Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 31, 2013

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

சென்னை: தமிழகம் முழுவதும் 10.50 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா 498 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதேபோல மேலும் 8 மாணவிகள் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முதலிடம் பெற்ற 9 பேருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மொத்தம் 52 மாணவ மாணவிகள் மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 496 மதிப்பெண்கள் பெற்று 137 மாணவர்கள் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு!தம்மிஹா பர்வீன் முதலிடம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 95% தேர்ச்சியை கண்டுள்ளது.மொத்தம் 25 மாணவர்களும் 47 மாணவிகளும் தேர்வு எழுதியத்தில் 95% சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

தம்மிஹா பர்வீன் S/O லியாகத் அலி (ஜாவித் அவர்களின் தங்கை) 425 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் நுஸ்மா  என்ற மாணவி இரண்டாம் இடமும் சுந்தர் என்ற மாணவர் மூன்றாம் இடமும் பெற்றனர்.


மே 29, 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தற்போது தேர்வு முடிவுகளுக்காக மாணவ-மாணவிகள் காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணியில் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மதிப்பெண்கள் சரிபார்த்தல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல் போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டி முடிவடையும் தருவாயில் உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வெளியிடப்படும் என்று ஏற்கனவே அரசு தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. திட்டமிட்டபடி நாளை மறுநாள் காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

 அரசு இணைய தளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகள் வெளியாகும். அந்த இணைய தளங்களின் முகவரி:-
 www.dge1.tn.nic.in
 www.dge2.tn.nic.in
 www.dge3.tn.nic.in

மே 27, 2013

இணையத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் வெளியீடு....‏

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டம் குறித்து பொது மக்கள், கல்வியாளர்கள் தங்களது கருத்துக்களை இ-மெயில் மூலம் தெரிவிக்க வழி வகுக்கப்பட்டு உள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு, 2014 -15ஆம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. புதிய பாடத்திட்டங்களை வடிவமைப்பதற்கான கல்வியாளர்கள் குழுவை கடந்த ஆண்டு அரசு நியமித்தது. தற்போது, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு 24 பாடங்களை அந்த கல்வியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. புதிய வரைவு பாடத்திட்டம் என்ற பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே மாதம் 30ஆம் தேதி வரை புதிய வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. புதிய வரைவுப்பாடத்திட்டம் குறித்து கல்வியாளர்கள், பொது மக்கள் தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர், சென்னை-6 என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பலாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளார்.

 இணையத்தில் உள்ள புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்ய க்ளிக்குக - Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std) புதிய பாடத்திட்டம் தொடர்பான உங்கள் கருத்துகளை scerttn@gmail.com அல்லது dtert@tn.nic.in

மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீடு கோரி மே-26 அன்று எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் சமூக நீதி மாநாடு!

மத்தியில் 10 சதவீதம் மாநிலத்தில் 7 சதவீதம் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி, பல்லாவரத்தில் மே 26 அன்று சமூக நீதி மாநாடுஎஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் அறிவிப்பு! தேசிய அளவில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி கடந்த ஏப்ரல் 14 ,2013 முதல் ஏப்ரல் 14, 2014 வரை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரத்தில் ஒரு பகுதியாக வருகிற 26 ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் முஸ்லீம்களுக்கு மத்தியிலும், மாநிலத்திலும் தனி இடஒதுக்கீடு கோரி மாபெரும் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது.

நம் நாட்டில் வாழும் முஸ்லீம்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ளனர் என்பது மத்திய அரசு அமைத்த நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிட்டி மற்றும் ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அறிக்கைகளின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலையை மாற்ற மத்திய அளவில் கல்வி வேலைவாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பரிந்துரையும் செய்தது. அந்த பரிந்துரையின் மீது மத்திய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை பொருத்தவரை

மே 25, 2013

சில்வர் பீச் கோடை விழா தொடங்கியது

சில்வர் பீச்

சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்து நீளமான மணல் பரப்பையும், அழகான ரம்மியத்தையும் கொண்டது கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை. கடலூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களுக்கும் சில்வர் பீச் சுற்றுலா மையமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கோடை விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார். அரசின் சாதனைகளை விளக்கி பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை சுற்றுலாத்துறை அமைச்சர் பூ.செந்தூர்பாண்டியன் திறந்து வைத்தார். ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றிபெற்ற சிறுவர், சிறுமிகளுக்கு அமைச்சர்கள் பரிசுகளை வழங்கி பேசினர். இதனைத் தொடர்ந்து புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற்றது. எஸ்.பி. ஆ.ராதிகா, மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்தியலிங்கம், நகர்மன்றத் தலைவர் சி.கே.சுப்பிரமணியன், ஆணையர் ப.காளிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் ப.மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-Dinamani

என்இஇடி-பிஜி தேர்வு முடிவுகள் இணையதளத்தில்....

தேசிய தேர்வு வாரியம் நடத்தும் என்இஇடி-பிஜி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதுகலை மருத்துவ படிப்புகளில் சேர என்இஇடி-பிஜி என்று நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன. இத்தேர்வு கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 6 வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்தியாவில் 55 தேர்வு மையங்களிலும், வெளி நாடுகளில் 33 மையங்களிலும் தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 90,377 மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிவுகளை காண www.nbe.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம். -

source:TNTJ மாணவர் அணி

யார் அந்த யாசீன் மாலிக்?

யாசீன் மாலிக் – தமிழகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கும் மக்களுக்கு புதிய நபர். அடக்கி ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு உரிமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கும், அதற்க்காக போராடும் தலைவர்களுக்கும் நன்கு பரிட்சயப்பட்ட மனிதர். இந்தியாவும், பாகிஸ்தானும் அரசியல் விளையாட்டு விளையாடுவதற்கு பழிகடாக்கலாக்கப்படும் காஷ்மீரிகளின் விடுதலைக்கான அறிவிப்பு தான் யாசீன் மாலிக் என்னும் போராளி, அங்கம் வகிக்கும் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனி JKLF (Jammu Kashmir Liberation Front).

 காஷ்மீரை அபகரித்து கொள்ள இந்தியாவும், அதை தன் வசமாக்கி கொள்ள பாகிஸ்தானும் செய்யும் சூழ்ச்சிகளிலும், சதிவலைகளிலும் சிக்கி உயிர்களை இழந்து, உறவுகளை இழந்து தவிக்கும் அப்பாவி காஷ்மீரிகளின் விடுதலைக்கான அழைப்பாக அமானுல்லா கான் என்பவரால் மே 29, 1977-ம் ஆண்டு லண்டனில் வைத்து JKLF தொடங்கப்பட்டது. பல போராட்ட, இழப்பு வரலாறுகளுக்கு பிறகு 2005-ல் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட யாசீன் மாலிக்கால் இன்றளவும் வீரியம் குறையாமல் வழிநடத்தப்படுகின்றது. மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்ட அவர்களது போராட்டத்தின் சாராம்சம் “ஒட்டு மொத்த விடுதலை” – இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடம் இருக்கும் காஷ்மீரை இணைத்து ஒன்றினைந்த காஷ்மீரை உருவாக்கி, ஒரு சுதந்திர பூமியை நிறுவது. இதற்கான முயற்சிகளால் இறங்கிய JKLF, இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் பலம் பொருந்திய செல்வாக்குடன் திகழ்கிறது.

 2007-ல் யாசீன் மாலிக் தலைமையில் “சுதந்திரத்தை நோக்கிய பயணம்” (JOURNEY TO FREEDOM) என்ற அமைதி பிரச்சாரத்தை தொடங்கி 1 வருடம் காஷ்மீரில் சுற்று பயணம் செய்தார்கள். 3500-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் தங்களது கொள்கைகளை வேறூன்ற செய்ததோடு அம்மக்கள் படும் கஷ்டங்கள், துன்பங்கள் ஆகியவற்றில் பங்கெடுத்தார்கள். இதன் விளைவு யாசீன் மாலிக்கையும், JKLF-யும் அறியாத காஷ்மீரிகள் இல்லை என்ற நிலை உருவானது. ஜனநாயக அடிப்படையில் அறிவுரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் துடிப்பு மிக்க இளைஞர் தான் யாசீன் மாலிக். பலமுறை அராசாங்கத்தின், அதிகாரவர்க்கத்தின் கோரப்பிடியினால் கைது செய்யப்பட்டு சிறைகளை இருப்பிடமாக்கி கொண்டவர். காஷ்மீர் மக்களின் விடுதலைக்காக போராடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக ராஜாஸ்தான், காஷ்மீர், டெல்லி என பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏன் இந்த போராட்டம்? என்பவர்களுக்காக இந்த ஒற்றை பத்தி பதில் சொல்லும். இந்தியா காஷ்மீரை தன் கட்டுபாட்டுக்குள் வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காய் 1 லட்சத்திற்க்கும் அதிகமான ராணுவ வீரர்களை அங்கே குவித்துள்ளது. அதன் விளைவு காய்கறி வாங்க கூட 10 ராணுவ அரண்களை கடந்து செல்ல வேண்டும். 9 அரண்களை கடந்து செல்லும் போது 10 வது அரணில் தீவிரவாதி என்று கூறி கொலை செய்யப்படலாம் என்ற அடக்கு முறையின் கீழ் காஷ்மீர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 1990-ம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் கீழ் கேட்பாரின்றி மக்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்துவிடும் உரிமை இந்திய ராணுவ படைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த ராணுவ அதிகாரிகளாலும், அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடும் அதிகாரவர்க்கதினராலும் தங்களது கற்புகளை இழந்து, கணவன்களை இழந்து, குழந்தைகளை இழந்து தவிக்கும் காஷ்மீர் பெண்களின் கண்ணீருக்கான போராட்டம் தான் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னனியின் (JKLF) போராட்டம்.

சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாராக வருகை தந்திருந்தார் இந்த உரிமைக்கான போராட்டத்தின் சொந்தகாரரான யாசீன் மாலிக். அவர் தமிழகத்திற்கு

மே 23, 2013

சவுதி அரேபியாவில் இந்திய பாஸ்போர்ட் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்தது

புதிய பாஸ்போர்ட்களுடன் இந்தியாவில் இருந்து எங்கள் நாட்டிற்கு வேலை செய்ய வரும் இந்தியர்களை அனுமதிக்க முடி யாது என சவுதி அரேபியா அரசு சமீபத்தில் அறிவித்தது. பழைய இந்திய பாஸ் போர்ட்களில் சம்பந் தப்பட்ட நபர்களின் புகைப்படம் இரண்டாம் பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. ஆனால், புதிய பாஸ்போர்ட்டில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இவ்வகையில் மூன்றாம் பக்கத்தில் புகைப்படம் இடம்பெற்றுள்ள பாஸ்போர்ட்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சவுதி உள்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. இதனால், ஜெத்தா விமான நிலையத்தில் இறங்கிய இந்தியர்கள் சிலர் சிரமத்திற்குள்ளான தாக புகார்கள் எழுந்தன.

 இதனையடுத்து, சவுதியில் உள்ள இந்திய தூதர் ஹமீத் அலி ராவ் நேற்று உள்துறை அமைச்சர் அகமது அலிசாலே-வை சந்தித்தார். இந்திய பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகத் தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதிய பாஸ் போர்ட்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை சவுதி அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச் சரிடம் அவர் தெரிவித்தார். இந்த விளக்கத்தை சவுதி அமைச்சரும்

மாலேகான் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

நான்கு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை குற்றவாளியாக சேர்த்து 2006-ஆம் ஆண்டு மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜன்சி சிறப்பு மோக்கா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. லோகேஷ் சர்மா, டான்சிங், ராஜேந்திர சவுத்ரி,மனோகர் நர்வாரியா ஆகியோரின் பங்கினை தெளிவுப்படுத்தும் இக்குற்றப்பத்திரிகையில் சுவாமி அஸிமானந்தாவின் பெயர் இடம் பெறவில்லை.

 மாலேகான் 2006 குண்டுவெடிப்பு வழக்கில் ஏற்கனவே அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை அநியாயமாக குற்றவாளியாக இவ்வழக்கில் சேர்த்த சி.பி.ஐ மற்றும் மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படையினருக்கு, என்.ஐ.ஏ சமர்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகை பலத்த பின்னடைவாகும். தலைமறைவாக உள்ள ராம்ஜி கல்சங்கரா, சந்தீப் டாங்கே, அமித் சவுகான் ஆகியோருக்கு எதிரான விசாரணை நடந்துவருவதாக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. ராம்ஜி மற்றும் டாங்கேயின் தலைக்கு ரூ.10 லட்சம் வீதமும், அமித் சவுகானின் தலைக்கு ஐந்து லட்சம் ரூபாயும் என்.ஐ.ஏ பரிசுத்தொகை அறிவித்திருந்தது. குற்றவாளிகளுக்கு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. சுவாமி அஸிமானந்தாவை இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்ப்போம் என்று என்.ஐ.ஏ நேற்று முன் தினம் கூறியிருந்தது. ஆனால், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் அவரது பெயர் இடம் பெறவில்லை.

 இவ்வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், துணை குற்றப்பத்திரிகை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி ராம்ஜி கல்சங்கரா, ராஜேந்திர சவுத்ரி, அமித் சவுகான் ஆகியோருடன் சேர்ந்து மாலேகானுக்கு சென்றிருந்ததாக டான்சிங் விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளான். குண்டு வைக்கவேண்டிய இடத்தை பார்வையிட்ட பிறகு இவர்கள் இந்தூருக்கு சென்றுள்ளனர். சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லோகேஷ் சர்மா இவ்வாண்டு கைது செய்யப்பட்டான்.

ராஜேந்தர் சவுத்ரி, டான்சிங், மனோகர் ஆகியோரை கைது செய்ததைத் தொடர்ந்து வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டது. 2006-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 125 பேருக்கு காயம் ஏற்பட்டது. 2008-ஆம் ஆண்டு மாலேகானில் நிகழ்ந்த 2-வது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக ராணுவத்தில் பணியாற்றிய கர்னல் புரோகித், சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில்

கடலூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை ஜோர்

கடலூர், : கடலூர் பகுதிகளில் சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. சாராய விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.கடலூர் மாவட்டம் சாராய சாவு பட்டியலில் உலகை திரும்பி பார்க்க செய்தது வரலாற்று பதிவு. ஆனால் இப்பதிவு நடந்தும் கூட தொடர் சாராய விற்பனை என்பது காட்டாற்று வெள்ளம் போல் ஓடத்தான் செய்கிறது.

 மது கடத்தல், சாராய விற்பனை என குற்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்துவதற்கென்றே செயல்படும் ஒரு பிரிவாக உள்ள கலால் துறையும், பிற காவல் துறையின் செயல்பாடுகளும் சாராய சாம்ராஜ்யத்தை கண்டுகொள்ளாமல் உள்ளதால் இதன் விற்பனை தற்பொழுது மாவட்டத்தில் ஜோராக நடந்து வருகிறது. இதிலும் மாவட்டத்தின் தலைநகர் கடலூரிலும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் சாராய விற்பனை விறுவிறுப்புடன் நடந்து வருவது மக்களை மிரள வைத்துள்ளது. கடலூர் நகரில் புதுப்பாளையம் புதுநகர், தேவனாம்பட்டினம், கெடிலம் ஆற்றுப்பகுதி, மஞ்சக்குப்பம் சுடுகாட்டு பகுதி என தொடரும் பட்டியலில் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள சான்றோர் பாளையம், மனக்குப்பம், சுத்துக்குளம், வசந்தராயன்பாளையம், கொடிகால் நகர், வடுகபாளையம், வண்டிப்பாளையம், பச்சையாங்குப்பம், திருப்பாதிரிபுலியூர் காவல் சரகத்திற்குட்பட்ட நத்தப்பட்டு சாலை, திரு வந்திபுரம் குவாரி பகுதிகள் என அனைத்து இடங்களிலும் சாராய விற்பனை சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

சாராயம் மற்றும் புதுச்சேரி சரக்கு கடத்தலை தடுக்க கடலூர்- புதுச்சேரி எல்லையில் சாவடி, ஆல்பேட்டை, குமுதா ம்மேடு, வெளிச்செம்மண்டலம் உள்ளிட்ட இடங்களில் சோதனைசாவடிகள் அமைத்திருந்தும் மாமூல் வேட்டை தொடரத்தான் செய்கிறது. இதற்கு போலீசார் துணை போவதாக சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர். இது போன்று நகர மற்றும் சுற்றுப்புற பகுதியிலும் ஏட்டு முதல் உயர் அதிகாரிகள் வரை முறையாக கவனிக்கப்படுவதால்

முதல் தலைமுறை பி.ஏ. பி.எல். மாணவர்களுக்கும் கல்வி கட்டணச் சலுகை..

சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்., படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப் பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டப் பள்ளியில் பி.ஏ., பி.எல்., சட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அரசின் முகமையான அம்பேத்கர் பல்கலைக்கழகம் மூலம் தகுதித் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. இந்தப் படிப்பு சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகிற காரணத்தால், ஒற்றைச் சாளர கலந்தாய்வின் முறையில் நடைபெறவில்லை என்பதாலும் இதனைச் சிறப்பினமாகக் கருதி கடந்த 2010-ம் கல்வியாண்டு முதல் பி.ஏ. பி.எல்., படிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.

மே 19, 2013

பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை: மே 21 முதல் விண்ணப்பம் விநியோகம்

பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்த மாணவர்கள் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம்.

 வார வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பப் படிவங்களை நேரடியாக பெற விரும்புவோர் ரூ.300-க்கான டி.டி.யை " The Secretary, Second year B.E./B.Tech Degree Admissions 2013, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi - 6300004" என்ற பெயரில், காரைக்குடியில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும். அதைக் கொடுத்து விற்பனை மையங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் கிண்டிதொழில்நுட்பக் கல்வி இயக்ககத்திலும், புரசைவாக்கம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியிலும் விண்ணப்பம் செய்யப்படும். பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை" The Secretary, Second year B.E./B.Tech Degree Admissions 2013, Alagappa Chettiar College of Engineering and Technology, Karaikudi - 6300004" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய

பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய ராணுவ ஊழியர் சின்ஹா கைது!

   
  பாகிஸ்தான் நாட்டின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐக்கு இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்களை அளித்த குற்றச்சாட்டின் பேரில் ராணுவத்தில் பணியாற்றும் ஊழியரான பி.கே.சின்ஹா கைது செய்யப்பட்டுள்ளார். சின்ஹா, தென்மேற்குப் பகுதி படைப்பிரிவில் ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட பொருள்கள் சப்ளை செய்யும் பிரிவில் எழுத்தராகப் பணி புரிந்து வருகிறார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சின்ஹா, இந்திய ராணுவத்தின் நடமாட்டம் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் மற்றும் ஆவணங்களை நேபாளத்தில் செயல்படும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ பிரிவிடம் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

 இதைத் தொடர்ந்து கடந்த 15-ம் தேதி அலுவலக ரகசியச் சட்டத்தின் கீழ் சின்ஹா கைது செய்யப்பட்டார். இப்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் உயரதிகாரி தல்பத் சிங் தின்கர் நேற்று தெரிவித்தார். இது குறித்து தின்கர் மேலும் கூறுகையில்; “சின்ஹா, 4 முறை நேபாளத் தலைநகர் காட்மாண்டுக்கு பயணித்து, ஐஎஸ்ஐ முகவரிடம் முக்கியமான தகவல்களை அளித்துள்ளார். உளவு பார்த்ததற்காக அவருக்கு இந்தியா மற்றும் நேபாள ரூபாய்கள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தொகை எவ்வளவு என்று உறுதியாகக் கூற முடியாது. ராஜஸ்தான் மாநிலம், ஜோத்வாராவில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன” என்றார். போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சின்ஹாவிடம் உளவுத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ராணுவ செய்தித் தொடர்பாளர் எஸ்.டி.கோஸ்வாமி கூறுகையில்; “இந்த வழக்கு தொடர்பாக போலீஸாருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ராணுவம் புரியும். சின்ஹா, ராணுவத்தில் எழுத்தராகப் பணிபுரிவதால் அவர் மீது ராணுவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க

மே 16, 2013

முஸ்லிம்கள் மீதான தீவிரவாத வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! :சுஷில் குமார் ஷிண்டே!!

 
புதுடெல்லி:முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத குற்றம் சுமத்தி கைதுச் செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை நிறுவுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இத்தகைய வழக்குகளில் எத்தனை முஸ்லிம்கள் எத்தனை ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கண்டறியவும் மாநிலங்களுக்கு உத்தரவிடபட்டுள்ளதாக ஷிண்டே கூறினார்.’உண்மைகளை கண்டறிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது . அதற்கு கால அவகாசம் தேவைப்படும்’ என்று ஷிண்டே மேலும் கூறினார். தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரணைச் செய்ய தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) சட்டப்படி இந்தியாவில் 39 சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பான வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை சிக்க வைத்து நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் தனது கவலையி ஷிண்டேவிடம் தெரிவித்திருந்தார்.

சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யு.ஏ.பி.ஏ) சிறுபான்மை மக்களுக்கு எதிராக துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், தீவிரவாதம் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும்

மே 15, 2013

மருத்துவக் கல்லூரி சேர்க்கை நுழைவுத் தேர்வு கிடையாது!

     மருத்துவக் கல்லூரியில் சேர நுழைவுத் தேர்வு இல்லை என்று உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் எந்த கல்லூரியிலும் சேரு வதற்கு நுழைவுத் தேர்வு கிடையாது. இந்த வகை யில் தி.மு.க. அரசின் போது நிறைவேற்றப் பட்ட சட்டம் செல்லும் என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றமே தீர்ப்புக் கூறியுள்ளது. +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப் படையிலேயே சேர்க்கை கள் நடைபெற்று வருகின்றன. நுழைவுத் தேர்வால் கிராமப் பகுதி மாணவ - மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதுதான் நுழைவுத் தேர்வு ரத்துக்கு அடிப்படையான காரணமாகும்.

 இந்த நிலையில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப் புக்கும் மற்றும் எம்.டி, எம்.எஸ். போன்ற மேற்படிப்புகளுக்கும் அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாண வர்கள் சேர்க்கை நடை பெறும் என்று, மத்திய அரசின் கட்டுப்பாட் டில் உள்ள இந்திய மருத் துவ கவுன்சில் கடந்த ஆண்டு அறிவித்து இருந் தது. தமிழக அரசு மட் டுமின்றி, ஆந்திரா உள் ளிட்ட பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தன. பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வந்த மொத்தம் உள்ள 23 வழக்குகளும் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றப் பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையில் ஏ.ஆர்.தவே, விக்ரம்ஜித் சென் ஆகியோரை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில் நேற்று இடைக்கால தீர்ப்பு வழங்கியது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு இருக் காது என்றும், தற்போது உள்ள நிலையே தொடர்ந்து நீடிக்கும் என்றும் அறிவிக்கப் பட்டு உள்ளது. என்றாலும், இதில் இறுதி தீர்ப்பை, வருகிற ஜூலை மாதம் முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். ஒரு வேளை இந்த தீர்ப்பில் மாற்றம் எதுவும் வந்தாலும், மாணவர்கள் நலன் கருதி அடுத்த கல்வி ஆண்டுக்குத்தான் அந்த தீர்ப்பு பொருந்தும். இதற்கிடையில், இந்த வழக்கில் கடந்த

இனக்கலவர வழக்கு: முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை விதிக்க கோரும் முடிவு நிறுத்தம்!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து திட்டமிட்டபடி கலவரத்தை அரங்கேற்றினர். இதில், நரோடா பாட்டியா சம்பவத்தில் 96 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து கடந்த ஆகஸ்டு மாதம் தீர்ப்பு வழங்கியது. கலவரத்தின்போது, "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசில் மந்திரியாக பதவிவகித்த மாயா கொத்னானிக்கு 28 ஆண்டு சிறைத்தண்டனையும், பஜ்ரங் தளத்தொண்டர் பாபு பஜ்ராங்கிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனையும், குற்றம் சாட்டப்பட்ட மீதி 8 பேருக்கு 31 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டன. இந்த தண்டனை போதாது என சுப்ரீம் கோர்ட்டு நியமித்த சிறப்பு புலனாய்வு குழு கருதியது.

எனவே முன்னாள் மந்திரி மாயா கொத்னானி உள்ளிட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வலியுறுத்தி, குஜராத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்ய அது விரும்பியது. இதற்கு "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. ஆனால் இது தொடர்பாக "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசு வலது சாரி அமைப்புகளின் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் திடீரென "நரபலி நாயகன்" நரேந்திரமோடி அரசு தனது மனதை மாற்றிக்கொண்டுள்ளது. கொத்னானி உள்ளிட்ட 10 பேருக்கும் மரண தண்டனை விதிக்கக்கோரும் அப்பீல் வழக்குக்கு அனுமதி அளித்த தனது முந்தைய முடிவை அது நிறுத்தி வைத்தது. இந்த தகவலை மாநில நிதித்துறை மந்திரி நிதின் பட்டேல் நேற்று ஆமதாபாத்தில் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறும்போது, நரோடா பாட்டியா சம்பவ வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை வழங்க கோரும் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில்

பொறியியல் - தெரிந்து கொள்ள வேண்டியவை....



+2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டதால் அடுத்தக்கட்டத்திற்கு மாணவர்கள் தங்களை தற்போது தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்தால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்? உள்ளிட்ட எண்ணற்ற சந்தேகங்கள் மாணவர்கள் மனதில் எழாமல் இல்லை. இன்ஜினியரிங், MBBS, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கலை அறிவியல் படிப்புகள் சிறந்த படிப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது . அதேபோல் பொறியியல் மட்டும் தான் சரியான தேர்வு என்றும் கூறி விட முடியாது. மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியாக அடையாளம் கண்டு, அத்துறையில் தடம் பதிக்க வேண்டும். பொறியியல் மட்டும் தான் கல்வி என்பது அல்ல. எந்த படிப்பு படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெற்றோர்களைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு தனது மகனையோ மகளையோ இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நான்கு ஆண்டுகள் படிப்பை தொடர்வதில் சிக்கல்கள் இருக்குமா என்பதைப் பற்றி ஒருபோதும் அவர்கள் யோசிப்பதில்லை. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, அப்படிக் கிடைத்தால் எவ்வளவு சதவிகிதம் கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். அதை நம் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலையில் கட்ட முடியுமா? இதையெல்லாம் பெற்றோர்கள் முதலில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் முன் இவற்றையெல்லாம் திட்டமிட வேண்டும். பள்ளிப் படிப்பு வரை பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அது படிப்படியாக குறைகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கட்டாயம் செலுத்த வேண்டும்.. இன்றைய மாணவர்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் முதன்மையான படிப்புகளில் ஒன்றாக, பொறியியல் துறை கருதப்படுகிறது. இறைவன் படித்த இந்த உலகை, இறைவன் கொடுத்த கல்வியாற்றலின் மூலம் கட்டமைத்தவர்கள் பொறியாளர்களே என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பொறியாளர்கள் செய்யும் பணிகள் ஏராளம். எனவே இந்த துறையில் நாமும் தடம் பதிக்க வேண்டும்.

பொறியியல் தொடர்பாக எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவே இந்த பதிவு கட் ஆஃப் மதிப்பெண்கள்! +2 மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். +2 தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!

 ரேண்டம் நம்பர் என்றால் என்ன? ஒரே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் ‘ரேண்டம் நம்பர்’ (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும். இருவருக்கும் வழங்கப்பட்ட ‘ரேண்டம் நம்பரில்’ எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான்

மே 13, 2013

பாகிஸ்தான் தேர்தல்: மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்கிறார் நவாஸ் ஷெரீப்

       
 பாகிஸ்தானில் வரலாற்று சிறப்பு மிக்க நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. அத்துடன் கைபல் பாக்துங்வா, பஞ்சாப், சிந்து மற்றும் பலுசிஸ் தான் ஆகிய மாகாணங்களுக் கும் தேர்தல் நடத்தப்பட்டது. 342 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் பதவிகளுக்கு 4670 வேட்பாளர்களும், மாகாண சபைகளுக்கு சுமார் 11 ஆயிரம் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். பலத்த பாதுகாப்புடன் காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு நடை பெற்றது. வாக்காளர்கள் வருகையை அதிகரிப்பதற்காக வாக்குப்பதிவுக்கு ஒரு மணி நேரம் கூடுத லாக வழங்கப்பட்டது.

அதன்படி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங் கியது. ஆரம்பம் முதலே நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தது. பார்லிமென்டில் மெஜாரிட்டியை நிரூபிக்க, 134 இடங்கள் தேவை.பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, பஞ்சாப் மாகாணத்தில் ஏற்கனவே, ஆளும் கட்சியாக இருந்தது. தற்போது மீண்டும் இந்த மாகாண சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 297 இடங்களில், 188 இடங்களை கைப்பற்றி, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற முறையில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி, தோழமை கட்சிகளுடன் இணைந்து, ஆட்சி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. நவாஸ் ஷெரீப், மூன்றாவது முறையாக, பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்களாக யூசுப் ரசா கிலானி, ராஜா பெர்வேஸ்

கர்நாடக முதல்வராக இன்று பொறுப்பேற்கிறார் சித்தராமையா!

கர்நாடக மாநிலத்தின் 22வது முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். ஸ்ரீ கண்டீரவா விளையாட்டுத் திடலில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில், அந்த மாநில ஆளுநர் பரத்வாஜ், சித்தராமையவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 50 ஆயிரம் பேர் கூடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இன்று சித்தராமையா மட்டும் பதவியேற்கிறார். அமைச்சர்கள் விரைவில் பதவி ஏற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சி

பெங்களூர் குண்டுவெடிப்பு கைது! இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் இன்று அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். பெங்களூர் குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் பேசும்போது; தமிழகத்தில் முஸ்லிம் இளைஞர்களை குறிவைத்து தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு தொடர்கிறது. கடந்த ஏப்ரல் 17 அன்று பெங்களூருவில் பா.ஜ.க அலுவலகத்திற்கு முன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது கண்டிக்கத்தக்கது, இதில் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இவ்வழக்கில் நடந்த சமீபத்திய கைது நடவடிக்கைகள் முஸ்லிம் சமுதாயத்தைக் குறிவைத்தே திட்டமிட்டு நடத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றனர். குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு மேலப்பாளையத்தை சேர்ந்த கிச்சான் புகாரி உள்ளிட்ட சில முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது. இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும். பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன் நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர். கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர். பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன. இந்நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்று தமிழகத்திலும் இந்த நிலை உருவாக்குவது வேதனைக்குரியது.

 வகுப்புவாத உணர்வின்றி செய்ய வேண்டிய இந்த உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் ஒரு சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருப்பதும் தமிழக முதல்வரின் கவனத்தை எட்டுகிறதா என்பது தெரியவில்லை. அதேபோல் முஸ்லீம்கள் குறித்து சரியான, நேர்மையான தகவல்கள் அறிக்கைகள் தமிழக முதல்வருக்கு உளவுத்துறையினர் சமர்பிக்கப்படுவாதகவும் தெரியவில்லை. காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதல்வர் அவர்கள் உளவுத்துறையும், காவல்துறையையும் சீரமைக்க வேண்டுமெனில் சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்

மே 12, 2013

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு!

சவூதி அரேபிய அரசு நித்தாகத் என்னும் தேசிய திட்டத்தின்படி சட்டத்திட்டங்களுக்கு உட்படாத, காலநீட்டிப்பாய் தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடித்து வெளியேற்றி வந்தது. இதனால் வெளிநாட்டுப் பணியாளர் பாதிக்கப்பட்ட நிலையில், சட்ட முறைமைகளின் கீழ் வராத அயல்நாட்டுப் பணியாளர்கள் உடனடியாக தங்கள் குடியுரிமைகளையும், பணி உரிமங்களையும் சரிசெய்துகொள்ள சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் மூன்றுமாதங்கள் சலுகை அளித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் ஊழியர்நலத்துறையும், உள்துறையும் இணைந்து நேற்று எடுத்த முடிவின்படி குடியுரிமை அட்டை, பணி உரிமம் ஆகியவற்றில் சட்ட மீறல் செய்துள்ள அனைத்து வெளிநாட்டுப் பணியாளருக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன. ஏப்ரல் 6, 2013 க்கு முன்பு சட்ட மீறல்கள் செய்தவர்களுக்கு இந்த மன்னிப்புப் பொருந்தும் என்றும், அந்த நாளுக்குப் பிறகான மீறல்கள் யாவும் குற்றமாகவே கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை காலாவதியானவர்களும், ஸ்பான்சர் எனப்படும் (சவூதி) பொறுப்பாளரிடமிருந்து ஓடித் தப்பியவர்களுக்கும் இந்தப் பொதுமன்னிப்பு பொருந்தும் என்றும், அவர்கள் உடனடியாக, தங்கள் குடியுரிமை நிலையை சரிசெய்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்ஜூ, உம்ரா வழியே சவூதியில் நுழைவு பெற்று ஆங்காங்கே பணியில் சட்ட அனுமதியின்றி அமர்ந்திருப்பவர்களுக்கும், ஜூலை 3, 2008க்கு முன்பு நுழைவு பெற்றவர்களாக இருந்தால், பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளரின் குடியுரிமை அட்டைகளை புதுப்பித்தல், தன் வணிக உரிமங்களைப் புதுப்பித்தல் ஆகியவை சவூதி பொறுப்பாளரின் கடமையே ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி அல்லது நிறுவனம் மாற விரும்பும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பொறுப்பாளர்கள் (கஃபீல்) அனுமதி அளிக்க

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு! : ஆர்எஸ்எஸ் பிரமுகருக்கு தொடர்பு?

பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே, கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஒருவருக்கு உரியது என போலீஸார் தெரிவித்துள்ளனர். கர்நாடகா-கேரளா எல்லைப் பகுதியைச் சேர்ந்த அந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை. இந்நிலையில், இந்த வழக்கில் அப்பாவியாக கைது செய்யப்பட்டுள்ள கிச்சான் புகாரியிடம் இருந்து மொத்தம் 16 சிம் கார்டுகளை போலீஸார் பறிமுதல் செய்ததாக சொல்லபடுகிறது.

மே 09, 2013

பிளஸ் டூவுக்குப் பின் கலை அறிவியல் படிப்புகள்...

பிளஸ் டூ படித்து முடித்த மாணவர்களில் கணிசமான மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள். அந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள சில படிப்புகள் விவரம்...

பி.ஏ., டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட் சுற்றுலா துறை வளர்ந்து வரும் முக்கியத்துறை. இப்படிப்பில் சேர விரும்புபவர்கள் பிளஸ் டூ வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். பிஸினஸ் டூரிஸம் புராடெக்ட்ஸ், டூரிஸம் மார்க்கெட்டிங், இன்டர்நேஷனல் டூரிஸம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஃப்ரண்ட் ஆபீஸ் மேனேஜ்மெண்ட், கம்ப்யூட்டர் ரிசர்வேஷன் சிஸ்டம், டிக்கெட் புக்கிங், டூரிஸம் அண்ட் ஹியூமன் ரைட்ஸ், டூர் கைட்ஸ் அண்ட் ஆபரேஷன்ஸ் என டூரிஸம் குறித்த பல்வேறு பாடங்களையும் இந்த மூன்றாண்டுகளில் கற்றுக் கொடுத்து விடுவோம். அதுமட்டுமின்றி, ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக்கொடுத்து விடுவோம். இப்படிப்பை முடித்தவர்கள் சர்வதேச, இந்திய அளவில் டூரிஸ்ட் கைடாக பணியாற்றலாம். சொந்தமாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தலாம், விமானம், ரயில் என அனைத்து விதமான பயணங்களுக்கும் டிக்கெட் புக்கிங் செய்து தரும் அலுவலகத்தில் பணிபுரியலாம். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சுற்றுலா வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணியாற்ற முடியும். ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ப்ரண்ட் ஆபீஸ் மேனேஜராகவும் பணியாற்றலாம். கைடாக இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்" என்கிறார், எத்திராஜ் மகளிர் கல்லூரி, டூரிஸம் துறைத் தலைவர் சுப்புலட்சுமி.

சில கல்லூரிகள், புவியியல் பாடத்துடன் சேர்த்து டூரிஸம் மற்றும் டிராவல் மேனேஜ்மெண்ட் படிப்பை வழங்குகின்றன. பி.ஏ., எக்கனாமிக்ஸ் பொருளாதாரத்துறையில் ஆர்வமிக்க மாணவர்கள் பொருளாதாரத்தில் இளநிலைப் பட்டப் படிப்பைத் தேர்வு செய்யலாம். இப்பட்டப்படிப்பில் சேருவதற்கு பிளஸ் டூ வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். எக்கனாமிக் தியரிஸ், எக்னாமெட்ரிக்ஸ், மேத்ஸ் அண்ட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ், இந்தியப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் போன்றவை முக்கிய பாடங்களாக கற்றுத்தரப்படும். இதைத்தவிர, பொருளாதாரம் தொடர்புடைய பல்வேறு துணைப்பிரிவு பாடங்களும் கற்றுத் தரப்படும். இப்படிப்பை படித்து முடித்தவர்கள், ஃபைனான்ஸியல் அனலிஸ்ட் ஆகவும், எக்கனாமிக்கல் அனலிஸ்ட் ஆகவும் பணியாற்றலாம்.வங்கித்துறைப் பணிகளில் சேரலாம். ஃபைனான்ஸியல் ஜர்னல்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியன் எக்கனாமிக் சர்வீஸ் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுத இப்பாடங்கள் உறுதுணையாக இருக்கும்"

பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும் மாணவர்கள், விருப்பப் பாடமாக எடுக்கும் பாடங்களில் ஒன்று, பொலிட்டிக்கல் சயின்ஸ். எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்ட மாணவர்களுக்கான படிப்பு இது என்றே சொல்ல வேண்டும். பிளஸ் டூ வகுப்பில் எந்தப் பாடப் பிரிவை எடுத்துப் படித்திருந்தாலும் இப்பட்டப்படிப்பில் சேர தகுதியுடையவர்கள் ஆவர். பொது நிர்வாகம், இந்திய அரசியல் அமைப்பு, அரசியல் தத்துவம் மற்றும் சிந்தனைகள், மனித உரிமைகள், பொதுநிர்வாகம் குறித்த தியரிகள், அரசியல், மானுடவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. இப்படிப்பை முடித்த மாணவர்கள், திறம்பட படித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, உயர்பதவிகளை வகிக்கலாம்.

ஊடகங்களிலும் பணியாற்றலாம். பொலிடிக்கல் சயின்ஸ் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றால் பப்ளிக் பாலிஸி அமைப்பு, திட்டக்குழு போன்றவற்றிலும் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். சென்டர் பார் செக்யூரிட்டி ஸ்டடீஸ், இன்ஸ்டிட்யூட் பார் பீஸ் அண்ட் கான்பிளிக்ட் ஸ்டடீஸ் உள்ளிட்ட ‘திங்க் டேங்க்’ (சிந்தனைக் குழு) அமைப்புகள் மூலம் இப்படிப்பு படித்த மாணவர்களின் ஆலோசனைகள், கருத்துகள், ஆய்வு முடிவுகள் போன்றவை அரசின் கொள்கை அமைப்பில் முக்கிய கருத்துருக்களாக எடுத்துக் கொள்ளப்படும்"

பி.எஸ்சி., ஸ்டாட்டிஸ்டிக்ஸ் கணிதத்தைப் போலவே புள்ளியியல் படிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. நல்ல வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய படிப்பு இது. இந்தப் படிப்பு குறித்த விழிப்புணர்வு, மாணவர்களிடம் பரவலாக இல்லை. பிளஸ் டூ வகுப்பில் மேத்ஸ், பிஸினஸ் மேத்ஸ், மேத்ஸ் வித் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பிரிவில் படித்த மாணவர்களுக்குத்தான் இப்படிப்பில் முதல் முன்னுரிமை. கணிதத்தை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டியது அவசியம். ஸ்டாட்டிஸ்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், எக்கனாமிக்ஸ், மெடிக்கல் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படும். இன்றைய காலகட்டத்தில் பெருமளவிலான புள்ளிவிவரங்களை கம்ப்யூட்டரில் பாரமரிப்பதால் இப்படிப்பில் கணினிக்கும் முக்கியத்துவம் தருகிறோம். பிஸினஸ் ரிசர்ச், மெடிக்கல் ரிசர்ச், ஐ.டி. நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் டேட்டா அனலிஸ்டாக பணியாற்றலாம். ரிசர்ச் அண்ட் டெவலெப்மெண்ட் பிரிவில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகம் இருந்தும், போதிய மாணவர்கள் இத்துறையில் படிப்பதில்லை என்பதுதான் மிகவும் வருத்தமான விஷயம்"

பி.எஸ்சி., விஷுவல் கம்யூனிக்கேஷன் அச்சு ஊடகம், தொலைக்காட்சி, திரைப்படம், புகைப்படம், அனிமேஷன், விளம்பரம் போன்ற பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் படிப்பு இது.ஊடக வரலாறு, திரைப்படம், டி.வி., ரேடியோ, அட்வர்டைசிங், கார்டூன்ஸ், அனிமேஷன் அண்ட் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், பிரிண்ட் மீடியா, ஆன்லைன் மீடியா, போட்டோகிராபி உள்ளிட்ட பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படும். இதில் ஏதேனும் ஒருதுறையில் ஆர்வம் அதிகமுள்ள மாணவர்கள் அந்தத் துறையில் சாதிப்பதற்கு இப்படிப்பு ஒரு அடித்தளமாக அமையும். இப்படிப்பை முடித்தவர்களுக்கு டி.வி., ரேடியோ, ஆன்லைன், பிரிண்ட் என அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. சொந்தமாய் சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பும் மாணவர்கள், தனியாக போட்டோ ஸ்டுடியோ நடத்தலாம். 2 டி, 3 டி என அனிமேஷன் துறையில் அசத்தலாம். விளம்பரத்துறையிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. பிரபல திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன், நடிகர்கள் விஜய், ஜெயம் ரவி, விஷால் போன்றோர் விஸ்காம் எனப்படும் விஷுவல் கம்யூனிக்கேஷன் படித்த மாணவர்களே"

பி.எஸ்சி., பிஸிக்கல் எஜுக்கேஷன் விளையாட்டில் ஆர்வமிக்க மாணவர்களுக்கு ஏற்ற படிப்பு பிசிக்கல் எஜுக்கேஷன். 50 சதவீதம் படிப்பு, 50 சதவீதம் விளையாட்டு என உங்களை இத்துறையில் மேம்படுத்தும் படிப்பு இது. ஹிஸ்டரி ஆஃப் கேம்ஸ், ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் ஆஃப் ஆல் தி கேம்ஸ், ரெக்ரியேஷன், கிராம்பிங் (தசைப்பிடிப்பு), அம்பயர்ஸ், பயோ மெக்கானிக்ஸ் அண்ட் கிம்சியாலஜி (உடல் அசைவுகள்), அனாட்டமி அண்ட் பிஸியாலஜி, ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, ஸ்போர்ட்ஸ் சோஷியாலஜி, எக்ஸர்சைஸ் பிஸியாலஜி, டெஸ்ட் அண்ட் மெஷர்மெண்ட், டோர்னமெண்ட் ஆர்கனைசிங் மெத்தட்ஸ் அண்ட் பிஸிக்கல் எஜுக்கேஷன் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படும். ஸ்போர்ட்சில் திறனை வளர்த்துக் கொள்ளும் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மத்திய அரசுப் பணிகள், மாநில அரசுப் பணிகள், குறிப்பாக காவல்துறைப் பணியிடங்கள் ஆகியற்றில் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’ மூலம் பணிவாய்ப்பு கிடைக்கும். பி.எட். படிப்பிற்கு இணையாக, பி.பிஎட். படிப்பில் எவ்வித நுழைவுத் தேர்வுமின்றி படிப்பதற்கு இடம் கிடைக்கும். இதைப் படித்து முடித்தால், பள்ளி, கல்லூரிகளில் பிஸிக்கல் டைரக்டராக பணியாற்றலாம்"

பி.எஸ்சி., நியூட்ரிஷன் அண்ட் டயட்டிடிக்ஸ் உணவே மருந்து என்பது நம் முன்னோர் வாக்கு. அத்தகைய உணவினைப் பற்றியும், சத்தான உணவுகளை எந்தெந்த அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் கற்றுத்தரும் படிப்பு நியூட்ரிஷன் அண்ட் டயட்டிடிக்ஸ். பிளஸ் டூ வகுப்பில் வேதியியல் பாடத்தைப் படித்தவர்கள், இப்படிப்பில் சேரலாம். பிஸியாலஜி, மைக்ரோ பயாலஜி, மைக்ரோ நியூட்ரிஷன், மேக்ரோ நியூட்ரிஷன், நியூட்ரிஷனல் பயோ கெமிஸ்ட்ரி, டயட்டிடிக்ஸ், ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், குவான்டிடேட்டிவ் புட் புரடக்ஷன், கம்யூனிட்டி நியூட்ரிஷன் ஆகிய பாடங்கள் இப்படிப்பில் கற்றுத் தரப்படும். இப்படிப்பை முடித்தவர்கள் பப்ளிக் ஹெல்த் சென்டர்களில் ஹெல்த் ஒர்க்கர்ஸ் ஆக பணியாற்றலாம். பிட்னெஸ் சென்டர்களில் நியூட்ரிஷியன் ஆலோசகர்களாகப் பணியாற்றலாம். மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்களில் டயட்டீஷியனாக பணியாற்றலாம். இதயநோய் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் போன்றோர்களுக்கான டயட்டீஷியன் ஆலோசகர்களாக பணியாற்றலாம். சொந்தமாகவும்

பிளாஸ்டிக் தொழில்நுட்ப டிப்ளமோ படிப்புகள்....

நாட்டில் பிளாஸ்டிக் தொழில் சம்பந்தமான தொழில்நுட்பங்களைக் கற்றுத் தருவதற்கான முன்னோடிக் கல்வி நிறுவனம் சிபெட் என்று அழைக்கப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் என்ஜினீயரிங் டெக்னாலஜி. மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தால் 1968-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்தக் கல்வி நிறுவனம். அகமதாபாத், அமிர்தசரஸ், ஔரங்காபாத், போபால், புவனேஸ்வரம், சென்னை, குவாஹாத்தி, ஹாஜிப்பூர், ஹால்டா, ஹைதராபாத், ஜெய்ப்பூர், இம்பால், லக்னோ, மைசூர், பானிபட் ஆகிய இடங்களில் சிபெட் மையங்கள் இருக்கின்றன. இந்த மையங்களில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் படிப்பதற்கேற்ற டிப்ளமோ படிப்புகள் உள்ளன. டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி (டிபிடி), டிப்ளமோ இன் பிளாஸ்டிக்ஸ் மோல்ட் டெக்னாலஜி (டிபிஎம்டி) ஆகிய மூன்று ஆண்டு படிப்புகளில் பத்தாம் வகுப்பில் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம். இந்தப் படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 20. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.

 பிளாஸ்டிக் மோல்ட் டிசைன் (கேட், காம் உள்பட) பாடப்பிரிவில் போஸ்ட் டிப்ளமோ படிப்பு ஓன்றரை ஆண்டுப் படிப்பாகும். மெக்கானிக்கல், பிளாஸ்டிக்ஸ் டெக்னாலஜி, டூல்ஸ், புரடக்ஷன் என்ஜினீயரிங், மெகட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங், டூல் அண்ட் டை மேக்கிங் பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்கள் சேரலாம். சிபெட் கல்வி நிலையத்தில் பிளாஸ்டிக் டெக்னாலஜி (டிபிடி), பிளாஸ்டிக்ஸ் மோல்ட் டெக்னாலஜி (டிபிஎம்டி) ஆகிய பாடப்பிரிவுகளில் டிப்ளமோ படித்த மாணவர்களும் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இப்படிப்பில் சேர அதிகபட்ச வயது வரம்பு 25. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் சலுகை உண்டு.

பிளாஸ்டிக்ஸ் புராசசிங் அண்ட் டெஸ்டிங் பாடப்பிரிவில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிக்க விரும்பும் மாணவர்கள் வேதியியலை ஒரு பாடமாக எடுத்து, மூன்று ஆண்டு பிஎஸ்சி பட்டம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளீயீடு: நாமக்கல் மாணவர்கள் முதலிடம்!

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு பிப்ரவரி 29ம் தேதி துவங்கி, மார்ச், 27ம் தேதி வரை நடந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் மாணவருக்கு தேவையான குடிநீர், கழிவறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, அந்தந்த தேர்வு மையங்களின் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்நிலையில், தேர்வுதாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, இன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

மொத்தம் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 8 லட்சத்து 53 ஆயிரத்து 355 பேர். இவர்களில் 88.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 84.7 சதவீதம். மாணவிகள் 91 சதவீதம். இதில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் முதலிடம் பிடித்துள்ளனர். நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் ஜெயசூர்யா மற்றும் நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவர் அபினேஷ் ஆகியோர் 1189 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். இரண்டாமிடம் இருவருக்கு: இதே போல், நாமக்கல் வித்யா விகாஸ் பள்ளி மாணவர் பழனிராஜ், மற்றும் ஓசூர் ஸ்ரீ விஜய் வித் மெட்ரிக் பள்ளி மாணவி அகல்யா ஆகியோர் 1188 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

 மூன்றாம் இடத்தில் 9 பேர்: இந்த ஆண்டு மாநில அளவில் 9 பேர் 1187 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 1) ராஜேஸ்வரி சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி கோசாகுளம், மேலூர், மதுரை 2) கலைவாணி குறிஞ்சி மெட்ரிக் பள்ளி, நாமக்கல் 3) விஷ்ணுவர்த்தன் கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் 4) கண்மணி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் 5) மனோதினி கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் 6) ரவீனா எஸ்,வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி 7) நிவேதிதா ஜியோன் மெட்ரிக் பள்ளி, சேலையூர், செங்கல்பட்டு 8) பூஜா எஸ். சங்கர் சுவாமி எம். மெட்ரிக் பள்ளி, போரூர், பொன்னேரி 9) முத்து மணிகண்டன் நாசரேத் மெட்ரிக் பள்ளி, ஆவடி, திருவள்ளூர் 200க்கு 200:

இந்தாண்டு ஒவ்வொரு பாடத்திலும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள்:

இயற்பியல் 36
வேதியியல் 1499
 உயிரியல் 682
தாவரவியல் 11
கணிதம் 2352
கம்ப்யூட்டர் சயின்ஸ் 1469
 வணிகவியல் 1336
 பதிவியல் 1815
 பிசினஸ் கணிதம் 430

தமிழை முதல் பாடமாக எடுக்காமல், 

இதர பாடங்களை முதன்மை பாடமாக எடுத்து மாநில அளவில் முதன்மை பெற்ற மாணவர்கள் விவரம் வருமாறு: 1) எஸ். காவ்யா 1192 மதிப்பெண்கள் ரோசரி மெட்ரிக் பள்ளி, சாந்தோம், சென்னை 2) அபிநயா 1191 மதிப்பெண்கள் எஸ்.டி.ஏ.வி., பள்ளி, ஆதம்பாக்கம் 3) பாலாஜி 1191 மதிப்பெண்கள் பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை 4) ஸ்ரீனிவாஸ் 1190 மதிப்பெண்கள் பாரதி மெட்ரிக் பள்ளி, கோவை 5) சைனித்யா 1190 மதிப்பெண்கள் ஜி.ஆர்.டி., மெட்ரிக், சென்னை 6) மேக்னா சரவணன் 1190 மதிப்பெண்கள் க்ளூனி மெட்ரிக், சேலம் 7) ராஜாராம் 1190 மதிப்பெண்கள் ஏவி மெய்யப்பன் மெட்ரிக் பள்ளி, விருகம்பாக்கம் 8) கதீஜா பாய் 1190 மதிப்பெண்கள் அவிலா மெட்ரிக் பள்ளி, வேலாண்டிபாளையம், கோவை

-Dinamalar

மன்பஈ உலமா பேரவை துவக்கம்


லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் ஒருங்கிணைப்புக் கூட்டம்
மன்பஈ உலமா பேரவை துவக்கம்
மவ்லானா ஏ.நூருல் அமீன் ஹஸரத் தலைவராகத் தேர்வு
ulama peravai1லால்பேட்டை, மே 8-தமிழகத்தின் தலைசிறந்தமார்க்க கல்விக் கேந்திரமாகவிளங்கும் லால்பேட்டை ஜாமிஆமன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியில் மார்க்க கல்விபயின்று வெளியேறும் மாணவர்களுக்கு மன்பஈ என்கிற பட்டம்வழங்கப்படுகிறது.
கடந்த 150 ஆண்டுகளாகமிக சிறந்த மார்க்க கல்வியைஊட்டி வரும் ஜாமிஆ மன்பவுல்அன்வார் அரபிக் கல்லூரியின்150-வது ஆண்டு விழா அடுத்தமாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக் கும்வேளையில் உலகம் முழுவதும்பரவிப் பணியாற்றும் மன்பஈஉலமாக்களை ஒன்றிணைக் கும்முகமாக மன்பஈ உலமா பேரவை துவக்க விழா 7-5-2013 செவ்வாய்க் கிழமை லால்பேட்டைஜாமிஆ மன்பவுல் அன்வார்அரபுக் கல்லூரி தாருல் தப்ஸீர்கலைக் கூடத்தில் நடைபெற்றது.ulama peravai6
பேரவை தொடக்க விழாகூட்டத்திற்கு மௌலானா முப்திஅஷ்ரப் அலி மன்பஈ தலைமைவகித்தார். மௌலானா தளபதிஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ வரவேற்றுப் பேசினார். ஜமாஅத்துல் உலமா சபை தலைவர்மௌலானா ஏ.இ.எம்.அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் துவக்கவுரை நிகழ்த்தினார்.ஜாமிஆ முதல்வர் மவ்லானாஏ.நூருல் அமீன் மன்பஈ ஹஜ்ரத்,ஆவூர் அப்துல் ஷக்கூர் மன்பஈ,மதுரை பி.கே.என்.அப்துல் காதிர்மன்பஈ, மௌலானா ஹாமித்பக்ரி மன்பஈ, முகவை பஷீர் சேட்மன்பஈ, திருச்சி மாவட்ட அரசுடவுன் காஜி ஜலீல் சுல்தான்மன்பஈ, முகவை கவிஞர் உமர்ஜாபர் மன்பஈ, இளையாங்குடிமௌலானா முஹம்மது ராஜூக்மன்பஈ ஆகியோர் உரையாற்றினர்.பள்ளப்பட்டி மௌலானாமுஹிபுல்லா மன்பஈ துஆ செய்தார். மௌலானா முஹம்மதுஅன்சாரி மன்பஈ நன்றி கூறினார்.இந் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மன்பஈஉலமாக்கள் பங்கேற்றனர் .
நிர்வாகிகள் தேர்வு
ஜாமிஆ முதல்வர் மவ்லானாஏ.நூருல் அமீன்

மே 06, 2013

மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அப்பகுதியில் ஆய்வுச் செய்த ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!

புதுடெல்லி:ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அப்பகுதியில் ஆய்வுச் செய்ததாக கைதான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவ்வழக்கில் கைதான ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ராஜேந்திர சவுத்ரி, தேஜாராம் பர்மர் ஆகியோர் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 விசாரணையின் போது ராஜேந்தர் சவுத்ரி அளித்த வாக்குமூலம்: குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கு பரிசோதனைச் செய்ய மத்தியபிரதேச மாநிலத்தின் போபாலில் இருந்து 2007 பெப்ருவரி மாதம் நான் உள்ளிட்ட குழுவினர் ஹைதராபாத்திற்கு சென்றோம்.சார்மினார் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட நாங்கள் குண்டுவைப்பதற்கான இடத்தை கண்டுபிடிக்க ஆட்டோ ரிக்‌ஷாவில் சுற்றினோம்.சுற்றுலா பயணிகளைப் போல மக்கா மஸ்ஜிதில் நுழைந்த நாங்கள், தொழுகைக்கு வருபவர்களை கண்காணித்து திட்டங்களை தயாரித்துவிட்டு திரும்பினோம். தேஜாராம் பர்மர் அளித்த வாக்குமூலம்: மே 16-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் மானவதா நகருக்குச் செல்ல ராஜேந்தர் சவுத்ரி உத்தரவிட்டார்.அங்கு தீவிரவாததாக்குதல்களின் தலைவனான ராம்ஜி கல்சங்கரா எங்களிருவரையும் காத்திருந்தார்.

கல்சங்கரா இரண்டு பைகளில் வெடிக்குண்டுகளை அளித்தான்.மே 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஹைதராபாத்திற்கு சென்ற சவுத்ரியும், நானும்ம் ஆட்டோ ரிக்‌ஷாவில் மக்கா மஸ்ஜிதுக்கு அருகில் சென்றோம்.ஒரு வெடிக்குண்டை மஸ்ஜிதின் கேட்டில் நான் தொங்கவிட்டேன்.ராஜேந்தர் சவுத்ரி ஒரு வெடிக்குண்டை மஸ்ஜிதின் மத்திய முற்றத்தில் வைத்தான்.பின்னர் நாங்கள் இருவரும் அவுரங்கபாத் வழியாக மத்தியபிரதேசம் சென்றோம்.இவ்வாறு பர்மர் வாக்குமூலம் அளித்துள்ளான். மத்தியபிரதேசத்தைச் சார்ந்த ராஜேந்தர் சவுத்ரி, சுமந்தர் மற்றும் பஹல்வான் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படுகிறான்.மல்யுத்த போட்டிகளை நடத்தும் இவனுக்கு துப்பாக்கி உபயோகிப்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளான்.ஹிந்துத்துவா தீவிரவாத கும்பலின் தலைவனும், ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின்

மே 03, 2013

ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் புற்றநோய் ஏற்படுத்தும் பொருள்!!

மும்பை: பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. ஜான்சன் அன்ட் ஜான்சன் குழந்தைகள் பவுடரின் 15 பேட்ச்களில் நச்சுத்தன்மை வாய்ந்த் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2007ம் ஆண்டு ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன. இதையடுத்து மும்பை முலுந்தில் உள்ள ஜான்சன் அன்ட் ஜான்சன் ஆலையில் அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஜூன் மாதம் 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த விவகாரம் குறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை கமிஷனர் கம்லேஷ் பி. ஷிண்டே கூறுகையில், புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய எதிலீன் ஆக்சைட் ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடரில் அதிக அளவில் இருந்தது. அதனால் தான் உரிமத்தை சஸ்பெண்ட் செய்தோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:thatstamil

மே 01, 2013

பெட்ரோல் விலை ரூ.3.18 குறைந்தது !

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு 3 குறைத்துள்ளன.பெட்ரோல் விலையை 2 வாரங்களுக்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை தொடர்ந்து, கடந்த மார்ச் சில் இருந்து 3 முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்தன. கடந்த மார்ச் 16ம் தேதி லிட்டருக்கு ஸி2.40ம், பின்னர் ரூ.1ம் குறைந்தன. கடந்த மாதம் 16ம் தேதி ஸி1.20 குறைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ஸி3 குறைத்துள்ளன. நேற்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வந்தது. இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஸி3.18 குறைந்துள்ளது. டெல்லியில் ஸி3, மும்பையில் ஸி3.15, கொல்கத்தாவில் ஸி3.13ம் விலை குறைந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஸி5 குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.3

மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கிகள்!

இஸ்லாமிய வங்கித்துறையில் முதன்மை நிலை பெற்றுள்ள அமானா வங்கி கோலாலம்பூரில் அண்மையில் இடம்பெற்ற Islamic Finance News Awards விழாவில் இரண்டாவது ஆண்டாகவும் இலங்கையின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி என்னும் கௌரவத்தை பெற்றுக் கொண்டுள்ளது. மலேசியாவின் Red Money Group நிறுவனத்தினால் 2012ஆம் ஆண்டில் உலக மட்டத்தில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் உலகளவில் இஸ்லாமிய வங்கிச் சேவைகளை மிகத்திறம்பட வழங்கிவரும் நிதிநிறுவனங்கள் விருதுகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்டன.

விருதுகளுக்கென உலகின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி, ஒவ்வொரு நாட்டிலும் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கி, மிகச்சிறந்த மத்திய வங்கி, ஆண்டுக்கான மிகச்சிறந்த இஸ்லாமிய கொடுக்கல் வாங்கல்கள் என்பன தேர்ந்தெடுக்கப்பட்டன. மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கிச் சேவைகளை வழங்கும் வங்கிகளை தெரிவு செய்வதற்கென தேர்தல் ஒருசார்பற்றதாகவும், வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும், அனைத்து விடயங்களையும் உள்ளடக்கும் அணுகுமுறை கொண்டதாகவும் அமைந்தது. மேற்படி சாதனை பற்றி அமானா வங்கியின் முகாமைப் பணிப்பாளர் பைசல் சாலி பின்வருமாறு தெரிவித்தார். 'இந்த வெற்றியானது, இலங்கையில் இஸ்லாமிய வங்கித்துறையை வளர்த்தெடுப்பதில் எமது விடாப்பிடியான உறுதிப்பாட்டினை உறுதிசெய்கிறது. இந்த உலக விருதானது அமானா வங்கி நாடு முழுவதற்கும் தன்னை விஸ்தரித்தும் வலுவூட்டியும் முன்செல்லும் ஒரு நேரத்திலேயே கிடைத்திருக்கிறது. இத்துறையில் பல நிதிநிறுவனங்கள் பிரவேசித்துவரும் நிலையில் எமக்கு உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கிடைத்து வருகின்றன. எமது வங்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவதன் மூலம் இஸ்லாமிய பைனான்ஸ் செய்தி வாக்கெடுப்பு நிகழ்வில் நாம் வெற்றியாளர்களாக மிளிர்வதற்கு உதவிய வாடிக்கையாளர்கள், செயற்திட்ட உதவியாளர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கின்றேன்.

 மலேசியாவின் மிகச்சிறந்த இஸ்லாமிய வங்கியாக Bank Islam Berhad தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி அமானா வங்கியின் செயற்திட்டப்பங்காளியாகும். இலங்கையில் அது ஒரு தொழில்நுட்ப பங்காளியாக செயற்படுகின்றது. இலங்கையின் முதலாவது உரிமம் பெற்ற வர்த்தக