Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 17, 2010

அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது AIMPLB


லக்நோ: செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர்நீதி மன்றம் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தாருல்உலூம் நத்வதுல் உலமா தீர்மானித்துள்ளது . அக்டோபர் 16,2010 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இத்தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்திற்கு மௌலானா செய்யத் முஹம்மத் ரபி ஹசனி நத்வி அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று மூத்த வழக்கறிஞர்ஒருவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு , "இத்தீர்ப்பு அனைவரும் ஏற்றுக்கொண்ட சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தாமல் வெறும் ஒரு சார்பாக மத நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது " என்று பதிலளித்தார் நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்வதென்றால் முஸ்லிம்களின் நலன், அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஷரியத் சட்டத்தின் அடிப்படையிலேயே பேச்சுவர்த்தை அமைய வேண்டும் மேலும் பல இடங்களில் உள்ளது போல கோவிலுக்கு அருகிலேயே மஸ்ஜித் இருப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்றாலும் இங்கு நாம் அனுமதிக்க முடியாது காரணம் இங்கு கோவிலை இடித்துவிட்டு மஸ்ஜித் கட்டியதாக கூறப்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

முன்னதாக பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், சோஷியல் டெமோக்ரேடிக் பார்டியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தேசிய தலைவர் மவ்லானா உஸ்மான் பேக் ஆகிய தலைவர்கள் உ பி சன்னி வக்ப் போர்டு தலைவரை நேரில் சந்தித்தனர். அப்போது வழக்கில் வாதாடுவதற்கு பிரபலமான வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவர். அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து சமரசத்திற்கு தயாராகவேண்டும் என்ற வாதத்தை ஏற்கமுடியாது என்று தெரிவித்தார் . நம்பிக்கையை மட்டும் ஆதாரமாகக் கொண்டுள்ள இந்த தீர்ப்பில் பேச்சுவார்த்தை நடத்துவது பலன் தராது. இவ்வழக்கில் மாயாவதி தலைமையிலான உ.பி அரசு வக்ஃபோர்டிற்கு பூரண சுதந்திரம் அளித்துள்ளது. வழக்கை முன்னெடுத்துச் செல்ல பொருளாதார ரீதியான குறைபாடுகள் உண்டு என சுஃபர் அஹ்மத் ஃபாரூக்கி தெரிவித்தார். இதற்கு பதிலளித்த தலைவர்கள் கூறுகையில்,பாப்ரி மஸ்ஜித் வழக்கு என்பது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களின் பிரச்சனையாகும். வழக்கை நடத்துவதில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் உடனிருப்பர் என உறுதி வழங்கினர். உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு தேவையான விபரங்களை ஒரு வழக்கறிஞர் குழு தயாராக்கி வருவதாக வழக்கறிஞர் ஸஃபர்யாப் ஜீலானி தெரிவித்தார் மேலும் உச்சநீதிமன்றத்திலிருந்து நீதியை எதிர்பார்க்கிறோம். வழக்கை நடத்துவதற்கு பெருமளவிலான பணம் தேவைப்படும். என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம்கள் தரப்பில் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் துவக்கம் கால மனுதாரரான ஹாஷிம் அன்சாரி கூறியதாவது: பாப்ரி மஸ்ஜித் வழக்கில் சன்னி வக்ஃப் போர்டுடன் நிற்பேன். சமுதாய துரோகத்திற்கு ஒருபோதும் துணை போகமாட்டேன். அயோத்தியில் சில ஹிந்து சன்னியாசிகளுடன் நான் நடத்திய கலந்துரையாடலை ஊடகங்கள் தவறாக பரப்புரைச் செய்தன என்றும் அன்சாரி குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...