Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 03, 2013

ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றநோய் ஏற்படுத்தும் பொருள்!!

மும்பை: பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. ஷிண்டே கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் அதிக அளவில் இருந்தது. அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:thatstamil

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...