அயோத்தியா வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்துள்ள தீர்ப்பு தேசத்தின் மதச்சார்பின்மைக்கும், நீதித்துறையின் கட்டமைப்பின் மீதும் விழுந்த அடி என பிரபல அறிவுஜீவிகளும், வரலாற்றாய்வாளர்களும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ரொமீலா தாப்பர், டாக்டர்.கெ.என்.பணிக்கர், கெ.எம்.ஸ்ரீமாலி, டி.என்.ஜா, அமியகுமார் பக்லி, இஃதிதர் ஆலம்கான், ஸ்ரீராம் மூஸ்வி, ஜெயாமேனன், இர்ஃபான் ஹபீப், சுவீரா ஜெய்ஸ்வால், கேசவன்வெளுத்தாட், டி.மண்டல், ராமகிருஷ்ண சாட்டர்ஜி, அனிருத்ரே, பிரபாத் பட்நாயக், சி.பி.சந்திரசேகர், உல்பத் நாயக், ஜெயந்திகோஷ், மதன் கோபால் சிங், விவான் சுந்தரம், ஆர்.பி.பகுகுணா, ஒ.பி.ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வரலாற்றாய்வாளர்கள் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட பிரபல அறிஞர்களும், அறிவு ஜீவிகளும் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்தான் பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பின் எதிர்விளைவுகளைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமன் பிறந்த இடத்தில்தான் இதுநாள் வரை பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்தது என்ற வாதத்தை நிரூபிக்க ஆதாரங்கள் ஒன்றும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கு நீதிபதிகள் கூறும் ஆதாரம் என்னவெனில், தொன்றுத் தொட்டே இந்த நம்பிக்கை இருந்து வருகிறது என்பதே. புராணக் கதைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை அங்கீகரிப்பதோடு மட்டுமல்ல, இத்தகையதொரு நம்பிக்கையை சொத்துத் தகராறில் பயன்படுத்துவது தவறாகும்.
1949 ஆம் ஆண்டு அத்துமீறி பாப்ரி மஸ்ஜிதிற்குள் சிலை வைக்கப்பட்டதற்கு இத்தீர்ப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. 1992 ஆம் ஆண்டு மஸ்ஜித் இடிக்கப்பட்டதையும் இத்தீர்ப்பு நியாயப்படுத்துகிறது.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்
இது ஒரு கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பு. 1992 இல் அங்கே ஒரு மசூதி இருந்ததா இல்லையா, அது இடிக்கப்பட்டதை உலகமே பார்த்ததா இல்லையா, அந்த இடத்தின் உரிமையாளர் யார்? இதுதான் இந்த உரிமை மூல வழக்கில் எழுப்பப் பட்டிருந்த (TITLE SUIT) கேள்வி. அதற்கு பதில் அளிக்காமல், தான் பதிலிருக்கத் தேவையில்லாத, தனக்கு விசயம் தெரியாத மதம், மற்றும் வரலாறு சார்ந்த கேள்விகளுக்குள் நீதிமன்றம் மூக்கை நுழைத்திருக்கிறது." என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ராஜீவ் தவான்.
ராஜீவ் தவான் கூறியிருப்பதுதான் இந்த தீர்ப்பைப் பற்றி கூறத்தக்க மிக மென்மையான விமர்சனம். "இந்த நாட்டின் இரண்டாம்தர குடிமகன் என்பதை ஒப்புக்கொள். உன்னை உயிர்வாழ அனுமதிக்கிறேன்" என்று குஜராத் படுகொலை நாயகன் மோடி சொன்ன செய்தியைத்தான், "சுக்குமி-ளகுதி-ப்பிலி" என்று வேறு விதமாகப் பதம் பிரித்து சொல்லியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
தொல். திருமாவளவன்
அயோத்தி வழக்கில் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்காமல், 60 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்சும், அத்வானியும், மோடியும், சோவும் என்ன சொல்லி வந்தார்களோ அதையே ஒரு வரி விடாமல் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பாக கூறியிருக்கிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
செய்யத் ஷஹாபுத்தீன்
பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சட்டவிரோதமும், உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என ஆல் இந்தியா மஜ்லிஸே முஷாவரத் தலைவரும் முன்னாள் எம்.பியுமான செய்யத் ஷஹாபுத்தீன் கூறியுள்ளார்.
இதுக் குறித்து அவர் மேலும் கூறியதாவது: "அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஆச்சரியமளிக்கிறது. நேருக்கு நேர் அல்லாத தீர்ப்பு கொள்கைக் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆவணங்களையும், ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு அளிக்காமல், கற்பனைக் கதைகளையும், ஐதீகங்களையும், மூட நம்பிக்கைகளையும் நீதிமன்றம் கருத்தில்கொண்டது
முலாயம் சிங் யாதவ்
பாப்ரி மஸ்ஜிதின் உரிமைத் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக முஸ்லிம்கள் கருதுவதாக சமாஜ்வாடிக் கட்சியின் தலைவரும், உ.பி.மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அறிஞர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன்
இந்த தீர்ப்புத் தொடர்பாக பிரபல இஸ்லாமிய அறிஞர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையை அப்படியே தருகிறோம்.
பாபர் மசூதி வழக்கில் இப்போது வழங்கப்பட்டது போன்ற சட்டத்துக்கும் தர்மத்துக்கும் எதிரான தீர்ப்பு உலக வரலாற்றில் இதற்கு முன் எப்போதும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அலஹாபாத் நீதிமன்றம் நீதியை அப்பட்டமாகக் குழி தோண்டிப் புதைத்து சமாதி கட்டி விட்டது.
முஸ்லிம்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பார்கள் என்றால் அதன் பொருள் அத்தீர்ப்பு சட்டப்படி வழங்கப்பட்ட வேண்டும் என்பது தான்.
இந்தத் தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை.
ராமர் அங்கு தான் பிறந்தார் என்று நீதி மன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு உலகமே காரித் துப்புகிறது. கோடனு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அவன் மன நோயாளியாகத் தான் இருப்பானே தவிர அறிவு நிரம்பிய நீதிபதியாக இருக்க மாட்டான்.
ராமர் அங்கே பிறந்தார் என்பதைச் சட்டப்படி இவர்கள் நிரூபிக்க முடியுமா? அப்படியே அவர் அங்கே பிறந்திருந்தால் அதனால் அந்த இடத்திற்கு அவர் உரிமையாளராகி விடுவாரா? இப்படித் தான் இனி மேல் சிவில் வழக்குகளுக்கு இந்த நாட்டில் தீர்ப்பு அளிக்கப்படுமா?
நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான்
பாபர் மஸ்ஜித் தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து அந்த தீர்ப்பை பற்றி ”இது நீதியற்ற தீர்ப்பு என” உலக அளவில் பல்வேறு விமனர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ் லிப்ரஹான் அவர்கள் இந்த தீர்ப்பு அரசியல் தனமானது நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு அல்ல என்றும் மேலும் இந்த தீர்ப்பை பார்க்கும் போது குரங்குகள் தங்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொள்வதை போன்று உள்ளது என பேட்டியளித்துள்ளார்.
அக்டோபர் 03, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...