Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 23, 2013

மாலேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை குற்றவாளியாக சேர்த்து 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி சிறப்பு மோக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி,மனோகர் நர்வாரியா ஆகியோரின் பங்கினை தெளிவுப்படுத்தும் இக்குற்றப்பத்திரிகையில் சுவாமி அஸிமானந்தாவின் பெயர் இடம் பெறவில்லை.

 மாலேகான் 2006 குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை அநியாயமாக குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்த்த சி.பி.ஐ மற்றும் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கு, என்.ஐ.ஏ சமர்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகை பலத்த பின்னடைவாகும். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம் வீதமும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாயும் என்.ஐ.ஏ பரிசுத்தொகை அறிவித்திருந்தது. குற்றவாளிகளுக்கு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. சுவாமி அஸிமானந்தாவை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்ப்போம் என்று என்.ஐ.ஏ நேற்று முன் தினம் கூறியிருந்தது. ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

 இவ்வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி ராம்ஜி கல்சங்கரா, ராஜேந்திர சவுத்ரி, அமித் சவுகான் ஆகியோருடன் சேர்ந்து மாலேகானுக்கு சென்றிருந்ததாக டான்சிங் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளான். குண்டு வைக்கவேண்டிய இடத்தை பார்வையிட்ட பிறகு இவர்கள் இந்தூருக்கு சென்றுள்ளனர். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லோகேஷ் சர்மா இவ்வாண்டு கைது செய்யப்பட்டான்.

ராஜேந்தர் சவுத்ரி, டான்சிங், மனோகர் ஆகியோரை கைது செய்ததைத் தொடர்ந்து வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 125 பேருக்கு காயம் ஏற்பட்டது. 2008-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த 2-வது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் புரோகித், சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில்
2008-மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் டான்சிங்கிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மஹராஷ்ட்ரா மோக்கா சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. குறிப்பிட்ட காலக்கட்டத்தில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலும் டான்சிங் குற்றவாளி என்பதால் சிறையில் இருந்து விடுதலையாக முடியாது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...