Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 29, 2012

புயல் எச்சரிக்கை!

சென்னை அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து புயலாக மாறிவருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சென்னைக்கு அருகே 730 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை இருந்து வந்தது. இது இன்று நகர்ந்து சென்னைக்கு அருகே 500 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதுடன் தீவிரமடைந்து புயலாக மாறிவருகிறது. இது நாளை மறுநாள் நாகை மற்றும் நெல்லூர் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

 இதனால் ராமேஸ்வரம், நாகை, கடலூர், சென்னை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. தொடர் மழையும் பெய்து வருகிறது. காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்கும் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் இன்று பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 யாஅல்லாஹ்! எந்த பாதிப்பும் வராமல் நீயே காப்பற்று!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...