Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 30, 2012

மியன்மார் காடுகளில் பட்டினியால் வதைபடும் முஸ்லிம்க

மியான்மர் நாட்டில் கடந்த 6 நாட்களாக ரக்கைன் பிராந்தியத்தில் கலவரம் நடந்து வருகிறது. இதில் இதுவரை 82 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கலவரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக பக்கத்து நாடான வங்காள தேசத்துக்கு சென்றனர். ஆனால் அங்கு ஏற்கனவே மியான்மரில் இருந்து ஓடி வந்த பல லட்சம் அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். எனவே மேற்கொண்டு அகதிகளை அனுமதிக்காமல் வங்காளதேச படைகள் அவர்களை விரட்டி அடிக்கின்றன.

இதனால் அவர்களால் வங்காள தேசத்துக்கும் செல்ல முடியாமல் , சொந்த பகுதிகளுக்கும் செல்ல முடியாமல் அங்குள்ள தீவு பகுதிகளிலும், மலை காடுகளிலும் தஞ்சம் அடைந்து உள்ளனர். சுமார் 30 ஆயிரம் பேர் இப்படி தஞ்சம் அடைந்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கு உணவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பட்டினி கிடக்கிறார்கள். காடுகளில் கிடைக்கும் உணவு மட்டுமே அவர்கள் பசியாற்றுகிறது. அகதிகள் தங்கி இருக்கும் பகுதிகளை ஐ.நா பிரதிநிதிகள் சென்று பார்த்தனர். அவர்கள் இந்த அகதிகளுக்கு உடனடியாக உணவு சப்ளை

கடலூரில் மீண்டும் புயலா? அச்சத்தில் மாவட்ட மக்கள்

கடலூர், : கடலூர் மாவட்டத்தை மீண்டும் புயல் தாக்கம் தானேவை போன்று பலமாக இருக்கும் என மக்கள் அச்சத்தில் ஆடிப்போயுள்ளனர். தொடர் மழையால் அரசின் இலவச கால்நடைகள் பலியாகி வருவது வேறு விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் தமிழகத்தின் வடிகாலாக இருப்பது பூகோள ரீதியில் அமைந்துள்ள அதன் நிலப்பரப்பு காரணமாக உள்ளது. இதனால் ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சேலம், தருமபுரி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் மழைநீர் வடிகால் கடலூர் மாவட்டத்தின் வழியாக பெருக்கெடுத்து வங்க கடலில் கலக்கிறது. இதில் வெள்ள பாதிப்புகள் மாவட்டத்தில் பெருமளவு உருவெடுக்க காரணமாக அமைந்துள்ளது.

 புயல் பாதிப்புகளும் மாவட்டத்தின் மீது படையெடுப்பது தொடர்கதையாகியுள்ளது. சுனாமி, தானே போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்கங்கள் மாவட்டத்தை உருக்குலைய வைத்துள்ளது. இதனால் இயல்பாகவே பகுதி மக்கள் பருவ மழையின் தாக்கத்தில் ஆட்டம் காண்பது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழையின் தாக்கம் கடந்த 19ம்தேதி துவங்கிய நிலையில் தொடர்ந்து 3 நாட்கள் கொட்டிய மழையிலேயே அனைத்து பிரதான நீர் தேக்கங்களும் நிரம்பியுள்ளது. இதையடுத்து தற்போது மீண்டும் உருவெடுத்துள்ள புயல் காரணமாக மாவட்டத்தை புரட்டிபோடுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்து போயுள்ளனர். குடியிருப்பு பகுதியில் வடியாத மழை நீர், வெள்ளம் சூழ்ந்த விளை நிலங்கள் என முதல் கட்டத்திலேயே மிரட்டலுடன் துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் இம்முறை ஏற்பட்டுள்ள புயலால் அதன் தாக்கம் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தும் என வானிலை ஆய்வு மையம் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இருக்க உத்தரவிட்டுள்ளது.

 தானே பாதிப்பு கடந்த ஆண்டு மாவட்ட மக்களை தவிக்கவிட்டுள்ள நிலையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள புயல் சின்னம் மீணடும் ஒரு தானே பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்ற செய்தி காட்டுத் தீபோல் மாவட்டத்தில் ஊடுருவியுள்ளது. அதற்கு ஏற்ப புயல் சின்னத்தின் அறிகுறியாக சூறாவளி காற்றுடன் கொட்டிய மழை மக்களை அச்சத்தில் ஆட்டம் போடவைத்துள்ளது. தற்பொழுது உருவாகியுள்ள புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடுதல் மழை பெய்யும் எனவும் துறைமுக பகுதியில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என வானிலை

அக்டோபர் 29, 2012

புயல் எச்சரிக்கை!

சென்னை அருகே உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தீவிரமடைந்து புயலாக மாறிவருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சென்னைக்கு அருகே 730 கிலோ மீட்டர் தொலைவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை இருந்து வந்தது. இது இன்று நகர்ந்து சென்னைக்கு அருகே 500 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதுடன் தீவிரமடைந்து புயலாக மாறிவருகிறது. இது நாளை மறுநாள் நாகை மற்றும் நெல்லூர் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

 இதனால் ராமேஸ்வரம், நாகை, கடலூர், சென்னை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. கடலோர மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. கடல் சீற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. தொடர் மழையும் பெய்து வருகிறது. காரைக்கால், புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இங்கும் புயல் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. கடலோர மாவட்டங்கள் பலவற்றிலும் இன்று பள்ளிகளுக்கு ஏற்கெனவே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 யாஅல்லாஹ்! எந்த பாதிப்பும் வராமல் நீயே காப்பற்று!!

பலத்த மழை எச்சரிக்கை கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

கடலூர், அக்.29-  பலத்த மழை எச்சரிக்கையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று(திங்கட்கிழமை) விடுமுறை விடப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை  வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரையில் பலத்த மழை பெய்தது. அதன் பின்னர் நேற்று முன்தினம் வரையில் வெயில் அடித்தது. மீண்டும் மழை இந்த நிலையில் வங்க கடல் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலூரில் நேற்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியது.

 காலை முதல் மாலை வரையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் மழைநீர் வடிய தொடங்கிய இடங்களில் மீண்டும் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மஞ்சக்குப்பம் மைதானம், அண்ணா விளையாட்டு மைதானம், ஆயுதப்படை மைதானம் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி குளம்போல காட்சி அளித்தது.  பள்ளிகளுக்கு விடுமுறை இதற்கிடையே தமிழகம், புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) பலத்த காற்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ அறிவித்துள்ளார்.

அமெரிக்காவை தாக்கிய ‘சாண்டி’ – 6 கோடி பேர் பாதிப்பு

அமெரிக்காவையொட்டியுள்ள கரிபியன் கடல் பகுதியில் ஹரிகேன் சாண்டி புயல் உருவானது. இதனால் கரிபியன் கடல் பகுதியில் உள்ள ஜமைக்கா, கியூபா நாடுகளில் சூறாவளியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த புயலுக்கு இந்த இரு நாடுகளிலும் 60 பேர் பலியானார்கள். சாண்டி புயலானது மேலும் தீவிரம் அடைந்து அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதி நோக்கி நகர்ந்து வந்தது.

அமெரிக்காவின் புளோரிடா, மேரிலாண்ட், மாகாணங்களை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த மாகாணங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புயல் காரணமாக அமெரிக்காவின் 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் 

அக்டோபர் 28, 2012

இந்தியா முழுவதும் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

புதுடெல்லி:ஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் நாடு முழுவதும் நேற்று (27.10.12) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முஸ்லிம்கள் ஈத்காஹ் திடல்களிலும், மஸ்ஜித்களிலும் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றினர். பின்னர் பரஸ்பரம் ஈத் வாழ்த்துகளையும், மகிழ்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டனர்.

அறுசுவை உணவுகள் உண்டு மகிழ்ந்தனர். தன் அருமை மகனையே இறைவனின் கட்டளைக்கேற்ப அறுத்துப் பலியிட முன்வந்த இப்றாஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூரும் விதமாக ஆடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும் அறுத்துப் பலியிட்டனர். பக்ரீத் என்றழைக்கப்படும் இந்தத் திருநாளில் அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் முஸ்லிம்கள் பிரார்த்தனை புரிந்தனர். பழைய டெல்லியில் பாரம்பரியமிக்க உணவுகளான கபாப், பிரியாணி, நிஹாரி, கொர்மா ஆகிய உணவுகளுடன் பெருநாள் களை கட்டியது. அங்குள்ள தெருக்களிலும், சந்துகளிலும் இவை தயாரிக்கப்பட்ட மணம் எங்கும் பரவி நின்றது.

 துப்ரி மாவட்டம், அஸ்ஸாம்: கடந்த புதன்கிழமை இந்த மாவட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலினால் பதட்டம் நிலவியது. இதனால் பலத்த பாதுகாப்புக்கிடையில் பெருநாள் தொழுகைகளை முஸ்லிம்கள் நிறைவேற்றினர். லக்னோ, உ.பி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ஃபைஸாபாத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையில் ஈத் தொழுகைகள் நிறைவேற்றப்பட்டன. ஜம்மு கஷ்மீரில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பெருநாள் தினம் அமைதியாகக் கழிந்தது. தமிழகத்தில்

அக்டோபர் 22, 2012

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது!

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கடந்த 3 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.வெள்ளிக்கிழமை இரவு முதல் காலை வரை பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் நீர் சூழ்ந்தது. இதனால் சிதம்பரம் நகரில் இந்திரா நகர், நேருநகர், மகாவீர்நகர், சாந்திநகர், ராஜாநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நகர்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள பாலமான் ஆற்றில் இருகரைகளைத் தொட்டு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மழை விவரம்: சிதம்பரம்- 60 மி.மீ., காட்டுமன்னார்கோவில்- 33.50 மி.மீ., லால்பேட்டை- 40 மி.மீ., புவனகிரி- 47 மி.மீ., சேத்தியாத்தோப்பு 36 மி.மீ., ஸ்ரீமுஷ்ணம்- 16 மி.மீ. வீராணம் ஏரி 40 அடியை தொட்டது: கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சனிக்கிழமை ஏரியின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது. கல்லணையிலிருந்து கீழணைக்கு விநாடிக்கு 2500 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கீழணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சனிக்கிழமை 1100 கனஅடி நீர் வந்துக் கொண்டிருக்கிறது. ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் திங்கள்கிழமை ஏரி நிரம்பிவிடும். அதன் பின்னர் சென்னை குடிநீர் வாரியத்துக்கு நீர்

அக்டோபர் 18, 2012

மியன்மார் அரசின் அராஜகம் – பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதற்கு தடை

மியன்மார் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உதவுவதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓ. ஐ. சி) அங்கு திறக்கவிருந்த அலுவலகத்திற்கு மியன்மார் அரசு தடை விதித்துள்ளது. மக்களின் விருப்பத்திற்கு அமைய ஓ. ஐ. சி. அலுவலகம் அமைப்பது தடுக்கப்படுவதாக மியன்மார் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் நாடுகளின் மிகப் பெரிய அமைப்பான ஓ. ஐ. சி. அலுவலகம் திறப்பதற்கு எதிராக ஆயிரக்கணக்கான பெளத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

 மேற்கு மியன்மாரில் ரகின் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் ரகின் இன பெளத்தர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரத்தைத் தொடர்ந்து இங்கு பதற்றம் நீடித்து வருகிறது. அங்கு தொடர்ந்து பலர் போதிய நிவாரண உதவிகள் இன்றி தற்காலிக முகாம்களிலேயே தங்கியுள்ளனர். மியன்மாரின் வர்த்தக நகரான

குர்பானியின் சிறப்பும், அதன் சட்டங்களும்!


 நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது 'என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு' என்று கேட்டார். 'என் தந்தையே! உங்களுக்குக் கட்டளை யிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்' என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப் படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்' என்று அவரை அழைத்துக் கூறினோம். இதுதான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்' (அல்குர்ஆன் 37:100-111)

இறை நம்பிக்கை என்பது நற்பண்புகளாலும், தியாகங்களாலும் நிறைந்திருக்க வேண்டும். பலவீனமான எண்ணங்களாலும், வெறுக்கத்தக்க காரியங்களாலும் சூழ்ந்திருக்கக்கூடாது. இந்த நற்பண்புகளையும், தியாகங்களையும் உலகத்தைப் பார்த்து நாம் எடுத்துக்கொள்ளுதல் கூடாது. 


இலக்கியங்களும், சினிமாக்களும் எதை தியாகமென்று புகட்டுகிறதோ அவைகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. காரணம் தற்கொலை செய்து கொள்வதை அவைகள் தியாக காரியமாகப் போதித்து மனித இனத்தை நரகப் படுகுழியில் அதல பாதாளத்திற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

எனவே அவற்றை விட்டுவிட்டு இறைமறை திருக்குர்ஆனிலிருந்தும், இறைத்தூதர்களின் வாழ்விலிருந்தும்தான் நற்பண்புகளையும், தியாக உணர்வுகளையும் நாம் பெற வேண்டும். அவைகள்தான் இம்மை-மறுமை வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பவையாக உள்ளன.

இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாகவும், படிப்பினை பெறும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடு மாறு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். 

குர்பானியின் நோக்கமும், சிறப்பும்:

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக,உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர்வழிகாட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!' (அல்குர்ஆன் 22:37)

குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார்(பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம்(சொந்த) தேவைக்காகவே அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும், அவர் முஸ்லிம்களின் வழிமுறையை பின்பற்றியவர் ஆவார்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி) நூல்: புகாரி 5546

ஒரு வணக்கத்தை அல்லாஹ் நமக்குக் கட்டளையிடுகிறான் என்று சொன்னால் அதை செயல்படுத்துவதன் மூலம் நம்மிடமிருந்து இறைவன் எதை முக்கியமாக எதிர்பார்க்கிறான் என்பதை உணர்ந்து அவற்றுக்கு முன்னுரிமை தரவேண்டும். குர்பானியின் நோக்கத்தை புரியாத பலர் புகழுக்காக அதை செய்வதைப்