Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 27, 2013

இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு....‏

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள் தங்களது கருத்துக்களை இ-மெயில் மூலம் தெரிவிக்க வழி வகுக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்த ஆண்டு அரசு நியமித்தது. தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24 பாடங்களை அந்த கல்வியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. புதிய வரைவு பாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய வரைவுப்பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொது மக்கள் தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

 இணையத்தில் உள்ள புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய க்ளிக்குக - Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) புதிய பாடத்திட்டம் தொடர்பான உங்கள் கருத்துகளை scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in
என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

source:http://www.tntjsw.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...