Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 07, 2010

காட்டுமன்னார்கோவில் நகரில் சுற்றித் திரியும் மாடுகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

காட்டுமன்னார்கோவிலைச் சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எந்த தேவைக்கும் காட்டுமன்னார்கோவில் வரவேண்டியுள்ளது. இதனால் நகரம் எப்போதும் பிசியாக காணப்படும். ஏற்கனவே ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக் கும் நகரம் தற்போது சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளை ஒட்டியுள்ள காந்தியார் தெரு, சந்தைதோப்பு, பெரியார் நகர், மாத் தியா தெரு மற்றும் நகர பகுதியில் மாடுகள் வளர்ப்போர் பகல் நேரத் தில் மாடுகளை அவிழ்த்து விட்டு விடுகின்றனர். மேலும் நகரத்தை ஒட் டியுள்ள விளைச்சல் நிலங்கள் மனைகளாக அதிகரித்து வருவதால் மேய்ச் சலுக்கு இடம் கிடைக்காத மாடுகள் நகர பகுதியை நோக்கி வருகின்றன.


நகரத்தின் மையப் பகுதிகளான கடை வீதி, பஸ் நிலையம், உடையார்குடி தெரு, ரெட்டியார்ரோடு, ஓமாம்புலியூர் ரோடு, மார்க்கெட் ஆகிய பகுதிகளில் மாடுகள் திரிவதால் அனைத்து இடங்களிலும் போக் குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ் நிலையத்தில் மாடுகள் வழியில் படுத்து கிடப்பதால் பஸ் வெளியே வரவே சிரமம் ஏற்பட் டுள்ளது. மாடுகளை பேரூராட்சி சார்பில் பிடித்து பட்டியில் அடைத்து உரிமையளர்களிடம் கட்டணம் வசூல் செய்யும் முறை கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. அதே நிலை கொண்டு வந்தால் மட்டுமே நகரில் மாட்டு தொல்லையை கட்டுப்படுத்த முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...