பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த மனுக்களை தாக்கல் செய்து சாதகமான தீர்ப்புகளைப்பெற காரணமாகயிருந்த அஸ்லம் பூரே பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான தீர்ப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட இதய அதிர்ச்சி மூலம் மரணமடைந்தார்.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தை 3 ஆக பங்கீடுச் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மன நிம்மதியிழந்து காணப்பட்ட அஸ்லம் பூரே கடந்த சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.
தனது தந்தை, பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார் என அவரது மகன் இம்ரான் பூரே கூறுகிறார். இத்தகையதொரு தீர்ப்பை அல்ல, முஸ்லிம்கள் எதிர்பார்த்தது என அஸ்லம் பூரே கூறியதாக அவரது மகன் தெரிவிக்கிறார். பின்னர் அதிகமாக ஒன்றும் பேசாத அஸ்லம் பூரே, பெரும்பாலான நேரமும் தனது அறையில் தனிமையில் படுத்திருந்தார். அவருடைய நிலைமை வெள்ளிக்கிழமை இரவில் மோசமடைந்தது. பழைய டெல்லியில் தரியாகஞ்ச் என்ற இடத்தில் வசித்துவந்தார் அஸ்லம் பூரே.
பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த 2.7 ஏக்கர் நிலத்தை சுற்றுத்தலமாக்க திட்டமிட்ட அன்றைய உ.பி மாநில முதல்வர் கல்யாண்சிங்கின் தீர்மானத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகி, பாப்ரி மஸ்ஜிதில் பழைய நிலைத்தொடர்வதற்கு சாதகமான தீர்ப்பை பெறக்காரணமாகயிருந்தவர் அஸ்லம் பூரே.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் பூஜை நடத்துவதற்கான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முயற்சியை தடைச்செய்ததும் அஸ்லம் பூரே சமர்ப்பித்த மனுதான் காரணமாகும்.
2002 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த இடத்தில் பூஜை நடத்துவதற்கு எதிராக அஸ்லம் பூரே சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த உச்சநீதிமன்றம், அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை அப்பிரதேசத்தில் எவ்வித வழிபாடுகளும் நடத்தக்கூடாது என தீர்ப்பு வழங்கியிருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
தங்களின் வருகைக்கு நன்றி...