Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 22, 2013

பாஸ்டனில் குண்டு வைத்தவர்கள் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்களாம்!

பாஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை நடை பெற்ற மாரத்தான் போட் டியில் குண்டு வைத்தவர் கள் ரஷ்யாவைச் சேர்ந்த சகோதரர்கள் என அமெ ரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்களில் கருப்பு தொப்பி அணிந்திருந்த வனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். வெள்ளை தொப்பி அணிந்திருந்த 2ஆவது நபரின் பெயர் ட்சோகர் ட்சர்னயேவ் (19) என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. இவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரர் கள் என்றும் ரஷ்யாவில் உள்ள செசன்யா மாகா ணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

 கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கா வில் தங்கியுள்ள இவர் கள், யாருடைய தூண்டு தலின் பேரில் பாஸ்டன் நகரில் தாக்குதல் நடத் தினார்கள்? என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வாட்டர் டவுன் பகுதி யில் உள்ள வீடுகளில் வெள்ளை தொப்பி நபர் தங்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கும் காவல் துறையினர் வீடுவீடாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த இவர்களக்கு சர்வதேச தீவிரவாத இயக்கங்களு டன் நெருங்கியத் தொடர்பு உள்ளதாக காவல்துறை யினர் கருதுகின்றனர். சுட்டுக் கொல்லப் பட்ட கருப்பு தொப்பி ஆசாமியின் உடலில் வெடிகுண்டு கட்டப்பட் டிருந்ததாக பெயர் குறிப் பிட விரும்பாத காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...