Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 18, 2012

மியன்மார் அரசின் அராஜகம் – பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதற்கு தடை

மியன்மார் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓ. ஐ. சி) அங்கு திறக்கவிருந்த அலுவலகத்திற்கு மியன்மார் அரசு தடை விதித்துள்ளது. மக்களின் விருப்பத்திற்கு அமைய ஓ. ஐ. சி. அலுவலகம் அமைப்பது தடுக்கப்படுவதாக மியன்மார் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளின் மிகப் பெரிய அமைப்பான ஓ. ஐ. சி. அலுவலகம் திறப்பதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 மேற்கு மியன்மாரில் ரகின் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் ரகின் இன பெளத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து இங்கு பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு தொடர்ந்து பலர் போதிய நிவாரண உதவிகள் இன்றி தற்காலிக முகாம்களிலேயே தங்கியுள்ளனர். மியன்மாரின் வர்த்தக நகரான
யன்கொனில் நேற்று முன்தினம் சுமார் 3000 புத்த பிக்குகள் ஓ. ஐ. சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோன்ற நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகர் மற்றும் மத்திய நகரான பக்கொகுவிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

 இந்நிலையில் ஏற்கனவே மியன்மார் அரசு அனுமதித்திருந்த ஓ.ஐ. சி. அலுவலகம் அமைக்கும் திட்டத்தை தற்போது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மியன்மாரின் மேற்கு மாநிலமான ரகினில் கடந்த ஜூனில் ஆரம்பமான இனக்கலவரம் அந்த மாநிலம் முழுவதும் பரவியது. இதன்போது இங்கு பெரும்பான்மையாக இருக்கும் பெளத்தர்கள் மற்றும் ரொஹிங்கியா முஸ்லிம்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
-Berunews

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...