இன்று முதல் 10 நாட்களுக்கு காட்டுமன்னார் குடியில் 144 தடை உத்தரவு! கடலூர் ஆட்சியர் அறிவிப்பு. மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் நடவடிக்கை.கடந்த சில தினங்களாக இரு பிரிவினர்களுக்கிடையே மோதல்கள் இருந்துவருவதை தொடர்ந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 01, 2012
டெங்கு கொசு புழு உற்பத்தி திருமண மண்டபம்,கடைக்கு சீல்!
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி வருவாய், காவல், சுகாதார துறைகள் சார்பில் டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்களை அழித்து வருகின்றனர். மேலும், உரிய பராமரிப்பு இன்றி டெங்கு கொசு புழுக்களை உற்பத்தி செய்து வரும் இடங்களை கண்டறிந்து சீல் வைக்கும் பணியினையும் மேற்கொண்டுள்ளனர்.
வருவாய் துறை அலுவலர்கள் வீடுகள் தோறும் சென்று பார்வையிட்டனர். வருவாய் ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் சென்ற குழுவினர் ஒரு ஹாலோபிளாக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டதில் கொசு உற்பத்தி ஆவதற்கான புழுக்கள் இருந்ததால் சீல் வைத்தனர். இதில் சுகாதார அலுவலர் குழந்தை வேலு, கிராம நிர்வாக அலுவலர் ராஜன்பாபு, ஊராட்சி தலைவர் மஞ்சுளா ஆகியோர் இருந்தனர். முட்டத்தில் வருவாய் துறை அலுவலர் ராமலிங்கம் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பேரூரில் அலுவலர் புகழேந்தி தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசு உற்பத்தியாகும் இடங்களை இனம் கண்டறிந்து வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர். காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி பகுதியில் துணை தாசில்தார் ஸ்டாலின் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பிச்சபிள்ளை, காவல் துறை உதவி ஆய்வாளர் நம்பியார் ஆகியோர் சென்று பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.
இதில் பெரிய குளம் அருகே இருந்த பஞ்சர் கடை, ரெட்டியார் ரோட்டில் செயல்பட்ட டிஎஸ்எம் திருமண மண்டபத்தை கொசு உற்பத்தி ஆகுவதற்கான சூழல் உள்ளதாக கூறி சீல் வைத்தனர். தொடர்ந்து

ஃபலஸ்தீனுக்கு ஐ.நா வில் கண்காணிப்பு உறுப்பினராக அங்கீகாரம்!
ஐ.நா:ஐக்கிய நாடுகளின் பொது அவையில் கண்காணிப்பு உறுப்பினராக ஃபலஸ்தீனுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஃபலஸ்தீன் ஆணையம், தலைவர்கள் மற்றும் தூதரக பிரதிநிதிகளின் வெற்றியாக இந்த அங்கீகாரம் கருதப்படுகிறது.
193 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நா பொது அவையில் 138 நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தன. 9 நாடுகளின் ஃபலஸ்தீனின் கோரிக்கையை எதிர்த்து வாக்களித்தன. பிரான்சு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஃபலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்தபோது அமெரிக்கா எதிர்த்து வாக்களித்தது. பிரிட்டன் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. செக், கனடா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.

லேபிள்கள்:
இஸ்லாமிய உலகம்,
உலகம்
நவம்பர் 28, 2012
சமுதாய தலைவர்கள் என்ற பெயரால் துரோகமிழைக்கும் தலைவர்கள்!
புதுடெல்லி:கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள சிசுவை கூட விட்டு வைக்காமல் வயிற்றைக் கிழித்து தீயிலிட்டு பொசுக்கிய சங்க்பரிவார பயங்கரவாதம் குஜராத்தில் கோர தாண்டவமாடிய நிகழ்வை முஸ்லிம்கள் எக்காலத்திலும் மறந்துவிட மாட்டார்கள். இந்திய வரலாறு காணாத இக்கொடிய இனப்படுகொலைக்கு தலைமை தாங்கியவர்தாம் இந்திய தண்டனைச்
சட்டத்தின் உச்சபட்ச தண்டனையை பெற மிகப்பொருத்தமான குஜராத் முதல்வர் நரேந்திரமோடி.
சமுதாய தலைவர்கள் என்ற பெயரால் வைட் காலர் வேடமிட்டு திரியும் சில முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்கள் சிலர் அவ்வப்போது மோடிக்கு துதி பாடுவது வழக்கம். அவ்வகையில் 10 முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு என கூறப்படும் அமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’ டின் சேர்மனாக இருக்கும் செய்யத் ஷஹாபுத்தீன், குஜராத் இனப்படுகொலைக்கு மோடி மன்னிப்புக் கோரினால் தேர்தலில் அவரை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்போம் என்று எழுதிய கடிதம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 16-ஆம் தேதி ஷஹாபுத்தீன் 10 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பான ‘முஸ்லிம் ஆர்கனைசேசன் ஃபார் எம்பவர்மெண்ட்’டின் சேர்மன் என்ற பெயரில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனால், இந்த கூட்டமைப்பில் உள்ள முக்கிய அமைப்புகள் ஷஹாபுத்தீனின் தன்னிச்சையான கடிதத்திற்கும் அவரது கருத்திற்கும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இத்தகையதொரு விவகாரம் குறித்து தங்களிடம் ஷஹாபுத்தீன் விவாதிக்கவில்லை என்றும், அவருடைய நிலைப்பாட்டை அங்கீகரிக்க இயலாது என்றும் ஜம்மியத் உலமாயே ஹிந்த் தலைவர் மவ்லானா அர்ஷத் மதனி கூறியுள்ளார். மோடி மன்னிப்புக் கோருவதல்ல, நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று ஜமாஅத்தே இஸ்லாமியின் பொலிட்டிக்கல் செயலாளர் முஹம்மது அஹ்மத் கூறியுள்ளார். ஷஹாபுத்தீனின் தலைமையிலான இந்த கூட்டமைப்பு தற்போது இயங்கவில்லை என்றும், அவர் கூறியது அவரது தனிப்பட்ட

நவம்பர் 27, 2012
நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டம்:மத்திய அரசு பரிசீலனை
புதுடெல்லி, நவ 27-2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக எல்லா தரப்பு மக்களிடமும் ஆதரவை பெறும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஏழை மக்கள் வேலை வாய்ப்பை பெறும் உரிமையை நிலைநாட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்ளது. அதுபோல் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஏழை மக்களில் கணிசமானவர்களுக்கு சொந்த நிலம் என்பது இல்லை. அவர்கள் ஒரு ஏக்கரில் 10-ல் ஒரு பங்கு நிலமாவது வாங்கும் வகையில் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிலம் பெறும் உரிமையை சட்டப்பூர்வமாகவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏழைகள் நிலம் பெறுவதை சட்டப்பூர்வமாக உரிமையாக்க வேண்டும் என்பதில் தேசிய ஆலோசனைக் குழு தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா தீவிரமாக உள்ளார். ஏழைகள் நிலம் வாங்குவதற்கு வசதியாக தலா ரூ.20 ஆயிரம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு தனிக்குழுவை உருவாக்கி உள்ளது. அந்த குழுவில் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், கிஷோர் சந்திரதேவ் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். பிறகு மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-
உலகில் எந்த ஒரு நாடும் ஏழைகளுக்கு இப்படி நிலம் கொடுக்கும் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. நிலம்பெறும் உரிமையை இதுவரை எந்த நாடும் சட்டமாக்கவும் இல்லை. இந்தியாவில் நிலம் தொடர்பான அனைத்து உரிமைகளும் மாநில அரசுகளிடமே

மின்வெட்டு:தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரம் மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது என்பது குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை அசோக் நகரைச் சேர்ந்த குடிமக்கள் பாதுகாவலர்கள் அமைப்பின் தலைவர் வி. ரவிச்சந்திரன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை மாநகரிலும் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அடிக்கடி மின்சார விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்திலும்கூட மின் அழுத்தம் குறைவாகவே உள்ளது.
இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் வசிக்கும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, இப்பிரச்னையில் நீதிமன்றம் உடனடியாகத் தலையிட வேண்டும். மாநிலத்தில் தேவையான அளவில் துணை மின் நிலையங்களை தொடங்குவது உள்பட மின்சார விநியோகத்துக்கான வலிமையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் ரவிச்சந்திரன் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மாநிலத்தின் பல மாவட்டங்களில் தினமும் சில மணி நேரத்துக்கு மட்டுமே மின்சாரம் வழங்கப்படுவதாகவும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினமும் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் எங்களது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் எத்தனை மணி நேரத்துக்கு மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்பது பற்றிய விரிவான அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரங்கள்

நவம்பர் 25, 2012
ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை!
ஏதேனும் ஒருபட்டப் படிப்பு முடித்துவிட்டு பாதுகாப்புப் படையில் பணிபுரிய வேண்டும்என்ற ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளித் தருகிறது இந்தியராணுவம். டெக்னிக்கல் பிரிவு, ஆர்மி எஜுக்கேஷன், மிலிட்டரி ஃபார்ம் என்ற மூன்று பிரிவுகளின்கீழ் தகுதியுடைய பட்டதாரிகள் பணியமர்த்தப்படுகிறார்கள்.
டெக்னிக்கல் பிரிவின்கீழ் சிவில் (மைனிங்மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் உள்பட), எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், புரடக்ஷன்(மேனுபேக்ச்சரிங் உள்பட), எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிக்கேஷன், ஆர்க்கிடெக்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங், பயோ டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங்போன்ற பிரிவுகளின்கீழ் உள்ள காலிப்பணியிடங்களில் பணியாற்ற, அந்தத்துறைகளில் பி.இ., பி.டெக்., பட்டம் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்கவேண்டும்.
இறுதியாண்டு பொறியியல் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களும்விண்ணப்பிக்கலாம். மிலிட்டரி டிரெய்னிங் டைரக்டரேட்டின்கீழ்செயல்படும் ஆண்களுக்கான ஆர்மி எஜுக்கேஷன் கார்ப்ஸில் பணிபுரிய ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, இசை, புவியியல், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களில்எம்.ஏ., படித்தவர்களும் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களில் முதுநிலைபட்டப் படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கவிரும்புபவர்கள் 23 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும். ராணுவ வீரர்களுக்கு விநியோகிக்கப்படும்பால், காய்கறி, அரிசி போன்றவை ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும்ராணுவ தோட்டம் மற்றும் அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளில் இருந்தேபெறப்படுகிறது. ராணுவத்தின் மிக முக்கிய அங்கமாகச் செயல்படும் இந்த ஆர்மிஃபார்ம் பிரிவில் பணியாற்ற டெரி மற்றும் வேளாண்மையில் பட்டப் படிப்புபடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20 வயதிலிருந்து 27 வயது வரை இருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்குஉளவியல் திறனறித் தேர்வு (சைக்காலஜிக்கல் ஆப்டிட்யூட் டெஸ்ட்) அலகாபாத், போபால் மற்றும் பெங்களூரு மையங்களில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்துமருத்துவப் பரிசோதனை இருக்கும். இந்தப் பணிகளில் சேர விண்ணப்பிக்கவிரும்புபவர்கள், தங்களது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமே அனுப்ப வேண்டும்.ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பத்தை இரண்டு பிரிண்ட் அவுட்

இந்திய வரலாற்றில் முதன்முறையாக உளவுதுறை தலைவராக ஒரு முஸ்லிம் நியமனம்!
மத்திய உளவுத்துறையின் தலைவராக நெஹ்சல் சந்து பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் 31-ந்தேதியடன் முடிவடைகிறது. இதனையொட்டி உளவுத்துறைக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் மத்திய உள்துறை அமைச்சகம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக பதவி மூப்பு பட்டியலில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகள் பற்றிய அனுபவ விபரங்களை உள்துறை ஆய்வு செய்தது.
இதன் அடிப்படையில் 1977-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஆசிப் இப்ராகீம் பெயரை உளவுத்துறை தலைவர் பதவிக்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.
பதவி மூப்பு வரிசையில் 1976-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த ஆர்.என். குப்தா, ஒருங்கிணைந்த உளவுப் பிரிவு கமிட்டிக்கும், ராஜ்கோபால் தேசிய போலீஸ் கழக இயக்குனராகவும் பதவி உயர்வுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், மூன்றாம் இடத்தில் உள்ள ஆசிப் இப்ராகீம் உளவுப்பிரிவின் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரது பெயர் பிரதமர் தலைமையிலான பணி நியமன கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1977 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பேட்ச்சைச் சேர்ந்த ஆசிப் இப்ராகீம் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக உளவுப்பிரிவில் உள்ள பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதனால் இவரை உளவுப்பிரிவின் புதிய தலைவராக

நவம்பர் 24, 2012
தொடர் மின்வெட்டால் இண்டர்நெட் மையங்கள் முடங்கியது
கடலூர், :கடலூர் மாவட்டத்தில் மின்வெட்டு காரணமாக நவீன உலகின் வழிகாட்டியாக உள்ள இண்டர்நெட் மையங்கள் நொந்து போயுள்ளது. கட்டணமும் உயர்வு கண்டுள்ளது.
உலகின் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பு வளர்ச்சியில் கம்ப்யூட்டர் பயன்பாடு அனைத்து துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து இண்டர்நெட் வசதி இன்றியமையா தேவையாக மாறியுள்ளது.
கல்வி, வர்த்தகம், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து சேவையும் இண்டர்நெட் வசதி மூலம் உலகே நம் கையில் இருக்கும் வகையில் கம்ப்யூட்டர் உலகம் மாற்றியுள்ளது. மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மின்வெட்டு இந்த தரப்பையும் நொந்து போக செய்துள்ளது.
கம்ப்யூட்டர், லேப்-டாப் வைத்திருப்பவர்கள் ஏராளமானோர் இண்டர்நெட் வசதி வைத்துள்ளனர். இவை தவிர நகர்புறங்களில் இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 300 இண்டர்நெட் மையங்கள் செயல்படுகிறது. பெரும்பாலும் பகல் நேரங்களில் இயக்கத்தில் இருக்கும் இந்த மையங்களில் மின்வெட்டின் காரணமாக செயல்பாடு முடங்கியுள்ளது. 70 சதவீத மையங்களில் மின்சாரம் இல்லாத போது அறிவிப்பில்லாத விடுமுறையாக மூடப்படுகிறது. வீட்டிலும் மின்வெட்டால் இண்டர் நெட் சேவையை பெறமுடியாமல் நெட் சென்டர்களுக்கு படையெடுக்கும் மாணவர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் எண்ணிக்கை கூடி வருகிறது. இதையடுத்து ஜெனரேட்டர் மூலம் சில இண்டர்நெட் மையங்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப வாடிக்கையாளர்களிடம் பயன்பாட்டிற்கான கட்டணம் கடலூரில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ல் இருந்து தற்போது ரூ.30 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து கடலூரில் உள்ள இண்டர்நெட் மைய உரிமையாளர் குமாரிடம் கேட்ட போது, காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நெட் சென்டர் இயங்கும். இந்த நேரத்தில் தற்போது 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. இதனால் ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு நாள்தோறும் சுமார் ரூ.500 வரை கூடுதல் செலவாகிறது. இதனை

பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக நாணயம்: மத்திய அரசு தகவல்
புதுடில்லி: நாட்டில், புழக்கத்தில் உள்ள, 10 ரூபாய் நோட்டுகளை, படிப்படியாக நாணயங்களாக மாற்ற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது என, மத்திய நிதி துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா பார்லிமென்டில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: பத்து ரூபாய் தாளின் சராசரி ஆயுள் காலம், 9 - 10 மாதங்கள் என்ற அளவிற்கே உள்ளது. மேலும், ஒரு தாளை அச்சிட சராசரியாக 96 காசு செலவாகிறது.குறுகிய காலத்தில் அழிந்து விடக் கூடிய, 10 ரூபாய் தாளை தொடர்ந்து அச்சிடுவதால் செலவு கூடுகிறது.
இச்செலவினத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், நீண்ட கால அடிப்படையில், 10 ரூபாய் தாளுக்கு பதிலாக, நாணயத்தை வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில்,கடந்த 2009ம் ஆண்டு 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, 10 ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிப்பதற்கான செலவு 6.10 ரூபாயாக உள்ளது. உள் நாட்டு கரன்சிகளில், குறிப்பாக சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் ஆயுள் காலத்தை நீட்டிப்பதற்கான, வழிவகைகள் ஆராயப்பட்டு வருகின்றன.இதன்படி, சோதனை அடிப்படையில், தலா, 10 ரூபாய் மதிப்பு கொண்ட 10 லட்சம் பிளாஸ்டிக் கரன்சிகளை வெளியிடுவதென்று மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தீர்மானித்துள்ளன. இவ்வாறு நமோ நாராயண் மீனா தெரிவித்தார். மற்றொரு கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதில் அளிக்கையில், "கரன்சிகளை அச்சிடுவதில் இந்தியா தன்னிறைவு கண்டுள்ளது. நாட்டின் மொத்த தேவையான 1,760 கோடி கரன்சிகள், நான்கு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன' என்று தெரிவித்தார்.
நாட்டில் கள்ளநோட்டு புழக்கம் குறித்து, உறுதிப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஏதுமில்லை. எனினும், கள்ளநோட்டை புழக்கத்தில் விடும் கொடிய செயல்பாடுகளை வேரறுக்க, மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும்

நவம்பர் 22, 2012
அஜ்மல் கஸாபுக்கு தூக்கு: காங்கிரஸ் அரசின் அரசியல் ஆதாயம்!
மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட அஜ்மல் கஸாபை அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் காங். தலைமையிலான ஐ.மு அரசின் அரசியல் ஆதாயங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
நவம்பர்26-ஆம் தேதி மும்பை தாக்குதல் நிகழ்ந்து 4 ஆண்டுகள் நிறைவுறும் வேளைக்கு முன்பாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் துவங்கவிருக்கும் வேளையில், கஸாபிற்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் காங். தலைமையிலான ஐ.மு அரசு தாமதம் செய்கிறது என்ற குற்றச்சாட்டை பா.ஜ.க எழுப்பவிருந்தது.
மேலும் எஃப்.டி.ஐ(சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு) உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவும் கசாபை அவசரமாக தூக்கிலிட காங். அரசு திட்டமிட்டிருக்கலாம். பொருளாதா சீர்திருத்தங்களின் பெயரால் சாதாரண மக்களிடையே நம்பிக்கையை இழந்து நிற்கும் காங். தலைமையிலான ஐ.மு அரசுக்கு வரவிருக்கும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும், பாராளுமன்ற தேர்தலும் கடுமையான சவால்களாக உள்ளன. குஜராத் மாநில தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் சூழலில் கஸாபை தூக்கிலிட்டது ஆதரவான சூழலை உருவாக்கும் என்று காங்கிரஸ் அரசு கணித்தது. கஸாபைத் தொடர்ந்து அஃப்ஸல் குருவை தூக்கிலிடும் விவகாரத்திலும் தீர்மானம் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியிருந்தது தேர்தலை எதிர்நோக்கியே ஆகும். முன்பு எப்பொழுதும் இல்லாத நிகழ்வாக குடியரசு தலைவர் 20 தினங்களுக்குள் அஜ்மல் கஸாபின் மரணத்தண்டனையை குறைக்கக் கோரும் கருணை மனுவை நிராகரித்து தீர்மானம் எடுத்துள்ளார்.
மேலும் அரசும் குடியரசு தலைவர் கருணை மனுவை நிராகரித்தவுடன் தூக்குத் தண்டனையை ரகசியமாகவும், அவசர அவசரமாகவும் நிறைவேற்றியுள்ளது. கஸாப் உள்ளிட்டவர்களின் 11 கருணை மனுக்கள் குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக காத்திருந்தன. ஆனால், அதில் கடைசியில் அளிக்கப்பட்ட கருணை மனு மீது குடியரசு தலைவர் முடிவு எடுத்துள்ளார். அக்டோபர் 16-ஆம் தேதி கஸாபின் கருணை மனு குடியரசு தலைவரின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் கருணை மனுக்களை

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)