Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 25, 2013

சில்வர் பீச் கோடை விழா தொடங்கியது

சில்வர் பீச்

சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்து நீளமான மணல் பரப்பையும், அழகான ரம்மியத்தையும் கொண்டது கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை. கடலூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் சில்வர் பீச் சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கோடை விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அரசின் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன் திறந்து வைத்தார். ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர்கள் பரிசுகளை வழங்கி பேசினர். இதனைத் தொடர்ந்து புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. ஆ.ராதிகா, மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஆணையர் ப.காளிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் ப.மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...