Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 22, 2012

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது!

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் சிதம்பரம் நகரில் இந்திரா நகர், நேருநகர், மகாவீர்நகர், சாந்திநகர், ராஜாநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள பாலமான் ஆற்றில் இருகரைகளைத் தொட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழை விவரம்: சிதம்பரம்- 60 மி.மீ., காட்டுமன்னார்கோவில்- 33.50 மி.மீ., லால்பேட்டை- 40 மி.மீ., புவனகிரி- 47 மி.மீ., சேத்தியாத்தோப்பு 36 மி.மீ., ஸ்ரீமுஷ்ணம்- 16 மி.மீ. வீராணம் ஏரி 40 அடியை தொட்டது: கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சனிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது. கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 2500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சனிக்கிழமை 1100 கனஅடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திங்கள்கிழமை ஏரி நிரம்பிவிடும். அதன் பின்னர் சென்னை குடிநீர் வாரியத்துக்கு நீர்
அனுப்பப்படும். பாசனத்துக்கும் நீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...