Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 22, 2013

சிதம்பரத்தில் கட்டுமானப் பொருள் கண்காட்சி!

சிதம்பரத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சியில் மக்களை கவரும் வகையில் வீடு கட்டுவதற்குத் தேவையான நவீனப் பொருள்கள் அடங்கிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சிதம்பரம் கட்டடப் பொறியாளர்கள் சங்கம் சார்பில் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் கட்டுமானப் பொருள்கள் கண்காட்சி, ஏப்ரல் 18-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. கண்காட்சியில் மொத்தம் 69 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோரமெண்டல், ராம்கோ, பாரத் சிமென்ட் நிறுவனங்களின் அரங்குகள், குந்தன், ஐ.எஃப். உள்ளிட்ட நிறுவனங்களின் எலக்ட்டிரிக்கல் பொருள்கள் அரங்குகள், அக்னி, அம்மன் கம்பி நிறுவனங்களின் அரங்குகள், பசுமை வீடுகளை அமைக்கும் லிம்போ வெதர் புரூப் நிறுவனத்தின் அரங்கு, ஜான்சன், நிட்கோ, ராம்டெக், நீரஜ், கபூர் மார்பிள்ஸ் நிறுவனங்களின் அரங்குகள், சூரியஒளியால் இயங்கும் மின்விசிறி, இன்வெர்ட்டர் கொண்ட அரங்கு, ஹை-போக்கஸ் நிறுவனத்தின் சிசி கேமரா அரங்கு, ஆசீர்வாத் பைப்ஸ் நிறுவன அரங்கு, நாராயணா டிம்பர் டிப்போ, சீனுவாசா டிம்பர்ஸ், மீனா பைபர்ஸ், மீரா ஹார்டுவேர்ஸ் ஆகியவற்றின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடப் பொறியியல் துறை மாணவர்கள், கட்டடப் பொறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கட்டடப் பொறியாளர்
சங்க சாசனத் தலைவர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன், தலைவர் ஆர்.சுரேஷ், செயலர் பி.சுந்தரேசன், பொருளர் எம்.கற்பகவேல், ஆலோசகர் பெருமாள், கபிலர், முன்னாள் தலைவர்கள் ஆர்.ராஜா, எஸ்.உமாசங்கர், கண்காட்சித் தலைவர் எஸ்.ராஜேந்திரன், செயலர் ஏ.தெய்வீகன் உள்ளிட்டோர் செய்துள்ளனர். கண்காட்சியை காண வருபவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...