Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 30, 2012

கடலூரில் மீண்டும் புயலா? அச்சத்தில் மாவட்ட மக்கள்

கடலூர், : கடலூர் மாவட்டத்தை மீண்டும் புயல் தாக்கம் தானேவை போன்று பலமாக இருக்கும் என மக்கள் அச்சத்தில் ஆடிப்போயுள்ளனர். தொடர் மழையால் அரசின் இலவச கால்நடைகள் பலியாகி வருவது வேறு விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் தமிழகத்தின் வடிகாலாக இருப்பது பூகோள ரீதியில் அமைந்துள்ள அதன் நிலப்பரப்பு காரணமாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மழைநீர் வடிகால் கடலூர் மாவட்டத்தின் வழியாக பெருக்கெடுத்து வங்க கடலில் கலக்கிறது. இதில் வெள்ள பாதிப்புகள் மாவட்டத்தில் பெருமளவு உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

 புயல் பாதிப்புகளும் மாவட்டத்தின் மீது படையெடுப்பது தொடர்கதையாகியுள்ளது. சுனாமி, தானே போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்கங்கள் மாவட்டத்தை உருக்குலைய வைத்துள்ளது. இதனால் இயல்பாகவே பகுதி மக்கள் பருவ மழையின் தாக்கத்தில் ஆட்டம் காண்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் கடந்த 19ம்தேதி துவங்கிய நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் கொட்டிய மழையிலேயே அனைத்து பிரதான நீர் தேக்கங்களும் நிரம்பியுள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் உருவெடுத்துள்ள புயல் காரணமாக மாவட்டத்தை புரட்டிபோடுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போயுள்ளனர். குடியிருப்பு பகுதியில் வடியாத மழை நீர், வெள்ளம் சூழ்ந்த விளை நிலங்கள் என முதல் கட்டத்திலேயே மிரட்டலுடன் துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இம்முறை ஏற்பட்டுள்ள புயலால் அதன் தாக்கம் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க உத்தரவிட்டுள்ளது.

 தானே பாதிப்பு கடந்த ஆண்டு மாவட்ட மக்களை தவிக்கவிட்டுள்ள நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மீணடும் ஒரு தானே பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்ற செய்தி காட்டுத் தீபோல் மாவட்டத்தில் ஊடுருவியுள்ளது. அதற்கு ஏற்ப புயல் சின்னத்தின் அறிகுறியாக சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை மக்களை அச்சத்தில் ஆட்டம் போடவைத்துள்ளது. தற்பொழுது உருவாகியுள்ள புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடுதல் மழை பெய்யும் எனவும் துறைமுக பகுதியில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வானிலை
மையம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

 இதற்கிடையே தொடர் மழையால் கால்நடைகள் இறப்பு எண்ணிக்கையும் கூடுதலாக்கி வருகிறது. ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி, குறிஞ்சிப்பாடி விஜயா உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆடுகள் பலியான பட்டியலில் அடங்கும். இது போன்று மாவட்டத்தின் பல இடங்களில் கால்நடைகள் பலியாகி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

nanri:Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...