பாக்டீரியாக்களால் உண்டாகும் நோயை கட்டுப்படுத்தவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
இங்கிலாந்து உள்பட பல நாடுகளில் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு, அது அவரது உடலுக்கு ஏற்றதா? என்பதை பல்வேறு சோதனைகள் நடத்திய பிறகே கொடுக்கிறார்கள்.
இந்தியாவில் டாக்டர்கள் தடுப்பு மருந்து கொடுக்கும் முன்பு, தனிப்பட்ட நோயாளிகளின் உடல் நிலையை பெரும்பாலும் சோதிப்பதில்லை. பெரும்பாலும் நோயை உடனே குணப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், நோயாளியின் உடல் தாங்கும் சக்தியை விட அதிக ஆற்றல் கொண்ட தடுப்பு மருந்துகளை கொடுத்து விடுவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இத்தகைய தடுப்பு மருந்துகளால் பக்க விளைவுகள் உண்டாகின்றன. தடுப்பு மருந்து ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் வயிற்றுப் போக்கு, அலர்ஜி போன்றவை ஏற்படும். சிலருக்கு மருந்தின் வீரியம் காரணமாக வயிற்று வலி உண்டாகலாம். சிலருக்கு கல்லீரல், மூளையில் கூட பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.
தடுப்பு மருந்துகளால் நோயாளிகளுக்கு இதர பக்க விளைவு பாதிப்புகளை கட்டுப்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாடு அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இனி டாக்டர்கள் மருந்து சீட்டு எழுதி கொடுக்கும் போது இரண்டு மருந்து சீட்டு எழுதி கொடுக்க வேண்டும். அதில் ஒரு மருந்து சீட்டு நோயாளி வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு மருந்து சீட்டை மருந்து, மாத்திரை கொடுக்கும் பார்மசி கடையில் வைத்துக் கொள்ளவார்கள்.
சுமார் ஓராண்டுக்கு அந்த மருந்து சீட்டு பார்மசிகளில் இருப்பு வைக்கப்படும். தடுப்பு மருந்து தவறாக கொடுக்கப்பட்டதாக நோயாளி புகார் செய்யும் பட்சத்தில் பார்மசியில் உள்ள மருந்து சீட்டை தணிக்கை செய்து விசாரிக்க பயன்படுத்துவார்கள்.
70 மருந்துகள் தடுப்பு மருந்து பிரிவில் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை பயன்படுத்தும் போது புதிய விதிமுறையை கடைபிடிக்காவிட்டால் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Source & Thanks : maalaimalar
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...