Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 14, 2010

டைனோசர் நாடு இந்தியா


6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பூமியில் டைனோசர்கள் ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. பிரமாண்ட பல்லி இனமான இவைகளைப் பற்றி இப்போதும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் இந்தியாவில் டைனோசர் குட்டியை பிடித்து தின்ற நிலையில் இறந்த அனகோண்டா பாம்பின் புதை படிவங்கள் கிடைத்தன. இதையடுத்து டைனோசர்கள் அதிகமாக வாழ்ந்த நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதன்முதலில் டைனோசரின் தடயங்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்தது. 1828ம் ஆண்டு இங்கிலாந்து ராணுவ அதிகாரி வில்லியம் ஸ்லீமேன் என்பவர் இந்த படிவங்களை கண்டுபிடித்தார். ஜபல்பூரில் கண்டெடுக்கப்பட்ட இது என்னவென்று தெரியாமல் இருந்துவந்தது. 1859ம் ஆண்டு இந்த இனத்துக்கு டைடானோசரஸ் இன்டிகஸ் என்று பெயரிடப்பட்டது. அதன்பிறகு இந்தியாவில் டைனோசரின் புதை படிமங்கள், முட்டை ஓடுகள், நன்கு வளர்ச்சி அடைந்த முட்டைகள், சாணங்கள், காலடித் தடங்கள் என பல்வேறு தடயங்கள் கிடைத்துள்ளன.

கடந்த 1981ம் ஆண்டு குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் ஒரு புதை படிவம் கிடைத்தது. அதை நீண்ட காலமாக ஆராய்ந்தபிறகுதான் டைனோசரை அனகோண்டா வேட்டையாடியதன் புதைபடிவம் என்று உறுதியானது. சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த புவியியல் கணக்கெடுப்பு குழு (ஜி.எஸ்.ஐ.), இங்கு கிடைத்துள்ள புதைபடிவங்களை ஆராய்ந்து அதன் சிறப்பை குறிக்கும் வகையில் இந்தியாவை டைனோசர் நகரமாக அறிவித்தது. இந்தியாவில் சுமார் 30 ஆயிரம் டைனோசரஸ் முட்டைகள் கிடைத்துள்ளன. இவற்றில் 10 ஆயிரம் முட்டைகள் குஜராத், மத்தியபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் கிடைக்கப் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...