Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 04, 2013

பலாத்காரம் செய்தால் மரண தண்டனை அதிரடி சட்டம் அமலுக்கு வந்தது !

நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். ஆசிட் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை திருத்தும்படி பல்வேறு அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கின. இதைத் தொடர்ந்து, பாலியல் பலாத்கார குற்றத்துக்கான தண்டனையை கடுமையாக்கும் வகையில், ‘குற்றவியல் சட்ட (திருத்தம்) மசோதா , 2013ஐ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இதற்கு கடந்த மார்ச் 19ம் தேதி மக்களவையும், மார்ச் 21ம் தேதி மாநிலங்களவையும் ஒப்புதல் அளித்தன. பின்னர், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

இதனால், இந்த மசோதா சட்டமானது. இனிமேல் இந்த புதிய சட்டம், ‘குற்றவியல் சட்டம் ( திருத்தம்) , 2013’ என்று அழைக்கப்படும். இதில், இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை காக்கும் சட்டம் ஆகியவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. மேலும், சம்மத பாலியல் உறவுக்கான வயது வரம்பு 18 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, பாலியல் பலாத்காரத்துக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்படும். அல்லது குற்றத்தின் கொடுமைக்கு ஏற்ப சாகும் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும், இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக பாலியல் பலாத்கார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனையும் அளிக்கலாம். பெண்களின் மீது ஆசிட் வீசுவது கடுமையான குற்றமாக கருதப்பட்டு, குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிரிகளால் ஆபத்து ஏற்படும் பட்சத்தில், தற்காப்புக்காக கொலை செய்யும் உரிமையும் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிட் வீச்சு அல்லது பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லா மருத்துவமனைகளும் உடனடியாக முதலுதவி அல்லது சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும். இதை செய்யத் தவறும் மருத்துவமனைகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும். பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் அதிகாரி, அரசு ஊழியர், பாதுகாப்பு படை வீரர்கள், அலுவலக நிர்வாகிகள் அல்லது மருத்துவமனை ஊழியர்களாக இருந்தால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகளும், அதிகப்பட்சமாக சாகும் வரை சிறை தண்டனையும் கிடைக்கும். பலாத்காரத்தால் பாதிக்கப்படும் பெண்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மன அளவிலோ, உடல் அளவிலோ செயல் இழந்தால், மொழி பெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்பு நிபுணர்களின் உதவி மூலம் அவர்களின் வாக்குமூலத்தை நீதிபதி பதிவு செய்யும் வகையில், இந்திய சாட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

 குற்றம் என்ன? தண்டனை எவ்வளவு 

ஆசிட் வீச்சு, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அதிகபட்சம் ஆயுள் சிறை மற்றும் அபராதம் பாலியல் தொல்லை, 3 ஆண்டு வரை கடுங்காவல்.

பெண்ணை நிர்வாணமாக்க முயற்சி , 3 ஆண்டு முதல் 7 ஆண்டு சிறை. * பெண்ணின் அந்தரங்கத்தை போட்டோ எடுத்து வெளியிடுதல் , முதல் முறை செய்த குற்றத்துக்கு குறைந்தது
ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறை. மீண்டும் அதே குற்றத்தை செய்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை.

பெண்ணை பின்தொடர்தல், முதல் முறை செய்த குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை சிறை. மீண்டும் அதே குற்றத்தை செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.

பாலியல் பலாத்காரம், குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனை.

பலாத்கார கொலை அல்லது பாதிக்கப்பட்ட பெண் கோமா நிலையில் இருப்பது, குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அல்லது மரணதண்டனை.

 கும்பலாக பலாத்காரம், குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை.

 பிரிந்து வாழும் மனைவியுடன் அவரது விருப்பமின்றி பாலுறவு கொள்ளுதல், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறை அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...