Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 29, 2012

பலத்த மழை எச்சரிக்கை கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

கடலூர், அக்.29-  பலத்த மழை எச்சரிக்கையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை  வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையில் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் நேற்று முன்தினம் வரையில் வெயில் அடித்தது. மீண்டும் மழை இந்த நிலையில் வங்க கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூரில் நேற்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

 காலை முதல் மாலை வரையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிய தொடங்கிய இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.  பள்ளிகளுக்கு விடுமுறை இதற்கிடையே தமிழகம், புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) பலத்த காற்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ அறிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...