கடலூர் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில், மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய மளிகைப் பொட்டலம் 25-க்கு வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்:
நியாயவிலைக் கடைகளில் மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொட்டலம், 50-க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இத் திட்டத்தில் வழங்கப்பட்டு வந்த பொட்டலத்தில், மிளகாய்த் தூள், மல்லித்தூள், ஒரு குடும்பத்தின் சராசரித் தேவையைவிட அதிகம் இருப்பதாகவும், ஒரே நேரத்தில் 50க்கு பொருள்கள் வாங்குவதில் சிரமம் இருப்பதாகவும் அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ஏழை எளிய மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் வகையில், 25 விலையில் 10 மளிகைப் பொருகள் அடங்கிய பொட்டலம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 25-க்கு வழங்கப்படும் பொட்டலத்தில் மல்லித்தூள் 50 கிராம், வெந்தயம் 25 கிராம், கடுகு 25 கிராம், உளுத்தம்பருப்பு 25 கிராம், மிளகு 25 கிராம், சீரகம் 50 கிராம், கரம் மசாலா 10 கிராம் ஆகியவை உள்ளன. மேற்கண்ட 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய பொட்டலங்கள், நியாயவிலைக் கடைகளில் தற்போது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, மாதத்துக்கு 2 பொட்டலங்கள் வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...