Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 18, 2010

முழு அடைப்பைக் கைவிட ஆட்சியர் வேண்டுகோள்!



கடலூர்:என்.எல்.சி.ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக 19-ம் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் முழுஅடைப்பைக் கைவிட வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக உரிய தீர்வு காண,தமிழக முதல்வர்,நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் இப்பிரச்னைக்குத் தொழிலாளர் அலுவலர் முன்னிலையில்,பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண ஆணையிட்டு உள்ளது.இந்நிலையில் சென்னை மண்டல தொழிலாளர் ஆணையர் சமரச பேச்சுவார்த்தைக்கு நாள் குறித்து உள்ளதால், 19-ம் தேதி கடலூர் மாவட்டத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ள முழுஅடைப்பை, கைவிட வேண்டும்.

அத்துடன் பண்டிகைக் காலம் நெருங்கி இருப்பதால், முழுஅடைப்பினால் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும்,பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, இப்போராட்டத்தைக் கைவிடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.மேலும் இத்தகைய போராட்டங்களால் பொதுமக்களுக்குச் சேதம் ஏற்படுமாயின், அது கடுமையாகக் கருதப்பட்டு, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

சேத்தியாத்தோப்பு : சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் மற்றும் என். எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத் திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக்கட்சி சார்பில் சேத்தியாத்தோப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கக் கோரி சர்க்கரை ஆலை தொழிலாளர்களும், பணி நிரந்தரம் மற் றும் சம்பள உயர்வு கோரி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் சேத்தியாத்தோப்பு பஸ் நிலையம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...