குமுதம் ரிப்போர்ட்டர் மற்றும் ஜூனியர் விகடனின் அதிவேக வளர்ச்சியினால் தளர்ந்து போன நக்கீரன் தன்னுடை ரேட்டிங்கை பலப்படுத்தும் விதத்தில் அதனுடைய சமீபத்திய போக்கு மிகவும் மோசமாக போய்விட்டது. வாராவாரம் கடைகளில் மற்றும் சாலைகளில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்களை நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அதனுடைய தன்மை புரியும். முழுக்க முழுக்க ஆபாசம் நிறைந்த செய்திகளை பச்சையாக படம்போட்டு விளம்பரப்படுத்துகிறது. பேனர்களில் ஒட்டப்படும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட செய்திகளினால் மக்கள் ஈர்க்கப்பட்டு அந்த பத்திரிக்கையை வாங்கிப் பார்த்தால் அது முழுக்க முழுக்க இவர்களின் குளிர்சாதன அறையில் எழுதப்பட்ட கற்பனைகளாக இருக்கும். அல்லது இப்படியெல்லாம் அங்கே நடக்கிறது, இங்கே நடக்கிறது என தங்களின் பேனாவிற்குள்ளே காம மையை ஊற்றி முழுக்க முழுக்க ஆபாசக் குப்பைகளை சரோஜாதேவி மஞ்சல் பத்திரிகைக்கு ஈடாக எழுதி வருகிறது நக்கீரன்.
ஜனநாயகத்தின் முக்கியத்தூண்களில் ஒன்றான பத்திரிகை துறையை தன் சுயலாபத்திற்காக முழுக்க முழுக்க ஆபாசம் கலந்து விருந்து படைக்கும் நக்கீரன் சில நேரங்களில் வேறுவிதமான டெக்னிக்குகளையும் கையாளுவது உண்டு. ஏதாவது ஒரு மதத்தை சம்பந்தப்படுத்தி அப்படி இப்படி என எழுதி பரபரப்பை உண்டாக்கி காசு பார்க்கும் வேலையை தொடர்ந்து செய்துவந்தது. உதாரணமாக வீரப்பன் உயிரோடு இருக்கும் போது அவனை சந்திக்க செல்வதாகச் சொல்லிக் கொண்டு அந்த கதையை மெஹா சீரியல் ரேஞ்சுக்கு இழு இழு என இழுத்து கடைசி வரை காசு பார்த்தது. வீரப்பனை பார்க்கப் போகும் வழியில் புலி வந்தது, பூனை வந்தது என புரூடா கதைகளை எழுதி கல்லாக் கட்டியது. ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரத்தில் நிறைய உள்குத்துகள் இருப்பதாக வீரப்பனிடம் ஏடாகூடமாக சிக்கிய நெற்றிக்கண் ஆசிரியர் பாயும்புலி பலவாறு போட்டுக்கொடுக்கவே இனி இங்கே கோபால் வரவே கூடாது என சீறிப்பாந்தான் வீரப்பன். அதன் பிறகு பேராசிரியர் கல்யாணி மற்றும் நெடுமாறன் உள்ளிட்டவர்கள் ராஜ்குமாரை மீட்டு வந்தது வேறு கதை. மீட்கப்பட்டு சென்னைக்கு வந்த ராஜ்குமார் கோபாலை ஏன் சந்திக்காமல் போனார் என்று அன்றைக்கு எழுந்த கேள்விகளுக்கு இன்றைக்கு வரை விடையே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பலான வழக்கில் சிக்கிய ஹைடெக் சாமியார் நித்யாவின் வீடியோக்களின் டிரைலரை தன் தளத்திலே ஓடவிட்டு முழுபடத்தை பார்க்க வேண்டுமானால் உடனே ஆன்லைன் சந்தாதாரர் ஆகுங்கள் என பச்சையாக விளம்பரம் செய்து ஒரே நாளில் 30 லட்சம் ரூபாய்க்கும் மேல் சந்தா தொகையை அள்ளிய ஒரே பத்திரிகை நக்கீரன் தான். நாட்கள் ஆக ஆக நித்யானந்தாவின் விசயம் சாயம் போன கதையாக மாறி வர, உடனே பரபரப்பை உண்டாக்கும் விதத்தில் " நான் தான் நபிகள் நாயகம்" என தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதியது. அதற்கு என்ன ஆதாரம் என கேட்ட போது நித்யானந்தா அப்படித்தான் சில நேரங்களில் கூறிக்கொள்வாராம் என யாரோ சொன்னதாக யாரோ கேட்டதாக தன்னுடைய கற்பனையை மெய்படுத்தப் பார்த்தது நக்கீரன்.
நக்கீரனின் போக்கு மோசமாவதை உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு மாபெரும் முற்றுகையை நடத்தி நக்கிரனுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தது. இதனால் ததஜ மீது கடும் கோபத்தில் இருந்த நக்கீரன், சென்றவாரம் யாரோ சொன்னதாக ஒரு பேட்டியை வெளியிட்டது. அதிலே ததஜவின் நிறுவனத்தலைவர் பி.ஜெயினுலாபிதீன் தான் முன்னர் நடந்த எல்லா கலவரங்களுக்கும் காரணம் எனவும், அவருக்கு மதவெறியைத் தூண்டுவது தான் வேலை என்றும் வழக்கம் போல தன் வேலையைக் காட்டியது நக்கீரன்.

இதற்கு மறுப்பு வெளியிடச் சொல்லி ததஜ கேட்டுக்கொள்ள பழைய காட்டத்தில் எதையுமே கண்டு கொள்ளாத நக்கீரனை கண்டித்து இன்று 04/10/2010 திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் என்றும், சென்னையில் ஜானிஜஹான் கான் சாலையில் அமைந்திருக்கும் நக்கீரன் அலுவலகம் முற்றுகை என்றும் அறிவித்து எல்லா இடங்களிலும் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகை நடந்து முடிந்தது. எந்த இடங்களிலும் போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இன்றி போராட்டங்கள் நடந்தது.
சென்னையில் நக்கீரன் அலுவலகம் முற்றுகை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகே மாலை 4 மணிக்கு துவங்கியது. மாலை 5.30 மணியளவில் அனைவரும் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டு திருவல்லிக்கேணி மாவட்டச்செயலாளர் முகம்மது யூசுப் கண்டன உரையாற்றினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...