Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 15, 2013

இனக்கலவர வழக்கு: முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் முடிவு நிறுத்தம்!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து திட்டமிட்டபடி கலவரத்தை அரங்கேற்றினர். இதில், நரோடா பாட்டியா சம்பவத்தில் 96 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது. கலவரத்தின்போது, "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசில் மந்திரியாக பதவிவகித்த மாயா கொத்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனையும், பஜ்ரங் தளத்தொண்டர் பாபு பஜ்ராங்கிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், குற்றம் சாட்டப்பட்ட மீதி 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. இந்த தண்டனை போதாது என சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு கருதியது.

எனவே முன்னாள் மந்திரி மாயா கொத்னானி உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி, குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய அது விரும்பியது. இதற்கு "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இது தொடர்பாக "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசு வலது சாரி அமைப்புகளின் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் திடீரென "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசு தனது மனதை மாற்றிக்கொண்டுள்ளது. கொத்னானி உள்ளிட்ட 10 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக்கோரும் அப்பீல் வழக்குக்கு அனுமதி அளித்த தனது முந்தைய முடிவை அது நிறுத்தி வைத்தது. இந்த தகவலை மாநில நிதித்துறை மந்திரி நிதின் பட்டேல் நேற்று ஆமதாபாத்தில் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறும்போது, நரோடா பாட்டியா சம்பவ வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை வழங்க கோரும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில்
நாங்கள் அட்வகேட் ஜெனரல் கருத்தினைப் பெறவேண்டி உள்ளது. அவரது கருத்தைப் பெற்ற பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறினார்.

 "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசின் திடீர் மனமாற்றத்துக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மீம் அப்சல் கூறுகையில், 'மோடி மாறவில்லை என்பதையே இது காட்டுகிறது. அவர் இப்படித்தான் கடந்த காலத்தில் இருந்தார். அப்படித்தான் எதிர்காலத்திலும் இருப்பார். குறிப்பிட்ட அந்த சமூகத்தினரைப்பற்றிய அவரது மனோபாவத்தில், உணர்வில் மாற்றம் இல்லை' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...