Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 17, 2010

ஆல்ப்ஸ் மலையை குடைந்து பிரமாண்ட ரயில் பாதை


செட்ரான் : உலகின் மிக நீண்ட மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலையை கு‌‌டைந்து பிரமாண்டமான கணவாய் ரயில்பாதையினை சுவிட்சர்லாந்து வெற்றிகரமாக நடத்தியது. ஐரோப்பா கண்டத்தின் வடக்கு, தெற்கு பகுதியினை இணைக்கும் ஆல்பஸ் மலைத்தொடரில் அமைந்துள்ளது கோத்ராட் கணவாய் இம்லைப்பகுதியினை குடைந்து 57 கீமீ தூரத்தி்ற்கு (34 மைல்கள்) ரயில் பாதை அமைக்க 9.8 மில்லியன் சுவிட் பிராங்க்கள் ( 10.6 மில்லியன் டாலர்கள் ) திட்டச்செலவு மதிப்பிடப்பட்டு கடந்த 1994-ம் ஆண்டு கட்டுமானப்பணிகள் தொடங்கின.

இந்த ரயில்பாதை சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரினையும், இத்தாலியின் மிலன் நகரினை இணைக்கின்றன. மொத்தம் 10 மீட்டர் விட்டளவு கொண்ட மலையினை குடைந்து பாதை அமைக்க சிசிசி எனும் அதி நவீன இயந்திரம் வரவழைக்கப்பட்டு 50 சுரங்கத்தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டனர். மலையை குடையும் இயந்திரத்தின் பணியை சுவிஸ் டி.வி. ஐரோப்பா கண்டம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பியது. பிறகு கட்டுமானத்தொழிலாளர்கள் இந்த பணி வெற்றிகரமாக முடிந்ததையெடுத்து கைத்தட்டி ஆராவாரம் செய்து ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

இதன் கட்டுமானப்பிரிவின் தலைவர் ஹெனிஸ் ஈகர்பார் தெரிவிக்கையில், ஐரோப்பா கண்டத்தின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணியில் மொத்தம் 2500 பேர் ஈடுபட்டனர். கட்டுமானப்பணியின் போது 8 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு இந்த வெற்றிய‌ை சமர்ப்பிக்கிறோம் என்றார். கோத்ராட் கணவாய் வழியாக ரயில் போக்குவரத்து தொடங்கினால் இரு நகரங்களுக்கிடையே பயண தூரம் இரண்டு மணிநேரம், 60 நிமிடங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் சரக்குபோக்குவரத்திற்கும் இந்த கணவாய் பயன்படுத்தப்பட்டால் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படும்.

எனினும் இந்த 2017-ம் ஆண்டில் தான் ரயில் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படும் என கூறப்படுகிறது. சவிட்சர்லாந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் பீட்டர் பியூகிளிஸ்டர் கூறுகையில், உலகின் மிக நீண்ட கணவாய் ரயில்பாதையை அமைத்த பெருமை சவிட்சர்லாந்து நாட்டிற்கு கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன்பு ஜப்பானில் உள்ள ஷிகான் கணவாய் ரயில்பாதை தான் (53.9 கி.மீ. ) உலகின் நீண்ட ரயில் பாதை என்ற பெருமையினை பெற்றிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...