர். இந்தபணியில் அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள கூடாது, என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...