அக்டோபர் 04, 2010
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி வெள்ளி விழா
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளி விழா வருகிற அக்டோபர் 3,4,5,6 தேதிகளில் கொண்டாடப்படுகிறது என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.
இதுகுறித்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது:
பிற்படுத்தப்பட்ட பகுதியான கடலூர் மாவட்டத்தில் ஏழை-எளிய மக்கள் நலன் கருதி இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமியால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் 1985-ம் ஆண்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது.தற்போது 25-வது ஆண்டு நிறைவு விழாவை வெள்ளி விழாவாக அக்டோபர் 3-6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறோம். அக்டோபர் 3-ம் தேதி சிதம்பரம் தெற்கு வீதியில் உள்ள அண்ணாமலைப் பல்கலை. நகர்ப்புற சுகாதார மையத்தில் சர்க்கரை நோய் மற்றும் ரத்தக் கொதிப்புக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
அக்டோபர் 4-ம் தேதி ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இணைவேந்தர் மற்றும் துணைவேந்தர் பெயர்களில் தலா 1 லட்சம் செலவில் வெள்ளி விழா அறக்கட்டளை தொடங்கப்படுகிறது. அக்டோபர் 5-ம் தேதி காலை 10.30 மணிக்கு பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி வெள்ளிவிழா நடைபெறுகிறது. இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகிறார். துணைவேந்தர் எம்.ராமநாதன் தலைமை வகிக்கிறார். பி.சி.ராய் மற்றும் பத்மபூஷன் விருது பெற்ற மூத்த பேராசிரியர் டாக்டர் என்.ரங்கபாஷ்யம் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
முன்னாள் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வி.சிட்டிபாபு வாழ்த்துரையாற்றுகிறார். ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் என்.சிதம்பரம் வரவேற்கிறார். அக்டோபர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஊழியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என துணைவேந்தர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...