Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 13, 2010

டிசம்பர் 11 தாம்பரம் ரயில்வே மைதானத்தில் முஸ்லிம் லீக் மாநில மாநாடு


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநாடு டிசம்பர் 11 சனிக்கிழமை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெறுகிறது. இம் மாநாட் டில் தமிழக முதல்வர் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது� வழங்கப் படுகிறது. முதல்வர் கலைஞர் விருதை நேரில் பெற்றுக் கொள்கிறார். இந் நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற் கிறார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மணிவிழா மாநில மாநாடு சென்னை தீவுத் திடலில் 2008 ஜூன் 21 நடைபெற்று புதிய வரலாறு படைத்தது. தற்போது தமிழகம் முழுவ தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பி னர் சேர்ப்பு மற்றும் பிரை மரி அமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

அப் பணிகள் நிறைவ டைந்து அனைத்து மாவட் டங்களிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்று வரு கின்றன. இப் பணிகள் இம் மாதம் 31-ம் தேதிக்குள் நிறைவடைகிறது. அதனைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள் தேர்த லும் நடைபெற உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மணிவிழா மாநில மாநாடு மற்றும் மஹல்லா ஜமாஅத் ஒருங் கிணைப்பு மாநாடுகளில் முன்மொழியப்பட்ட தீர் மானங்களில் பெரும்பா லானவை மத்திய - மாநில அரசுகளால் நிறைவேற்றப் பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

முதல்வர் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது�
அனைத்து சமய மக்க ளுக்காகவும் பாடு படும் முதல்வர் கலைஞர் முஸ்லிம் சமுதாயம் முன் வைத்த பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்றித் தந்துள்ளார். முதல்வர் கலைஞரை ஒட்டுமொத்த சமுதாயமும் பாராட்டும் வகையில் தாய்ச்சபை இந் திய யூனியன் முஸ்லிம் லீகின் சார்பில் நல்லிணக்க நாயகர் விருது� வழங்கி கவுரவிக்க உள்ளது.

தமிழக முதல்வர் கலைஞரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி சந்தித்த போது இந்த விருதை நேரில் பெற்றுக் கொள்ள முதல்வர் கலைஞர் ஒப்புதல் தெரி வித்தார்.

இதற்கான விழா வரும் டிசம்பர் 11-ம் தேதி சனிக் கிழமை தாம்பரம் ரயில்வே மைதானத்தில் பிரம் மாண்டமாக நடைபெறு கிறது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தலைமையில் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமது முன்னிலை யில் நடைபெறும் இம் மாநாட்டில் காலை அமர் வாக மஹல்லா ஜமாஅத் சமுதாய ஒற்றுமை கருத்த ரங்கம் நடைபெறுகிறது.

பிற்பகலில் காயிதெ மில்லத் வாழ்ந்த குரோம் பேட்டையிலிருந்து மாபெரும் பிறைக் கொடி பேரணி நடைபெறுகிறது.

துணை முதல்வர் பங்கேற்கிறார்
இதனிடையே, இன்று காலை 10 மணிக்கு சென்னை கோட்டை யிலுள்ள தலைமைச் செய லகத்தில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சந்தித்துப் பேசினார். மாநிலப் பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துர் ரஹ்மான் எம்.பி. மாநிலச் செயலாளர்கள் காயல் மகபூப் கமுதி பஷீர் மாநில இளைஞரணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு டிசம்பர் 11-ல் நடைபெறவிருப்பதை யும் அதில் முதல்வர் கலைஞ ருக்கு நல்லிணக்க நாயகர் விருது� வழங்குவதையும் கேட்டறிந்த துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அந் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புதல் அளித்தார். தலைவர் பேராசிரியர் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.

மாநாட்டுப் பணிகள் தொடங்கின
துணை முதல்வரின் சந்திப்புக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையத்தில் மாநாட்டுப் பணிகள் தொடங்கின. இப்பணியின் ஆரம்ப கட்டமாக இன்று (11-10-2010) மாலை 4.30 மணிக்கு சென்னை திரு வல்லிக்கேணி வாலாஜா மஸ்ஜிதில் அஸர் தொழுகையும், காயிதெ மில்லத் அடக்கத்தலத்தில் ஜியாரத்தும் நடைபெற்று திப்பு சாஹிப் தெருவில் பச்சிளம் பிறைக்கொடி ஏற்றும் விழா நடைபெறு கிறது.

அதனைத் தொடர்ந்து சென்னை மரைக்காயர் லெப்பை தெருவில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸி லில் மாலை 5.30 மணிக்கு மாநாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோச னைக் கூட்டம் நடைபெறு கிறது.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது மற்றும் மாநில நிர்வாகிகள் அணிகளின் அமைப்பா ளர்கள் வட சென்னை, தென்சென்னை, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் செயல் வீரர்கள் பங்கேற் கின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு தமிழக முஸ்லிம் கள் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக் கும் என்பதோடு மஹல்லா ஜமாஅத் சமுதாய ஒற்று மையை மலரச் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...