Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 18, 2019

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

தொடர் -11

கொள்ளுமேட்டின் ஆலிம் பெருந்தகைகள்!
1. மர்ஹும் K அப்துல்காதிர் மிஸ்பாஹி அவர்கள்தான் நம் ஊரின் முதல் ஆலிம் பெருந்தகை! நமதூரில் ஜவுளிக்கடை நடத்தி ஊருக்கு பெருமை சேர்த்தார்கள்.சைக்கிள் அறிமுகம் இல்லா அக்காலத்தில் மதராஸ் பட்டனத்தில் இருந்து சைக்கிள் வாங்கிவந்து ஊரில் ஓட்டுவார்.அன்று அது அபூர்வமாக பார்க்கப்பட்டது.
2. மர்ஹும் அப்துல் ரெஜ்ஜாக் தேவ்பந்தி அவர்கள் பெங்களூர் மத்ரஸாயே தேவ்பந் மதரசாவில் மார்க்க கல்வி பயின்றார்கள்! அப்பகுதியில் உருது பேசக்கூடியவர்கள் அதிகம் வாழ்ந்த காரணத்தால், இவர்கள் உருது மற்றும் பார்சி மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்கள். நாங்கள் மதரசாவில் ஓதிய நாட்களில் பார்சி மற்றும் உருது கவிதை பாடல்களைப் பாடி மகிழ்விப்பார்கள்."ஹம்தே ஹுதாயே அக்பர்" என்ற உருது பாடலும் "மன்பந்த சர்முசாரம் ஓ ரஹிமுக்கும் ரஹிமா" என்ற பார்சி பாடலும்
அன்றைய மாணவர்கள் மத்தியில் பிரபலமானவை.
3. மர்ஹும் PM. இனாயத்துல்லாஹ் மிஸ்பாஹி, நீடூர் மிஸ்பாஹூல் ஹுதா மத்ரசாவில் பட்டம் பெற்று இளமைக் காலம் முழுவதும் மலேசியாவில் இமாமாக பணிசெய்து இறுதிகாலத்தில் ஊரில் தங்கி ஓய்வு பெற்றார்கள்.
4 மர்ஹும் SM அஜிஜூல்லாஹ் மன்பஈ அவர்கள் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபி கல்லூரியில் முதல் தர மாணவராக தேர்வு பெற்றவர்கள்!பலகாலம் நமதூர் ஜாமிஆ மஸ்ஜிதில் பணி செய்தார்கள்.சில காலம் மலேசியாவில் கில்லான் பகுதியில் தமிழ் முஸ்லீம்கள் நிறைந்த பகுயில் ஜாமியா மஸ்ஜித் தலைமை இமாமாக சிறப்பாக பணியாற்றி புகழ் பெற்றார்கள்.
4. மர்ஹும் K ஹபீபுல்லாஹ் மன்பஈ அவர்கள்
எல்லோராலும் "ஓதுரப்பிள்ளை" என்று அன்பாக அழைக்கப்பட்டார்கள்.நல்ல குரல் வளம் மிக்கவர்கள்.சிதம்பரம் நவாப் ஜாமியாஆ மஸ்ஜிதில் தலைமை இமாமாக பல காலம் பணி செய்தார்கள்.
முஹம்மது பாரூக் அவர்கள் நமதூரின் முதல் ஹாபிஜ் பட்டம் பெற்றவர் ஆவார்.தற்போது நிறைய சகோதரர்கள் ஆலிம் பெருமக்களாக இருப்பபது மகிழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ். ஏனோ இன்றைய காலத்தில் ஆலிம் படிப்பை படிப்பதற்கு இளைஞர்கள் முன் வருவதில்லை? மதரஸாக்கள் மாணவர்கள் இன்றி இழுத்து மூடும் அளவுக்கு சென்று இருப்பதாக செய்திகள் வருவது கவலை அளிக்கிறது!பாடதிட்டங்களில் மாற்றம் கொண்டுவந்தால் மதரசாக்கள் மருமலர்ச்சி பெரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை!
ஆண்களைப் போல் பெண்களுக்கான மதரசாக்கள் ஊரெங்கும் திறக்கப்பட்டு சில மதரசாக்கள் சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.இன்னும் திறம்பட செயல்பட்டு சிறந்த பெண் ஆலிமாக்கள் உருவாக்கப்படுவது காலத்தின் கட்டாயம்!
என்றும் அன்புடன்
அன்வர்தீன்
10 1 2019

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...